சென்னையில் மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம் ? இது ஆட்சியாளர்களா?அரசியல் கட்சியினரா? மக்களா?அல்லது இயற்கை என்ற இறைவன் கொடுத்த தண்டனையா?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சென்னையில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புக்கு யார் முக்கிய காரணம்?  என்பது இதுவரை விடை தெரியாமல் இருந்ததை மீடியாக்களில் வந்த செய்திகள் மூலம் மக்கள் பேச ஆரம்பித்து விட்டனர். இது பற்றிய ஒரு செய்தி ஆய்வு கட்டுரை என்னவென்றால், இங்கே பொதுமக்களும் ,அரசியல் கட்சியினரும் ,ஆட்சியாளர்களும் செய்த தவறுக்கு இறைவன் கொடுத்த தண்டனை .அதாவது இயற்கை என்ற ஒரு மழை வெள்ளம் கொடுத்திருக்கிறது .

இது ஒரு புறம்  சட்டத்தை மதிக்காமல் ஏமாற்றுவது, ஏமாற்றி பட்டா வாங்கிய இடங்கள் எத்தனை, நீர்நிலைகள் காணாமல் போயிருக்கிறது?  இது தற்போது எடுக்க வேண்டிய ஆய்வு?  என்னவென்றால், அதிமுக ஆட்சியில் எவ்வளவு நீர் பிடிப்பு நிலைகள் காணாமல் போனது?  திமுக ஆட்சியில் எவ்வளவு நீர் நிலைகள் காணாமல் போனது?  இந்த புள்ளி விவரங்கள் மக்களுக்கு அவசியம் தெரிந்தாக வேண்டும் .

மேலும், இது பற்றி நீதிமன்றத்திலும் சட்ட வல்லுநர்கள் பொது வழக்கு தொடர வேண்டும். அந்த ஆக்ரமிப்புகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும். அப்போதுதான் இதற்கு ஒரு நிரந்தரமான தீர்வு .மேலும், தற்போது சென்னையில் உள்ள பழைய ஏரிகளில் 90 சதவீதத்திற்கு மேல் காணாமல் போய் இருக்கிறது. அவற்றில் நுங்கம்பாக்கம் ஏரி (தனியார் கம்பெனிகளால்) ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தேனாம்பேட்டை ஏரி, வியாசர்பாடி ஏரி ,முகப்பேர் ஏரி, திருவேற்காடு ஏரி, ஓட்டேரி ஏரி இத்தனை ஏரிகளும் எத்தனை ஏக்கர் பரப்பளவில் காணாமல் போனது என்ற புள்ளி விவரங்கள் மக்களுக்கு அவசியம் தெரிந்தாக வேண்டும். தவிர, ஏரிகளை பாதுகாக்க வேண்டிய பொதுப்பணித்துறை அதிகாரிகள் இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்களா? அவர்களுக்கு ஏரியை பாதுகாக்கும் அதிகாரம் இல்லையா?

 மேலும் 1990 இதுக்கு முன்னால் இந்த ஏரியின் பரப்பளவு என்ன?  தற்போது இந்த ஏரியின் பரப்பளவு என்ன? இதை அனைத்தும் தெரிந்தால் உண்மை மக்களுக்கு 100% இந்த வெள்ள பாதிப்பிற்கான காரணம் நிச்சயம் தெரிந்துவிடும். இது ஒரு புறம்,அடுத்தது மக்கள் செய்கின்ற தவறு ,மக்களிடமே இயற்கை கொண்டு வந்து சேர்த்து விட்டது. அதாவது தவறானவர்களுக்கு வாக்களித்தது, தகுதி இல்லாதவர்களுக்கு வாக்களித்தது, பணத்திற்காக வாக்களித்தது, சட்டத்தையும் மதிக்காமல் ஏமாற்றுவது, நல்ல விஷயங்களை, நல்லவர்களை மதிக்காமல் அலட்சியம் செய்வது, சமூக ஆர்வலர்களை அவமதிப்பது ,அவர்களுக்கு கூட வாக்களிக்காமல் கட்சிக்காரர்களுக்கு வாக்களித்தது, இது எல்லாம் மக்களிடம் தான் வந்து சேர்த்தது இயற்கை .

மேலும் ,திமுக ஆட்சியில் இந்து கோயில்களை இடிப்பது, இந்த தெய்வங்களை அலட்சியமாக பேசி வந்தது, அனைத்திற்கும் கடவுள் கொடுத்த தண்டனை. அது எப்படி கொடுப்பார் யாருக்கும் தெரியாத ஒன்று. இயற்கையின் உருவத்தில் கொடுத்து விட்டார்.இது தவிர, தற்போது இந்த பிரச்சினையை பற்றி பேசுவதற்கு ,தமிழ்நாட்டில் உள்ள எந்த அரசியல் கட்சிக்கும் தகுதி இல்லை. ஏனென்றால், தமிழ்நாட்டை அதிமுகவும் ஆட்சி செய்தது ,திமுகவும் ஆட்சி செய்தது, இருவரும் எதிர்க்கட்சியாக இருந்தபோது இதை ஏன் கேட்கவில்லை? அதேபோல், இன்று பேசக்கூடிய சீமான், பாட்டாளி மக்கள் கட்சி அன்புமணி ராமதாஸ், திருமாவளவன், போன்ற எந்த அரசியல் கட்சிக்கும், இதைப் பற்றி பேச தகுதி இல்லை.

 இவர்கள் ஏன் அப்போது இந்த ஆக்கிரமிப்புகளை பற்றி பேசவில்லை?  இவ்வளவு நாள் எங்கே சென்றிருந்தார்கள் ? மேலும் ,பிஜேபி இப்போது பேசுகிறது .ஆனாலும் இந்த நீர் நிலை ஆக்கிரமிப்புகள் பற்றி ஒருவரும் வாய் திறக்கவில்லை. காரணம், ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கக்கூடிய மக்களின் வாக்கு வேறு கட்சிக்கு மாறிவிடும் என்ற சுயநலம். ஒட்டுமொத்த சுயநலத்தின் உருவமாகத்தான் இந்த மழை வெள்ளம் ,மக்களுக்கு இயற்கை என்ற இறைவன் மூலம்கொடுத்த தண்டனை .

இனிமேல் ஆவது ,இயற்கையின் தண்டனையிலிருந்து எப்படி வாழ்வது? என்பதை அரசியல் கட்சியினரும் ,அனைத்து தரப்பு மக்களும், சிந்தித்து வாழ்ந்தால் சரி .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *