தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் அதன் நிறுவனத் தலைவர் எம்.ஏ.தாமோதரன் தலைமையில் அதன் நிர்வாகிகள் , தமிழ்நாடு அரசு பனை மரத்தொழிலாளர்கள் நல வாரித்தலைவர் எர்ணாவூர் ஏ.நாராயணனை சென்னையில் சந்தித்து இது சம்பந்தமாக கோரிக்கை மனு அளித்துள்ளனர் .
அம்மனுவில் கூறியிருப்பதாவது, தமிழ்நாட்டில் , பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியம், கயிறு வாரியம், காதி வாரியம் என தனித்தனியாக வாரியங்கள் செயல்படுகிறது. அவ்வாறு செயல்படுவதால் , பனைத் தொழிலாளர்களுக்கான நலவாரிய அட்டை வழங்குதல் மட்டுமே நலவாரியத்தால் செயல்படுத்த முடிகிறது. ஆனால் பனையிலிருந்து கிடைக்கும் பொருட்களை விலை நிர்ணயம், பனைப்பொருட்களுக்கான மதிப்பு கூட்டுதல், பனை பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி, பனைத் தொழிலாளர்களுக்கான புதிய தொழில் நுட்ப பயிற்சிகள் , பனைத் தொழிலாளர்களுக்கான இறப்பு நிவாரணத்தை உயர்த்தி வழங்குதல் போன்ற பணிகளை தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தால் மேற்கொள்ள முடியாத சூழ்நிலை உள்ளது. மேலும்,
பனை மேம்பாட்டுக்கான அனைத்து நிதியும், வேளாண்துறை போன்ற வெவ்வேறு துறைகளுக்கு சென்று விடுவதால், பனைமரத் தொழிலாளர்கள் நலவாரியத்தால் பனைத் தொழிலை பெரிய அளவில் மேம்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. எனவே மத்திய அரசாங்கத்தில் இருப்பது போல், காதி வாரியம் , கயிறு வாரியம், பனைத் தொழிலாளர் நலவாரியம் என அனைத்து வாரியங்களையும் ஒன்றாக இணைத்து “தமிழ்நாடு பனை வாரியத்தை” உருவாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இந் நிகழ்ச்சியின் போது உடன் தமிழ்நாடு பனைமரங்கள் பாதுகாப்பு கூட்டமைப்பு கௌரவத் தலைவர் சுபத்ரா செல்லத்துரை , ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட தலைவர் உத்திரகுமார், சென்னை மாவட்ட தலைவர் பச்சைமால் கண்ணன், சமத்துவ மக்கள் கழக மாநில தொழிற்சங்கத் தலைவர் ஜெபராஜ் ஆகியோர் உடனிருந்தனர்.