கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல, மாவட்ட கமாண்டர்கள் மாநாடு சென்னையில் ஆகஸ்ட் 24 முதல் 25 வரை நடைபெற்றது. கடலோர காவல்படையின் கிழக்கு மண்டல தலைமைத்தளபதி இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஏ.பி. படோலா தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் ஆந்திரா மற்றும் தமிழகத்தில் அமைந்துள்ள சென்னை, விசாகப்பட்டினம், புதுச்சேரி மற்றும் தூத்துக்குடி ஆகிய நான்கு இந்திய கடலோர காவல்படை மாவட்டங்களைச் சேர்ந்த மாவட்ட கமாண்டர்கள் கலந்து கொண்டனர்.மேலும்,
மாவட்டத் தளபதிகள் மாநாடு என்பது இந்திய கடலோரக் காவல்படை மண்டலத்தின் ஆண்டுதோறும் இந்திய கடலோரக் காவல்படை குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்படும் ஒரு உயர்மட்ட நிகழ்வாகும்.
கடந்த ஓராண்டில் ஆந்திரா, புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் கடலோர காவல்படை பிரிவுகளின் செயல்பாடுகள், மனிதவள மேம்பாடு, பராமரிப்பு மற்றும் நிர்வாக அம்சங்கள் குறித்து சென்னையில் நடைபெற்ற இரண்டு நாள் மாநாட்டில் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.மேலும்,
கூட்டத்தில் கலந்து கொண்ட மூத்த அதிகாரிகள், தற்போதைய கடல்சார் பாதுகாப்பு சூழல் மற்றும் வளர்ந்து வரும் சவால்களை எதிர்கொள்ள இந்திய கடலோர காவல்படையின் செயல்பாட்டு தயார்நிலை குறித்து ஆய்வு செய்தனர்.தவிர,
இந்திய கடலோர காவல்படை சாசனத்தின்படி கடமைகளை நிறைவேற்றுவதற்காக தற்போதுள்ள நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்த கடலோர காவல்படை பிராந்தியத்தில் (கிழக்கு) செயல்பாட்டு திறன், உள்கட்டமைப்பு மேம்பாடு, பராமரிப்பு திட்டமிடல், பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது என்ற தீர்மானத்துடன் மாநாடு இன்று நிறைவடைந்தது.