சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல்துறை, தவறான முறையில் தகவல் உரிமை சட்டத்தை கேட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அவர்களை குற்றவாளியாக்க முயற்சிக்கிறது என்றால், காவல்துறை யார் பக்கம் இருக்கிறது?
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீரப்பட்டி ஊராட்சியில் வரவு செலவு கணக்கு தெரிந்து கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனு அளித்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது சட்டத்தை மதித்து, பாதுகாக்க வேண்டிய காவல்துறை, இன்று சட்டத்தை மீறி செயல்படும் உள்நோக்கம் என்ன? என்பதை ஆய்வு செய்து, நீதிமன்றம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் முக்கிய கோரிக்கை. தவிர, இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்டம் ஏதோ ஒரு கிராமத்தில் நடந்த சம்பவம் என்று, நீதிமன்றம் புறந்தள்ள கூடாது.இதை தாமாக முன்வந்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்.
மேலும், இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மேகநாதன் என்பவர் பல்வேறு துறை சார்ந்த அதிகாரிகளுக்கு புகார் அளித்த பின்னர் ,இந்த சம்பவம் குறித்து இலுப்பூர் ஆர்டிஓ விசாரணை செய்ய, அன்னவாசல் போலீசாருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
அதனால், இப்பிரச்சினை குறித்து நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதுதான், சமூக நன்மைக்காக போராடும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கை.