மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, மக்களுக்காக கொண்டு வரும் திட்டங்களை ஆளுநர் ஆர் என் ரவி கிடப்பில் போடுவதாக தமிழக அரசின் குற்றச்சாட்டு .இதற்காக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது. இதில் என்ன பிரச்சனை ?எதற்காக ஆளுநர் ஆர் என் ரவி ஒப்புதல் அளிக்கவில்லை? இவர் மத்திய அரசின் ஏஜென்டாக செயல்படுகிறார்.
இப்படி பல கேள்விகள் தொலைக்காட்சி விவாதங்கள், பத்திரிகைகள் போட்டி போட்டு நடத்திவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் என்ன சொல்கிறது? கிடப்பில் போடுவது சட்டத்திற்கு புறம்பானது. இது எல்லாம் சரி, ஆனால், தமிழ்நாடு அரசு சரியில்லாத அல்லது இவர்களுக்கு வேண்டிய ஒருவரை நியமனம் செய்ய பரிந்துரைத்தால், அந்த நபர் அதற்கு தகுதியானவர் தானா? என்பது விசாரித்து அதில் கையெழுத்திட வேண்டிய அதிகாரமும் ,உரிமையும் ஆளுநருக்கு உள்ளது.
அதேபோல் எந்த திட்டங்களை நீங்கள் கொண்டு வந்தாலும், அந்த திட்டங்களில் மக்களுக்கு என்ன? பயன் அது போய் மக்களுக்கு சேருமா? அதற்கான விளக்கம் கேட்க வேண்டிய அதிகாரம், உரிமையும் ஆளுநருக்கு உள்ளது .ஆளுநர் நீங்கள் எதை காட்டினாலும் கையெழுத்து போடும் ஒரு பொம்மை அல்ல. அப்படிப்பட்ட பொம்மையான ஒரு ஆளுநர் எதற்கு நாட்டிற்கு தேவை ?மக்களுக்கு எது நன்மை? எது தீமை? இது பற்றி பரிசீலிக்கும் உரிமை அதிகாரம் ஆளுநருக்கு இருக்கிறதா? இல்லையா?
அடுத்தது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நிறைவேற்றும் மசோதாக்கள் எந்த நோக்கத்திற்கானது? மக்களுக்கான பயன் என்ன? அதன் வெளிப்படை தன்மை என்ன? என்பதை ஆய்வு செய்யும் உரிமை, அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது .தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் இது பற்றி வழக்கு தொடர்ந்துள்ளது. அந்த வழக்கிற்கு எந்தெந்த கோப்புக்களுக்கு? எதனால் ஆளுநர் கையெழுத்திடவில்லை? என்ற விளக்கத்தை அவர் நிச்சயம் உச்ச நீதிமன்றத்திலே கொடுப்பார். அதில் மாற்றுக் கருத்து இருக்காது.
ஏனென்றால், சட்டமன்றம் மக்களுக்கானது. நீதிமன்றம் மக்களுக்கானது. மத்திய அரசு மக்களுக்கானது. ஆளுநர் மக்களின் நலனுக்காக நியமிக்கப்பட்டவர். இப்படி எல்லாம் மக்கள் என்ற ஒரு மையப் புள்ளியை வைத்து தான் அதிகாரம் மையம் சட்டத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றம் சட்டமன்றத்திற்காக, இப் பிரச்சினையில் தீர்ப்பு வழங்குமா? அல்லது ஆளுநர் செய்தது சரியானது என்று தீர்ப்பு வழங்குமா ?இதில் எது பொதுநலம்? எது சுயநலம்? இதைத்தான் உச்சநீதி மன்றம் பார்க்க வேண்டும்.
ஏனென்றால் ,இன்று அரசியல் ,அதிகாரம் சுயநலமாக மாறிவிட்டதால் ,இதில் ஆளுநர் பக்கம் மக்களுக்கான பொது நலமா ?அல்லது தமிழக அரசின் செயல் திட்டங்கள் பொதுநலமா? என்பதுதான் மிக முக்கியமானது. இதில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பை எப்படி வழங்கப்போகிறது?