தகுதியானவர்களை அரசியல் கட்சிகள்  நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளராக தேர்வா?, வாரிசுகள் தேர்வா?, மக்களின் தேர்வு பணமா? ,வேட்பாளர்களின் சமூக நலனா?, மக்கள்  எதற்கு முக்கியத்துவம் கொடுக்கப் போகிறார்கள்? மாற்றத்தை நோக்கி மக்கள் .

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் கட்சிகளின் கூட்டணி என்பது கொள்கைக்காக 50 ஆண்டுகளுக்கு முன் கூட்டணி இருந்தது. இப்போது தேர்தலுக்காக அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக் கொண்டது .கொள்கை என்பது மக்களிடம் பேசுவதற்கு, நடைமுறையில் அதை செயல்படுத்துவதற்கு அல்ல.இந்த நிலைமை மத்திய, மாநில அரசியல் கட்சிகள் இடையே உள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் திமுக, அதிமுக அதனுடைய கொள்கையே பணம் தான் .பணத்தை வைத்து தேர்தலை சந்திக்கிறார்கள் .இலவச அறிவிப்புகளும் ,பொய்யான வாக்குறுதிகளும் ,இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கையாகிவிட்டது .நீட் தேர்வு எந்த அரசியல் கட்சி வந்தாலும் ,அதை தடுக்க முடியாது .எடுக்கவும் முடியாது .ஆனால், அதையும் வாக்குறுதியாக கொடுத்து விட்டார்கள். இப்படி நடைமுறையில் செய்ய முடியாதது ,கொடுத்து விட்டார்கள்.

அதுமட்டுமல்ல, டாஸ்மாக் மதுக்கடைகளை ஒழிப்போம் என்றார்கள் .அதற்கு பதிலாக அதிகப்படுத்தி விட்டார்கள். ஊழலுக்கு எதிராக எங்கள் ஆட்சி என்றார்கள். எடப்பாடி ஊழல் ஆட்சியை விமர்சித்தார்கள். இப்பொழுது ஊழலே ஆட்சியாக உள்ளது .எதுவுமே சொன்னதை செய்யவில்லை. நிர்வாகம் வெளிப்படையாக இல்லை. இந்த நிலையில் திமுக ஆட்சி.

 அதிமுக எம் ஜி ஆர் ,ஜெயலலிதாவோடு அதனுடைய சகாப்தம் முடிந்துவிட்டது. அதன் பிறகு அந்த கட்சிக்கு தலைவர் பதவி என்பது போட்டியாகிவிட்டது.

ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி, மற்றொரு பக்கம் ஓ பன்னீர்செல்வம் ,இது தவிர மறைமுகமாக சசிகலா போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள் .இதுதான் அதிமுக கட்சி நிலைமை .இந்த மூன்று பேர் தலைமையும் மக்களுக்கு ஊழல் அற்ற ஆட்சியை கொடுக்க முடியுமா? அப்படி இவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் போது, நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்கவில்லை .

அதனால், இனி அதிமுக இவர்கள் தலைமையில் ஆட்சி என்பது ஒரு காலம் நடக்காதது. இதற்கு அடுத்த கட்டத்தில் இருக்கும் பிஜேபியால் ,மக்களுக்கு ஊழலற்ற ஆட்சியை கொடுக்க முடியுமா? மோடியை வைத்து பிஜேபியின் அரசியல் இங்கே சமூக நலனுக்காக போராடுபவர்கள் மிக மிக குறைவு ஊடக அரசியலில் முன்னிலை படுத்திக் கொள்வதால்  மக்கள் அவர்களுக்கு வாக்களித்து விடுவார்களா ?

அதற்கு உழைப்பு தேவை .இங்கே தமிழ்நாட்டில் பிஜேபி அதிமுக , திமுக இரண்டு கட்சிகளிலும் ரௌடிகள், அராஜகப் பேர்வழிகள் அதிகமாக இருப்பதால், அவர்களை எதிர்த்து அரசியல் செய்வது சாதாரண காரியம் அல்ல. அதற்கு அண்ணாமலை போன்ற நேர்மையான போலீஸ் அதிகாரி தேவை .

ஏனென்றால் நேர்மையான காவல்துறை அதிகாரியை பார்த்தால் தான் பயம் வரும். அவர்களால்தான் இவர்களை அடக்கி , ஒடுக்க முடியும் .அது காவல்துறையின் பவர் .ஆனால், அரசியல் என்பது வேறு, மக்களோடு மக்களாக, மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?அவர்களுடைய குறை நிறைகள் என்ன? அவர்களுடைய தேவைகள் என்ன? அவர்களுடைய பிரச்சனைகள் என்ன?

இதையெல்லாம் களத்தில் நின்று போராடுபவன் தான் தகுதியான அரசியல்வாதி. இந்த தகுதி எந்தெந்த கட்சிகளில் எத்தனை பேருக்கு இருக்கிறது? என்பதை பட்டியல் போடுங்கள் .எத்தனை பேர் அதில் தேர்வு பெறுவார்கள்? எத்தனை கட்சிகளில் இருப்பார்கள்? இந்தப் பரீட்சையில் ஒவ்வொரு அரசியல் கட்சியிலும், அதாவது ஒன்ற கோடி பேர், 2 கோடி பேர் ,ஒரு கோடி பேர், 50 லட்சம் பேர் ,இப்படி எல்லாம் தொண்டர்களை சொல்லிக் கொள்ளும் இவர்கள், அதில் 100 பேராவது தேர்வார்களா? இதுதான் தமிழ்நாட்டு அரசியல் கட்சிகளின் நிலைமை. கிடைத்ததை சுருட்டி கொண்டு போவது அரசியல்வாதிகள் வேலை இல்லை.  இப்போது தகுதியான அரசியல்வாதிக்கு பஞ்சம்.

 இப்படி இருக்கும் போது, இவர்களை கார்ப்பரேட் பத்திரிகை, தொலைக்காட்சிகள் மக்களிடம் சமூக சேவகர்களாக காட்சிப்படுத்திக் கொண்டு இருக்கிறது. என்றால் அவர்களின் நிலைமை என்ன? அவர்கள் சொல்லும் பொய்களை ,உண்மை போல் திரித்துக் கொள்வது,அதன் மூலம் பல கோடிகளை, லட்சங்களை பார்ப்பது இதுதான் கார்ப்பரேட் .இது தவிர ஊழல்வாதியாக இருந்தாலும் ,அவர்கள் மீது வழக்குகள் இருந்தாலும், அவர்களையும் காசு கொடுத்தால், மக்களிடம் அவர்கள்  நிரபராதி என்று பேசுகின்ற, பேச்சுக்களுக்கு தீர்ப்பை நீதிபதி போல் இவர்களே எழுதி விடுவார்கள். இதில் தான் ,பொது மக்களுக்கு அதாவது அரசியல் தெரியாதவர்கள் ,ஏமாறுகிறார்கள் .

ஆனால் உண்மையை எழுதக்கூடிய பத்திரிகைகள் மிக ,மிகக் குறைவு. அவர்களுக்கு பொதுமக்களின் ஆதரவு கிடைக்கவில்லை. மக்கள் உண்மையை நம்புவதை விட,பொய் அதிகமாக நம்புகிறார்கள். இதில் உண்மையை ஏற்றுக் கொள்பவர்கள்,பொய்யை நம்புவதில்லை. அப்படிப்பட்டவர்கள் சமூகத்தில் குறைவாகத்தான் இருக்கிறார்கள். இந்த மக்கள் இப்படிப்பட்ட பத்திரிகை ,தொலைக்காட்சிகள் அரசியல் கட்சிகள் ,போலி அரசியல்வாதிகளிடம் ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் .இதிலிருந்து மக்கள் உண்மையை புரிந்து,அரசியலை தெரிந்துகொள்ளும் போது தான் ,மக்களுக்கான ஆட்சி, மக்களுக்கான சமூக அரசியல், தேர்வு செய்ய முடியும்.

 ஏனென்றால், எந்த ஒரு அரசியல் கட்சியிலும்,அப்படிப்பட்ட சமூக அரசியல் செய்யக்கூடிய அரசியல்வாதியை அவர்களுக்கு தேர்தலில் சீட்டு கொடுத்து அவர் செய்த சமூகப் பணிகளை மக்களிடம் எடுத்து சொல்லக்கூடிய ஒருவரையும், இதுவரை எந்த தேர்தல் களத்திலும், ஒரு வேட்பாளரை கூட நிறுத்தவில்லை .அந்த வேட்பாளர்களைப் பற்றிய என்னென்ன தகுதி, திறமை? அவர்கள் செய்த சமூக சேவை என்ன ?என்பதை பற்றி மக்களிடம் சொல்லவில்லை .மக்களுக்கு அரசியல் என்றால் என்ன? என்று தெரியாது .பணம் தான் அரசியல் .பணத்தை கொடுத்தால் மக்கள் வாக்களிப்பார்கள்.

 ஆயிரம் என்பதை 5000 கொடுத்தால், 10 ஆயிரம் கொடுத்தால் ,நமக்கு தான் வாக்கு என்பதை நம்பிக்கையுடன் இருப்பவர்கள் .அதிமுக, திமுக போன்ற அரசியல் கட்சிகள் ஏனென்றால், 50 ஆண்டு காலத்தில் இவர்கள் தான் பல கோடீஸ்வரர்களாக மாறியிருக்கிறார்கள். இவர்களுடைய பூர்வீகத்தை எடுத்துப் பாருங்கள். அப்போதாவது உங்களுக்கு இந்த அரசியல் புரியுமா? அப்படி என்றால், இவர்கள் சமூக சேவையாற்ற வரவில்லை. இவர்கள் வந்ததெல்லாம் அரசியலில் கொள்ளை அடிக்க வந்திருக்கிறார்கள் .

அதே நிலைமைதான் ஜாதி கட்சிகளான பாமக ,விடுதலை சிறுத்தைகள், தேமுதிக, மற்றும் மதிமுக இவர்களெல்லாம் அந்தந்த கட்சிகளில் இருக்கக்கூடிய நிர்வாகிகள் ,சமூகப் பணி என்னென்ன செய்திருக்கிறார்கள்? என்பதை அந்தந்த பகுதியில் உள்ள பொதுமக்கள், வாக்காளர்கள் பட்டியல் போட்டுப் பாருங்கள். இவர்களுடைய உண்மையான அரசியல் புரிந்து கொள்வீர்கள். பாமகவை பொறுத்தவரை வன்னியர் சமுதாயத்திற்கு நல்லதை செய்ததை விட ,அதிகமான கேடுகளை செய்தது தான் அதிகம். யாராவது அந்த வன்னியர் சமூகத்தில், இந்த கட்சியின் நிர்வாகிகள் என்னென்ன செய்திருக்கிறார்கள்? என்பதை அந்தந்த பகுதியில் சென்று அந்த சமுதாயத்தை கேட்டால் அவர்களே சொல்லிவிடுவார்கள். நான் எதுவும் சொல்ல வேண்டியதில்லை.

 அதேபோல் தான் தலித் சமுதாய மக்களிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் மேடைகளில், இந்த கார்ப்பரேட் தொலைக்காட்சிகளில் வசனம் பேசிக் கொண்டிருப்பது போல் ,அவர்களுடைய கட்சியின் நிர்வாகிகள் அந்தந்த பகுதி தலித் சமுதாயத்திடம் கேட்டால் அவர்களே சொல்லிவிடுவார்கள் .இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை. இதில் யார் அதிகம் சீட் கொடுக்கிறார்களோ, எந்த கட்சிகளிடம் அதிக ஆதாயம் இருக்கிறதோ, அவர்கள் பின்னால் செல்வார்கள். இவர்களுக்கு வாக்களிக்கும் மக்கள் ,அரசியலைப் பற்றி தெரியாத முட்டாள்களாக இருக்க வேண்டும் .அப்போதுதான் இவர்கள் கொடுக்கும் பணத்திற்காக வாக்களிப்பார்கள்.

 பணம் எதற்காக கொடுக்கிறார்கள்? என்பது கூட தெரியாமல் வாங்கும் வாக்காளர்கள் ,இந்தத் தேர்தலின் முக்கியத்துவம் எதற்காக? என்று கூட தெரியாதவர்கள். இவர்களால் தான் நாட்டில் ஊழல்வாதிகள், ரவுடிகள் அரசியல் களத்தில் தேர்வு பெறுகிறார்கள் . அரசியல் கட்சிகளில் வாரிசுகளுக்கு முக்கியத்துவம் தருகிறார்கள் .இது நாட்டை பலவீனப்படுத்தும் .மக்களின் முன்னேற்றத்திற்கு ஒரு காலம் பயன்படாது.

எனவே,இதையெல்லாம் வருங்கால சமுதாயம் தேர்தல் என்றால் ,நம்முடைய வளர்ச்சிக்காக, நமக்காக பாடுபடக்கூடிய ஒரு பிரதிநிதியை நாம் தேர்வு செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து வாக்களியுங்கள். மேடைகளில் கொள்கைகளையும் ,ஊடகங்களில் அலங்கார பேச்சுக்களையும், பேசுபவர்களை நம்பி வாக்களித்தால், அந்த வாக்கும் வீண். உங்களுக்கு கொடுக்கப்பட்ட உரிமை, பணத்தை கொடுத்து பறித்துக் கொள்வார்கள். இப்போதாவது உண்மையை புரிந்து வாக்களியுங்கள்.

 எத்தனை கட்சிகளில் அதற்கான தகுதியானவர்கள் இருக்கிறார்கள்? அவர்களை அந்தந்த கட்சிகள் அவர்களை தேர்வு செய்யப் போகிறது? மக்களுக்கு அரசியல் தெரியாத வரை மக்களுக்கான ஆட்சி நிர்வாகம் கிடைக்காது. உண்மையை புரிந்து, இந்த சமூகத்தை பாதுகாக்கும் பொறுப்பு ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் உண்டு என்பதை நம்புங்கள்.

 மக்கள் நலனுக்காக மக்கள் அதிகாரம் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *