இன்றைய தமிழக அரசியலில் ஆளும் கட்சியான திமுக பல நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. தேர்தல் நேரத்தில் சொன்ன எந்த வாக்குறுதியும் சரியான முறையில் நிறைவேற்றவில்லை என்பது மக்கள் மத்தியில் ஒரு அதிருப்தி.
தவிர, அண்ணாமலையின் அரசியல் ஆட்டத்தால் கதிகலங்கி போயிருக்கிறது திமுக .இவர்களுடைய ஊழல்கள், பினாமி சொத்துக்கள் அனைத்தையும் புள்ளிவிவரத்துடன் எடுத்து வைத்திருக்கிறார் அண்ணாமலை. அது மட்டுமல்ல,
திமுக அமைச்சர்கள் முதல் எம்எல்ஏக்கள் வரை ,அவர்களுடைய சொத்து கணக்கு விவரங்களை தோண்டி எடுக்க ஆரம்பித்துவிட்டது .மேலும் அது பற்றிய வெப்சைட் மற்றும் ஆப் உருவாக்கி அவர்களுடைய பினாமி சொத்துக்கள் எவ்வளவு என்பதை பொதுமக்கள் அவர்களுக்கு அதற்கான விவரங்களை அதில் அனுப்பலாம் என்ற ஒரு செயல் திட்டத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிட உள்ளது என்பதை செய்தியாளர்கள் கூட்டத்தில் அண்ணாமலை இதை தெரிவித்துள்ளார்.
மேலும் ,அண்ணாமலையை எந்த விதத்தில் ஆவது கவிழ்க்க முடியுமா? அல்லது பின்வாங்க வைக்க முடியுமா? என்ற சூழ்ச்சிகள் எல்லாம் செய்து பார்த்த திமுகவின் முயற்சி தோல்வியில் தான் முடிந்தது .மேலும் அதிமுக எதிர்க்கட்சியாக இருந்தும், அது எதிர்க்கட்சியாக செயல்படவில்லை. மக்கள் மத்தியில் செல்வாக்கு இழந்த கட்சியாகவே இருந்து வருகிறது . மேலும் ,மக்கள் ஓபிஎஸ், இபிஎஸ் னுடைய தலைமையை ஏற்க மாட்டார்கள்.
இவர்களுடைய அரசியல் காசு வாங்கி ஓட்டு போடும் மக்களிடம் செய்கின்ற அரசியல். இந்த இரு கட்சிகளும் தமிழ்நாட்டில் தொடர்ந்து செய்து வரும் அரசியல் வியாபாரம். இது பற்றி அந்த மக்களுக்கு தெரியாது.மேலும், பாஜகவிற்கு ஓட்டு போடும் மக்கள் காசுக்காக ஓட்டு போடுபவர்கள் அல்ல. மேலும், படித்த இளைஞர்கள், அரசியலைப் பற்றி சிந்திக்க தெரிந்தவர்கள், உண்மை எது? என்று புரிந்தவர்கள்.மேலும் ,
40 வயதிற்கு கீழ் உள்ள வாக்காளர்கள் பாஜகவின் பக்கம் திரும்பி உள்ளதாக உளவுத்துறை தகவல் . இது தவிர ,இந்த இரண்டு கட்சிகளின் வெறுப்பு அரசியலால், தமிழக மக்களிடையே இன்று பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.
அதனால் கலக்கத்தில் திமுக, அதிமுக. இவர்கள் இருவரும், தமிழக மக்களிடம் எப்படி அரசியல் செய்து ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளப் போகிறார்கள்? என்பதுதான் தற்போதைய ஹாட் டாபிக்( Hot topic) அரசியல். மேலும் ,மீண்டும் தமிழகத்தில் திமுக வா? அல்லது அதிமுக வா? என்ற மாறி மாறி வரும் அந்த ஆட்சி நிலைமை மாறிவிட்டதா? தவிர, திமுக, அதிமுக வின் அரசியல், படிக்காத மக்களிடம் பொய்யை சொல்லி வியாபாரத்தை செய்து
வரும் இவர்களுக்கு பக்க பலமாக கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் பக்க வாத்தியமாக இருந்து வந்தும், அவையெல்லாம் தற்போது மக்களிடம் எடுபடவில்லை. ஒரு பக்கம் ஆன்மீக சாமியார்கள் இவர்களுக்கு எதிராக கொடிபிடிக்கிறார்கள், இன்னொரு பக்கம் ஆர் எஸ் எஸ் இவர்களை எதிர்க்கிறது. 40 வயதிற்கு கீழ் உள்ள வாக்காளர்கள் பாஜகவின் பக்கம்,.மற்றொரு பக்கம் மக்களிடம் இவர்களுடைய வெறுப்பு அரசியல். இதிலிருந்து தன்னுடைய அரசியல் செல்வாக்கை திமுக எப்படி நிலை நிறுத்தப் போகிறது?மேலும் ,
அதிமுக எப்படி மீண்டும் தன் அதிகாரத்தை கைப்பற்ற போகிறது?இது தவிர, ஜாதி கட்சிகளான திருமாவளவன், டாக்டர் ராமதாஸ், சீமான் ,மதிமுக வைகோ, தேமுதிக இவர்கள் எல்லாம் எந்த பக்கம் மக்கள் மெஜாரிட்டியோ, அந்த பக்கம் சாய்கின்ற ஜால்ரா கூட்டமாக இருக்கின்ற அரசியல் கட்சிகளை வைத்து அதிமுக ,திமுக அரசியல் கட்சிக் கூட்டணி பலத்தை தமிழக மக்களிடம் காட்ட முடியுமா? என்பதும் சந்தேகம் .
மேலும் ,இவர்கள் எல்லோரையும் அதிமுகவும், திமுகவும் காசு கொடுத்து விலைக்கு வாங்கப்பட்ட கட்சிகள், என்பது பொதுமக்களுக்கு தெரிந்த உண்மை. அதனால், அவர்களுடைய வாக்கு வங்கிகள் மிகவும் குறைந்துவிட்டது. இனி தமிழக அரசியலில் இந்த இரண்டு கட்சிக்கும், பெரும்பான்மை என்பது கேள்விக்குறிதான் .