ஏப்ரல் 09, 2025 • Makkal Adhikaram

நாட்டில் உச்ச நீதிமன்றம் மக்களின் பாதுகாவலனாக, சட்டத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டும். ஆனால், இன்று ஊழல் அரசியல்வாதிகளின் பாதுகாவலனாக இருப்பது மிகவும் வெட்கக்கேடானது.
தமிழ்நாட்டில் ஆளுநர் R. N. ரவிக்கு தமிழ்நாட்டு மக்கள் நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால், திமுக அரசு சட்ட ஒழுங்கு பிரச்சனையில் இருந்து அவரால் முடிந்த அளவுக்கு காப்பாற்றிய ஒரு பெருமைக்குரியவர். உளவுத்துறையில் முக்கிய பொறுப்பில் இருந்தவர்.

தற்போது உச்சநீதிமன்றம் கொடுக்கப்பட்ட தீர்ப்பு ஆளுநருக்கு எதிரானதா? அல்லது தமிழக மாணவர்களுக்கும், இந்திய மாணவர்களுக்கும் எதிரானதா? இப்படிப்பட்ட ஒரு தவறான தீர்ப்பு உச்சநீதிமன்றத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. அது என்ன என்றால் ?தமிழ்நாட்டில் ஏற்கனவே, கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டு, கஷ்டப்பட்டு படித்தவர்களுக்கும், படிக்காதவர்களுக்கும் வித்தியாசம் தெரியாமல் போய்க்கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் உச்ச நீதிமன்றம் பல்கலைக்கழக துணைவேந்தர்களை நாட்டின் அந்தந்த மாநில முதல்வர்களே, துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் தீர்ப்பாக கொடுத்திருப்பது, கல்விக்கு கொடுக்கப்பட்ட அநீதி தான். இந்த தீர்ப்பு எங்கே போய் முடியும்? என்றால், நாட்டில் ஏழை ,எளிய நடுத்தர மக்கள் கல்வியை இனி வருங்காலத்தில், உயர் கல்வி படிக்க முடியாது .அங்கே வந்து பணக்காரன் தான் படிக்க முடியும். இதை அனைத்து கல்லூரி மாணவ சமுதாயங்கள் இந்த தீர்ப்பை எதிர்த்து நீங்கள் போராட வேண்டும். காரணம்?

பல்கலைக்கழக துணைவேந்தர்கள் அனைவரும் இனி கோடிகளை சூட்கேஸில் கொண்டு போகாமல், துணைவேந்தர்களாக வர முடியாது. தகுதியானவர்களுக்கு துணைவேந்தர்கள் நியமனம் கிடைக்காது .அதுதான் இந்த தீர்ப்பின் சாரம்சம். இதை தான் கவர்னர் R. N. Ravi எதிர்த்தார். இந்த மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தார். அதை திருப்பி அனுப்பினார். மீண்டும் அதே மசோதா வந்த பிறகு, அதை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்து விட்டார். இதில் ஆளுநர் ஆர்.என். ரவி செய்த தவறு என்ன? மாணவ சமுதாயம் சிந்திக்க வேண்டும். மேலும், இந்த தீர்ப்பு உச்ச நீதிமன்றம் கொடுத்துள்ளதால், அரசியல்வாதிகளுக்கு அல்வா சாப்பிட்டது போல், கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

மேலும், இதையும், கூலிக்கு மார் அடிக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகள் உச்சநீதிமன்ற தீர்ப்பை பாராட்டி புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கிறார்கள். இதைப் பற்றி சோசியல் மீடியாவில் நேதாஜி மக்கள் கட்சி நிறுவனர் வரதராஜன் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து, தவறான தீர்ப்பு என்று சட்டத்தின் ஓட்டையில் கொடுக்கப்பட்ட தீர்ப்பு என்று மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். உச்சநீதிமன்றம் சொல்வது,
.jpeg)
கவர்னர் அரசியல் சாசனத்தின் 200 வது பிரிவின்படி சுயேச்யாக செயல்பட அதிகாரம் உள்ளதா?அல்லது மாநில அமைச்சரவையின் முடிவுக்கு கட்டுப்பட்டவரா? என்பது குறித்து முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் பர்த்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு மிக விரிவான தீர்ப்பை வழங்கியுள்ளது என தெரிவிக்கின்றனர்.

இங்கே அரசியல்வாதிகள் நீங்கள் சொல்வது போல், அரசியல் சாசன நிர்ணய சபையில் விவாதங்கள் நடைபெற்ற போது அம்பேத்கர் தெளிவாக கூறியிருக்கிறார் என்று தெரிவிக்கிறீர்கள். அரசியல் சாசனத்தை செயல்படுத்துபவர்கள், நல்லவர்களாக இல்லாவிட்டால் சட்டம் மோசமானதாகவே இருக்கும் என்பதை சுட்டிக்காட்டுகிறார்கள்.மேலும்,
அரசியல்வாதிகள் பதவிப் பிரமாணம் எடுக்கும் போது, சத்திய பிரமாணம் செய்துதான் பதவி பிரமாணம் எடுக்கிறார்கள். அரசியல் சாசனத்திற்கு, மனசாட்சிக்கு, கடவுளுக்கு, உண்மையாக இருப்பேன் .கட்டுப்பட்டு நடப்பேன். பிறகு, பல ஆயிரம் கோடிகளை கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த ஊழல் எல்லாம் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் இன்று வழக்குகளாக போய்க்கொண்டிருக்கிறது.இப்படி இருக்கும் போது,

ஆளுநரை அரசியல் சாசன சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறார் என்று உச்சநீதிமன்றம் சொல்வது ஒரு தவறான தீர்ப்பு. மேலும்,நீங்கள் சொல்வது போல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் இருக்கிறது. ஆனால், சட்டத்தை பாதுகாக்கும் அதிகாரம் கவர்னருக்கு இருக்கிறது.அதை மறந்து ஒரு சட்டத்தை சட்டமன்றத்திலே நிறைவேற்றினால் அதன் பின் விளைவு என்ன என்பதை தெரிந்து கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் தடுத்திருக்கிறார். ஆனால், சட்டத்தின் ஓட்டையை வைத்து இப்படிப்பட்ட ஒரு தவறான தீர்ப்பை உச்சநீதிமன்றம் கொடுத்துள்ளது.
நீங்கள் சொன்ன அம்பேத்கர் அறிவுரைபடி பதவிக்கு வந்தவர்கள் ,சட்டப்படி செயல்பட வேண்டும். ஆனால், சட்டத்தை வளைக்கும் படி அல்லது அதை பாக்கெட்டில் போட்டுக் கொண்டு செயல்பட்டால், எந்த பிரயோஜனமும் மக்களுக்கு இல்லை. ஆளுநர் ஆர். என். ரவி தமிழ்நாட்டில் சட்டப்படி, மனசாட்சி படி ,அவருடைய கடமையை செய்து இருக்கிறார். அதில் ஒன்றும் மாற்றுக் கருத்து இல்லை. ஒரு தவறான மசோதாவை நிறைவேற்றி ,ஒப்புதல் அளிக்க கவர்னருக்கு அதிகாரம் இருக்கிறதா? என்பதை உச்ச நீதிமன்றம் தான் மீண்டும் அதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும்.மேலும்,

கல்வி ஏற்கனவே அரசியல்வாதிகளின் வியாபாரம் நிறுவனமாக இன்று தமிழ்நாட்டில் இருந்து வருகிறது. இதில் உச்சநீதிமன்ற இந்த தீர்ப்பு கல்வியை விலை பேசி விற்று விடுவார்கள். படிக்காமலே ஆந்திராவில் வழக்கறிஞர்கள் பட்டத்தை விற்றுக் கொண்டிருப்பது போல, இப்போது பி ஏ ,எம் ஏ ,எம் பி ஏ ,பி இ, எம் இ எல்லாம் விற்பனை செய்து விடுவார்கள். அந்த நிலை நாட்டில் வரக்கூடாது.உடனடியாக இதில் மத்திய அரசு தலையிட வேண்டும்.
மேலும், ஆளுநர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, இப் பிரச்சனைக்கு நாட்டு மக்களின் நலனில் அக்கறை எடுத்து, அதே உச்ச நீதிமன்றத்திலே பெஞ்ச் கோர்ட்டுக்கு கொண்டு சென்று, இவ்வழக்கை உங்களுடைய கௌரவ பிரச்சினையாகவும், இந்திய நாட்டு மாணவர்களின் எதிர்கால நலனையும் கருத்தில் கொண்டு, கல்விக்கு வழங்கப்பட்ட அநீதி தீர்ப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் பத்திரிகை சார்பாகவும், நாட்டு மக்களின் சார்பாகவும், தமிழ்நாடு சமூக நலன் பத்திரிக்கை மற்றும் பத்திரிகையாளர்கள் சார்பாகவும் வைக்கின்ற முக்கிய கோரிக்கை.