நாட்டில் ஒவ்வொரு மாநிலத்திலும் மும் மொழிக் கொள்கை கடைபிடித்து அவர்கள் இந்தியா முழுதும் வேலை வாய்ப்பு பெறுகிறார்கள் .இங்கே தமிழ் ,ஆங்கிலம் தவிர ,இந்தி என்ற மொழியை தவிர்க்கிறார்கள் .ஒருவன் மூன்று மொழி மட்டுமல்ல ,எத்தனை மொழி படிக்கிறானோ, அவன் எந்த தொழில் செய்தாலும் ,எந்த வேலைக்கு போனாலும் ,முன்னேறுவான்.
இங்கே தமிழ்நாட்டை விட்டு வேறு எந்த மாநிலத்திலும் போய் வேலை செய்ய முடியாத நிலைமை தான் உள்ளது.
மொழி என்பதை அரசியல் அல்ல, மொழி என்பது வியாபாரமும் அல்ல ,மாணவர்களுடைய திறமை, தகுதி ,அதன் அடிப்படையில் வேலை வாய்ப்பு பெற முடியும் .தொழில் ,வியாபாரம்,செய்ய முடியும் .நார்த் இந்தியன் இங்கே வந்து தமிழை கற்றுக் கொண்டு எவ்வளவோ வேலை செய்கிறார்கள். வியாபாரம் செய்கிறார்கள் .அவர்கள் முன்னேறி இருக்கிறார்கள் .இங்கே நாம் தமிழர் ,தமிழ் என்று பேசி, இந்த அரசியல் கட்சி கூட்டம் நீங்கள் தமிழைத் தவிர, வேறு எதுவும் தெரிந்து கொள்ளக் கூடாது .
இது கருணாநிதி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட அரசியல் இன்று வரை தொடர்கிறது. இந்த மக்கள் ஹிந்தி தெரிந்து கொண்டால், நம்மை அரசியலில் இருந்து ஓரம் கட்டி விடுவார்கள். இதுதான் இவர்களுடைய முக்கிய அரசியல் சூட்சுமம் .அதனால்,ஹிந்தியை 50 ஆண்டு காலமாக எதிர்த்து கொண்டு இருக்கிறார்கள் . மேலும், வருங்கால இளைய தலைமுறைகள் வேலைவாய்ப்பு ,தொழில், வியாபாரம் அனைத்திலும் போட்டியாக இருப்பதால் அவர்கள் முன்மொழி மட்டுமல்ல ,4 மொழி கூட கற்றுக் கொள்ளலாம். திறமை இருந்தால் எங்கு வேண்டும் ஆனாலும், சென்று வேலை வாய்ப்பை பெற முடியும் .
அது மட்டுமின்றி ,இந்தி படித்திருந்தால் எல்லோரும் டெல்லிக்கு படை எடுப்பார்கள். புகார் அனுப்புவார்கள்.மத்திய அரசிடம் தங்களுடைய கோரிக்கையை வெளிப்படுத்துவார்கள் . இவ்வளவு நன்மை இருக்கு .இந்தியை படித்திருந்தால், நாங்கள் எல்லாம் ஹிந்தியை படிக்கவில்லையே என்று வேதனைப்படுகிறோம் . அதனால் இந்தி கற்றுக் கொள்வது மாணவர்களுக்கு அவசியமான ஒன்று .