தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில், மணல் மாபியாக்கள் மூலம் கல்குவாரிகள், சவுடு மண் குவாரிகள் எடுக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் ,மத்திய அரசு, கனிம வள கொள்ளைகளில் இருந்து ,தமிழகத்தை காப்பாற்ற கடும் சட்டத்தை இயற்ற வேண்டும் .மேலும்,
அந்த சட்டம் மாவட்ட ஆட்சியர்கள், கனிம வள அதிகாரிகள் ,மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ,நீர்வளத் துறை அதிகாரிகள், இவர்கள் அனைவரும் பொறுப்பேற்று அதற்கான உரிய சட்ட நடவடிக்கை அவர்கள் மீது கொண்டு வர வேண்டும் .
தவிர, மாவட்ட ஆட்சியர்கள் தான் ஒவ்வொரு மாவட்டத்திலும், இத்தனை லோடு, இத்தனை அடி ஆழம், இவ்வளவு நீள ,அகலம் எல்லாவற்றையும் வரையறுத்து ,ஒரு குவாரியின் கோப்புக்கு உத்தரவு வழங்குகிறார்கள் .அதில் ஒன்று கூட கொடுக்கப்பட்ட அளவு மற்றும் கொடுக்கப்பட்ட லோடு எதுவும், அங்கே செயல்படுத்துவதில்லை. 5000 லோடு அல்லது பத்தாயிரம் லோடு போட்டுக்கொண்டு, ஒரு ஏரியே ஒட்டி விடலாம் .
அதேபோல் மலை மண், கிராவல் குவாரிகள், மலை பாறைகள் ,அனைத்தும் கொடுக்கப்பட்ட அளவுக்கு யாரும் எடுப்பதில்லை. இதற்கு உத்தரவு வழங்கிய மாவட்ட ஆட்சியர்களோ அல்லது கனிம வளத்துறை அதிகாரிகளோ அல்லது நீர்வளத்துறை அதிகாரிகளோ அதைப்பற்றி நேரில் சென்று ஆய்வு செய்வதில்லை .மேலும் தினமும், எத்தனை லோடு எடுத்தார்கள்? என்ற கணக்கும் அங்கு சென்று பார்ப்பதில்லை . எல்லோருக்கும் பணம் லட்சக்கணக்கில் சென்று விடுவதால் ,அதைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், கவலைப்படுவதெல்லாம் அந்த கிராம மக்கள் இந்த லாரிகள் போகும்போதும் ,வரும்போதும் அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். எனவே,
இந்த கொள்ளைகளுக்கு முழுக்க, முழுக்க இவர்களே பொறுப்பாவார்கள். நீதிமன்றமும் இவர்களைத்தான் ஏ ஒன் (A1 accused ) குற்றவாளியாக கொண்டு வர வேண்டும் . இங்கே கேட்பதெல்லாம் அந்தந்த பகுதி கிராம மக்கள் ,சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள், இவர்கள் மட்டும்தான் கேட்கிறார்கள். இதனால், மணல் மாபியாக்கள் மூலம் இவர்களுக்கு பிரச்சனைகளும், தொல்லைகளும் ,எதிர்ப்பும் ஏற்படுகிறது. இவர்களோடு அவர்கள் போராட வேண்டி இருக்கிறது .அதிகாரிகள் செய்கின்ற மிகப்பெரிய தவறுக்கு பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், பத்திரிகையாளர்களும் ஏன் போராட வேண்டும் ?இவர்கள் அதிகாரம் கையில் இருக்கிறது என்று ஆட்சியாளர்கள் சொல்வதை செய்கிறார்கள். மேலும்,
இவர்களுக்கு அந்தப் பகுதியில், அதனால் ஏற்படும் பாதிப்புகள் விவசாயத்திற்கோ, அல்லது சுற்றுச்சூழலுக்கோ எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. அதைப்பற்றி கவலைப்படும் மக்கள் தான்,இன்று ஒவ்வொன்றிற்கும் போராட வேண்டி இருக்கிறது .இது கடந்த அதிமுக ஆட்சியிலும் அப்படி தான்,திமுக ஆட்சியிலும் அதே நிலைமை தான்.
இந்த விஷயத்தில் பணத்திற்காக விலை போகும், அந்தந்த பகுதி குடிகாரர்கள், கட்சிக்காரர்கள், சுயநலவாதிகள் இருப்பதால், பொதுநலம் கொண்டவர்கள் மிகவும் குறைந்து விட்டார்கள். இது தமிழகம் முழுதும் இதே நிலைமைதான். இதை கேட்பவர்களை அவர்கள் மீது காவல்துறை மிரட்டி பொய் வழக்கு போடுகிறார்கள். அல்லது அவர்கள் கட்சிக்காரர்கள் கொடுக்கின்ற பொய் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். ஆகக் கூடி அந்த பகுதியில் இப்படிப்பட்ட பொதுநல நோக்கத்தோடு செயல்படுபவர்களை, காவல்துறை மிரட்டி செயல்படுகிறது . மேலும், காவல்துறை அரசியல் ரவுடிகளா? பணம் கொடுத்தால் தனியார் கட்சி ரவுடிகள் வாங்கிய பணத்திற்கு ஏற்றவாறு செயல்படுவார்கள். அதே போல் தான், காவல்துறை வாங்கிய பணத்திற்கு ஏற்றவாறு செய்வார்களா? இவர்களுக்கும் ,அவர்களுக்கும் என்ன வித்தியாசம் ?
மேலும் ,யாருக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டும்? என்பது கூட தெரியாமல் கொள்ளையடிப்பவனுக்கு பாதுகாப்பு கொடுக்கிறது. இங்கே இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும் போது, NIA இதில் உள்ளே வந்து இப்ப பிரச்சனைகளை விசாரிக்க வேண்டும் . தவறு செய்த காவல்துறை மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் .அப்போதுதான் மணல் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். மேலும், மக்கள் ஏரி ,குளம், குட்டை, மலை மண், மணல் எல்லாம் அந்த காலத்தில் இயற்கையை பாதுகாத்து மக்கள் வாழ்ந்தார்கள். இப்போது இயற்கையை அழிக்க ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் ,காவல்துறை அனைத்தும் எதிராக செயல்படுகிறது.
இதற்கு பலமுறை மக்கள் அதிகாரத்தில் பதிலளித்து விட்டேன். இயற்கையை மனிதன் அழித்தால், மனிதனை இயற்கை அழித்து விடும். உங்களுடைய அதிகாரம், உங்களுடைய படிப்பு ,பட்டம் எதுவும் இயற்கையிடம் செல்லுபடியாகாது. உதாரணத்திற்கு சென்னையில் ஏற்பட்ட டிசம்பர் மாத மழை வெள்ளம் ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அதேபோல் கடும் வெயில், மூலம் இயற்கை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, தவிர, புயல், நிலநடுக்கம், இவை எல்லாம் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இயற்கை வளங்களை கொள்ளையடிப்பதால், இப் பிரச்சனைகள் ஆரம்பித்துவிட்டன .
அதனால், வாக்களித்த மக்களுக்கு எதிராக, வரி கட்டும் மக்களுக்கு எதிராக, மக்கள் வாரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் மக்களுக்கு எதிராக செயல்படும்போது ,நீதிமன்றம் தாமாக முன்வந்து சூமோட்டோவாக இந்த வழக்குகளை எடுத்துக் கொள்ள வேண்டும் .ஏனென்றால், மக்கள் வாழ்க்கையோடு போராடுவார்களா? அல்லது இப்படிப்பட்ட கொள்ளையர்களுக்கு எதிராக போராடுவார்களா? குறிப்பிட்டு சிலர் லாபம் அடைவதற்காக ஒரு கிராமத்தின் இயற்கை வளங்களை அழித்து தாங்கள் மட்டும் வளமாக்கிக் கொள்ள வேண்டும் என்றால்? இது மக்களாட்சி அல்ல. இதற்கு தேர்தல் நடத்த வேண்டியதில்லை. சட்டம் என்ற ஒன்று இருக்க வேண்டியதில்லை. வாக்களித்த மக்கள் இவர்களுக்கு அடிமை என்று நினைத்துக் கொண்டார்கள். இவர்களை அடிமையாக்குவதற்கு காவல்துறையின் அதிகாரம் தவறாக பயன்படுகிறது.
அப்படி தவறாக பயன்படுத்தப்படும் அதிகாரிகளை நீதிமன்றம் அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும். அப்போதுதான் சமூக அக்கறை என்றால் காவல்துறைக்கு என்னவென்று புரியும் .சமூக அக்கறையில்லாமல் காவல்துறையில் பணியாற்றுவது வீண். அதே போல் பத்திரிகை நடத்துவதும், தொலைக்காட்சி நடத்துவதும் ,ஆட்சியாளர்களுக்கு ,அரசியல் காட்சிகளுக்கு ஜால்ராவாக எடுப்பு வேலை செய்தால் ,அது பத்திரிக்கையும் அல்ல, தொலைக்காட்சியும் அல்ல, மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கும் போலியான ஊடக பிம்பங்கள் .மக்கள் இந்த போலியான பீம்பங்களிடம் இருந்து ஏமாறுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.
மேலும். தமிழகத்தை கனிம வளம் கொள்ளையிலிருந்து காப்பாற்ற மத்திய அரசு சுற்றுச்சூழல் சட்டத்தை கடுமையாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை தமிழக மக்கள் வைத்திருக்கிறார்கள் .அதிலும், தற்போது தேனி மாவட்ட மக்கள், தேனி மாவட்ட சமூக நல பத்திரிகையாளர்கள், சுற்றுச்சூழல் கருத்து கேட்டு கூட்டம் ஒன்றை அந்தப் பகுதியில் நடத்திய போது, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள், கனிமவளத் துறை அதிகாரிகள், மக்களின் கருத்துக்களை கேட்பதைவிட மணல் மாபியாக்களின் கருத்துக்களை கேட்பது மட்டுமே கூட்டத்தை நடத்துகிறார்கள். அவர்களுடைய கருத்தை மட்டும் தான் இந்த கார்ப்பரேட் மீடியாக்கள் போட்டுக் கொண்டிருக்கிறது.
இது மக்களிடம் ஒரு போலியான ஊடக பிம்பத்தை உருவாக்கி இருப்பதால் மக்கள் இதைக் கண்டு ஏமாறாதீர்கள். இந்த போலியான ஊடக பிம்பங்கள், தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளுக்கும் ,போலியான அரசியல்வாதிகளின் தவறுகளை சுட்டிக்காட்டாமல் அல்லது ஊழல்களை அம்பலப்படுத்தாமல், மறைமுகமாக அவர்களை நல்லவர்களாகவும், எத்தனை கோடி ஊழல் செய்தாலும் ,எத்தகைய குற்றங்கள் செய்தாலும் ,அவர்கள் எல்லாம் கட்சி என்று ஒரு பேனரில் மறைக்க இந்த கார்ப்பரேட் ஊடக பிம்பங்கள் மறைமுகமாக செயல்பட்டு வருகிறது என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .
அதற்கு அரசாங்கம் அங்கீகாரம் அளிக்கலாம் .அல்லது அரசு அடையாள அட்டை, சலுகைகள் கொடுத்திருக்கலாம். இவர்கள் ஊடகம் என்று சொல்லிக் கொள்வதற்கு வெட்கக்கேடு, வேதனை என்பதை இங்கே மக்கள் அதிகாரம் பத்திரிகையின் சார்பிலும், சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பிலும், இதை பதிவு செய்கிறேன்.
மேலும் நமது செய்தியாளர் தேனி மாவட்டத்தில் சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தால் மாவட்ட ஆட்சியர் பொதுமக்கள் புகார் அளிக்கவில்லை .நீங்கள் மட்டும் தான் கொடுக்கிறீர்கள் என்று தெரிவித்துள்ளார். அதற்கு செய்தியாளர் பொதுமக்களை கூட்டிச் செல்ல வேண்டும் என்றால் மதுவும், பிரியாணியும் கொடுக்க வேண்டும். நாங்கள் எங்கே கொள்ளையடிக்கிறோம் இவர்களுக்கு மதுவும், பிரியாணியும் கொடுத்து,பணமும் கொடுத்து கூட்டத்தை கூட்டிச்செல்ல என்று தெரிவிக்கிறார் செய்தியாளர் – முரளி
வாழ்க மக்களின் சமூக நலன் .