செய்தி மக்கள் தொடர்பு துறையின் பத்திரிகையாளர் அங்கீகாரக் குழு கார்ப்பரேட் நிறுவனங்களில்  இருப்பவர்களுக்கே உறுப்பினராக இருக்க தகுதியா ? என்ன பத்திரிக்கை சமூக நீதி ?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் பத்திரிகைகளில் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகள், சமூக நீதி வேறு எங்கும் இருக்க முடியாது. காரணம் நான் பெரிய பத்திரிக்கை, நான் பெரிய தொலைக்காட்சி, நீ சிறிய பத்திரிகை இப்படி ஒரு அரசியலுக்குள் ,பத்திரிகைகள் உலா வந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கு உண்மை தெரியாது. பத்திரிக்கை என்றால் என்ன என்று தெரியாது.

 எப்படி பெரும்பாலான அரசியல் கட்சியினருக்கு அரசியல் என்றால் என்ன என்று தெரியாதோ, அதேபோல்தான் பத்திரிகைகளிலும், இந்த அடையாள அட்டை இருந்தால், நானும் பத்திரிகையாளர் என்று சொல்லிக் கொள்ளும் நிலைமைக்கு இன்று பத்திரிகை துறை இருந்து வருகிறது. இதற்கு காரணம் என்னவென்றால், பத்திரிக்கை துறையில் முழுக்க, முழுக்க அரசியல், ஆட்சி ,அதிகாரம் இதுதான் பத்திரிகையின் தகுதியை தீர்மானிக்கிறது.

 ஒரு பத்திரிக்கை வளர்ச்சி அடைய வேண்டும் என்றால், அந்த பத்திரிக்கைக்கு அரசாங்கத்தின் சலுகை, விளம்பரங்கள் கிடைக்க வேண்டும். அது ஆட்சியாளர்கள் கையில் வைத்துக் கொண்டு, யாருக்கு கொடுக்கலாம்? யாருக்கு கொடுக்கக் கூடாது? என்று முடிவெடுப்பது அவர்கள் கையில் உள்ளது. அதற்கு எந்தெந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கிறார்களோ ,அவர்களை வைத்துதான் இந்த பத்திரிகையாளர் அங்கீகார குழு அமைக்கப்பட்டிருக்கிறது.

 அதாவது இந்து டைம்ஸ் ஆப் இந்தியா, தினகரன், இந்தியன் எக்ஸ்பிரஸ், புதிய தலைமுறை, நியூஸ்7 தொலைக்காட்சி, பாலிமர் தொலைக்காட்சி, நியூஸ் 18 தொலைக்காட்சி ,இவர்கள் மட்டுமே உறுப்பினர்கள் .இவர்கள் எப்படி சாமானிய பத்திரிகைகள் மற்றும் தகுதியான பத்திரிகைகளுக்கு சலுகை விளம்பரங்கள் கொடுக்க பரிந்துரை செய்வார்கள்?  இது தவிர ,இந்த குழுவில் எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகள் இரண்டு பேர் இதில் சேர்க்கப்பட வேண்டும். மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஆறாண்டுகளாக போராடி வருகிறது. அதற்கு எந்த பலனும் இல்லை. இங்கே வலியவன், எளியவனை வீழ்த்தும் வேலையாக தான் பத்திரிக்கை துறை இருந்து வருகிறது. ஒரு பக்கம் இந்த செய்தியாளர் அடையாள அட்டைக்கு போடப்பட்ட விதிமுறைகளே தவறானது.

 

மத்திய அரசு கொடுக்கின்ற  RNI  க்கு நீங்கள் எப்படி சென்னையில் தான் ஆர்.என்ஐ வாங்க வேண்டும்?. சென்னையில் தான் அதை வெளியீடு செய்ய வேண்டும்? அப்போதுதான் இதற்கு அரசு அடையாள அட்டை வழங்க முடியும் என்பதெல்லாம் ஒரு தவறான அரசாணை செய்தித் துறையில் போடப்பட்டுள்ளது.

 இது எத்தனை மாநிலங்களில், இது போன்ற அரசாணை இருக்கிறது? என்பதை செய்தித்துறை தெரிவிக்குமா? மேலும், பத்திரிகையில் சமூக நீதி  துளி கூட இல்லை. நேற்று கூட நான் இது பற்றி இயக்குனர் மற்றும் செயலாளர்களை சந்திக்கலாம் என்று தலைமைச் செயலகத்திற்கு போன போது சிஎம் மீட்டிங் சென்றிருக்கிறார்கள் என்ற தகவல். மேலும், இந்த வாய்ப்பு அரசு கொடுப்பவர்களுக்கு மட்டும்தான் பத்திரிகைகளை வளர்த்துக் கொள்ள முடியும். அந்த வாய்ப்பும் தகுதியான பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கிடைக்கிறதா? இதுதான் முக்கிய கேள்வி ?அது இல்லையே, சுயநல கூட்டமாக பொதுநலத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தால் அங்கே எப்படி நியாயம் கிடைக்கும்?

 அடுத்தது, இந்த கார்ப்பரேட் நிறுவன பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி பத்திரிக்கை மற்றும் செய்தியாளர்களை எங்களைப் போன்று பத்திரிகை நடத்தி அதில் வெற்றி காண சொல்லுங்கள்? அப்போது அவர்களுடைய திறமை ,தகுதி என்னவென்று தெரிந்துவிடும் .மேலும், பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ கூட்டத்தில் பயணம் செய்யும்போது, சீட்டு கிடைத்தவர்கள் நிலைமை கார்ப்பரேட் பத்திரிகைகளின் நிலைமை . ஆனால், நெரிசலில் நின்று கொண்டு, கால் வலிக்க நின்று கொண்டு, பயணம் செய்பவர்கள் நிலைமை தான் எங்கள் நிலைமை.

 இதைப் பற்றி மாநில அரசும் சரி ,மத்திய அரசும் சரி ஒருவர் கூட இந்த சாமானிய பத்திரிகைகளின் நிலைமை பற்றி புரிந்து கொள்ளவில்லை. அடுத்தது, இவர்களுக்கு யாரெல்லாம் ஒத்து ஓதுகிறார்கள் அவர்களுக்கு மட்டும்தான் சலுகை, விளம்பரங்கள் என்றால், அதற்கு பத்திரிக்கையும்,  தொலைக்காட்சியும் தேவையே இல்லை. இது மக்களுடைய வரிபணம் என்பதை  இன்று வரை மத்திய- மாநில அரசின் செய்தி துறைக்கு தெரியவில்லையா? தவிர, செய்தித் துறையில் உள்ள இந்த குளறு படிகள் எல்லாம்  அதிகாரிகள் சீர் செய்ய அவர்களுக்கு அதிகாரம் இல்லையா? இல்லை இதில் அரசியல் தலையீடு தான் பத்திரிக்கையின் அங்கீகாரமா? எதுவும் தெரியாமல், ஏதோ வந்த வரைக்கும் செய்திகளை போட்டுக் கொண்டு, இதுதான் பத்திரிகை என்று காண்பித்துக் கொண்டிருக்கும் கூட்டங்கள் RNI மற்றும் அடையாள அட்டை இதுதான் பத்திரிக்கை என்றும் ,இதற்கு ஒரு சங்கத்தை அமைத்துக் கொண்டு, இங்கே தண்ணி வரவில்லை, குழாய் உடைந்து விட்டது, பாலம் விரிசல், அவர்கள் இதைத்திறந்தார், அதைப் பார்வையிட்டார் ,இந்த செய்திகளை எல்லாம் போட்டு, நானும் பத்திரிகை என்று சொல்லிக் கொள்வதில் என்ன பெருமை இருக்கிறது?

 இன்று பத்திரிக்கை துறை பல மாற்றங்களை கொண்டிருந்த போதும், 1947 இல் போடப்பட்ட அதே விதிமுறை இன்று வரை இருந்து வருகிறது. இன்று எல்லாம் டிஜிட்டல் மீடியாவாக வளர்ச்சி காணும் போது ,அதற்கான அங்கீகாரம், மாற்றங்கள் எல்லாவற்றையும் தர வேண்டும். இதைவிட மிக முக்கியமானது இந்த பத்திரிகைகளின் தரத்தை நிர்ணயிப்பது தான் மிக, மிக முக்கியமானது. இப்போது தினகரன் பத்திரிக்கை ஒரு கட்சி சார்ந்த பத்திரிக்கை என்பது பொது மக்களுக்கு தெரியும் .அந்த பத்திரிக்கைக்கு அரசு விளம்பரம், சலுகை எல்லாம் கிடைக்கிறது. ஏனென்றால் ஆட்சியாளர்கள் அவர்களாகவே இருக்கிறார்கள். இதை தான் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

 கட்சி வேறு, உங்களுடைய ஆட்சி ,அதிகாரம் பொது மக்களுக்கானது .இங்கே உங்கள் கட்சி என்று நீங்கள் தீர்மானித்தால் ,அது சுயநலம் .பொதுநலமில்லை. பத்திரிகை என்பது சுயநலமா? அல்லது பொதுநலமா? என்பது அரசு அதிகாரிகளும், ஆட்சியாளர்களும் தீர்மானிக்க வேண்டும். மேலும், சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களுக்கு கொடுக்க வேண்டிய முன்னுரிமை தொடர்ந்து மறுக்கப்படுகிறது. இது பத்திரிக்கை துறைக்கு மிகப்பெரிய கேவலமும், அவமானமும் ஆகும் .

 கார்ப்பரேட் பத்திரிகைகள் இந்த சலுகை, விளம்பரங்களை அனுபவிப் பார்ப்பதற்கு  தகுதியா? வியாபார நோக்கம், அரசியல் கட்சி சார்ந்த பத்திரிக்கை, தொலைக்காட்சிகளுக்கு மக்களின் வரிப்பணம் எப்படி ,அரசு கோடிக்கணக்கில் வீணடிக்கிறது? உண்மையை மக்களிடம் சொல்வது தான் பத்திரிகையின் வேலை. மூடி மறைப்பது பத்திரிக்கை வேலை இல்லை. ஆனாலும், இந்த உண்மைகள் கார்ப்பரேட் நிறுவன பத்திரிகைகளுக்கும் தெரியுமா?

 தெரியாதா?

 என்பது தெரியவில்லை .இருப்பினும், மக்கள் அதிகாரம் தொடர்ந்து இச்செய்திகளை வெளியிட்டு வருகிறது. இதற்கு அரசு தீர்வா?அல்லது நீதிமன்றம் தான் தீர்வா? சமூக நீதி கிடைக்க போராடும் சமூக நலன் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்கள் தமிழக அரசுக்கு தெரிவிக்கும் கோரிக்கை .

மேலும், ஆளுநர் இந்த அரசாணை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது எங்களைப் போன்ற சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்களும் இந்த குழுவில் இடம் கிடைக்க போராடுவதை தாங்கள் இதன் மூலம் அறிந்து, இந்த அரசாணை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பது ஆளுநருக்கு தெரிவிக்கும் பத்திரிகைகளின் முக்கிய சமூகநீதி கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *