திமுக அரசு எதிர்க்கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்ட அத்தனைக்கும் இப்போது பதில் சொல்ல முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. தற்போது வெளிவந்துள்ள டிஎன்பிசி தேர்வு முடிவுகள், ஒரு பயிற்சி மையத்தில் எழுதிய 2000 மாணவர்கள் எப்படி வெற்றி பெற்றிருப்பார்கள்?
அதுவும் அந்த எண்கள் அருகிலே இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது .அது மட்டும் அல்லாமல், இந்த செய்தியை சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பி உள்ளார் .இதற்கு பதில் சொல்ல முடியாமல் திமுக எம்எல்ஏக்கள் திணறினர். இப் பிரச்சனை மக்களிடம் அரசியல் செய்வதற்கு இல்லை என்றாலும், முக்கியமாக மாணவர்களின் உழைப்பு, எதிர்கால கனவு, இவை எல்லாம் அதிகார வர்க்கத்தால் ஏமாற்றப்படும் போது, அவர்கள் எவ்வளவு மன வேதனை அடைகிறார்கள்.
அதனால், இப்பிரச்சனை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். உண்மையான உழைப்பு, திறமை ,தகுதி உள்ளவர்கள் தேர்ச்சி பெறும்போது அது வரவேற்க வேண்டிய ஒன்று. ஆனால், பணம் ,அதிகாரம் இவற்றை வைத்து திறமை, தகுதி, உழைப்பு, விலைக்கு வாங்க முடியாது. அது விலை மதிப்பு அற்றது. அதனால், தமிழக அரசு இனியாவது பதிலை சொல்லி சமாளிப்பதை விட, நேர்மையான தேர்வு நடத்தி, மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வது அவசியம்.