தமிழ்நாடு சட்டப்பேரவை மக்களுக்காக நடத்தப்படுகிறதா ?அல்லது திமுக அரசியல் செய்ய நடத்தப்படுகிறதா?

அரசியல் இந்தியா சமூகம் சர்வதேச செய்தி ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி

நாட்டில் எத்தனையோ பிரச்சனைகள் மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அல்லது மக்களின் முக்கிய தேவைக்காக சட்டப்பேரவை நடத்தப்படுகிறதா? அல்லது திமுக அரசியல் செய்ய சட்டப்பேரவை நடத்தப்படுகிறதா? எதற்காக என்பதை தமிழக ஊடகங்கள் மக்களுக்கு புரிய வைக்க வேண்டும் ,

ஏனென்றால் சட்டப்பேரவை தொடங்கப்பட்டு, அதில் ஆளுநர் ஆர் என் ரவி பேசிய பேச்சு தமிழ்நாடு சட்டப்பேரவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் அப்பாவு பேசி உள்ளார். இவர் தவறாக பேசியிருந்தாலும், இல்லை தமிழ்நாட்டிற்கு எதிராக பேசியிருந்தாலும், இல்லை சமூக மக்களுக்கு எதிராக பேசியிருந்தாலும், தமிழ்நாடு சட்டப்பேரவை அவை குறிப்பிலிருந்து நீக்குவதை ஏற்றுக்கொள்ளலாம்.

 ஆளுநர் ஆர். என். ரவி பேசியது தமிழில், பிறகு ஆங்கிலத்தில் இதில் அரசு தயாரித்த உரை மட்டுமே அவை குறிப்பில் இடம் பெறும். ஆளுநர் பேசியது அவை குறிப்பில் நீக்கப்படும் என்று அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்துள்ளார். இந்தத் தீர்மானம் சட்டப்பேரவையில் கொண்டுவரப்பட்டபோது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதால் ஆளுநர் ஆர் என் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார்.

 நாட்டுக்கு தேசிய கீதம் எவ்வளவு முக்கியமானது .அந்த தேசிய கீதம் குறித்து பேசியது அவை குறிப்பில் இடம் பெறாது .அதை அவருடைய சொந்த கருத்து என்று அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது .மேலும், ஆளுநர் ரவி உரையை புறக்கணித்து வெளியேறியதும் ,அவர் பேசியது அனைத்தும் அவை குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளன என்று தமிழக ஆளுநர்  மாளிகையின் சமூக வலைதள பக்கத்தில் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

தேசிய கீதம் தமிழ்நாட்டு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தினமும் பல பள்ளிகளில் இன்றும் பாடப்பட்டு வருகிறது. இந்த அமைச்சர்களின் பள்ளியில் படித்திருந்த காலங்களில்,பள்ளிக்கு வரும்போதும் ,போகும் போதும்  தேசிய கீதம் மாணவர்கள் பாடுவார்கள். ஆனால், தமிழ்நாட்டின் சட்டப்பேரவையில் தேசிய கீதம் சர்ச்சையானது .இதற்கு தமிழக சட்டப்பேரவை பதில் சொல்ல வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளது .மேலும், தமிழக வாக்காளர்களை முட்டாள் ஆக்கிக் கொண்டிருக்கிறார்களா? தவிர,

இந்த சட்டப்பேரவை திமுக அரசியல் செய்யவா? அல்லது இவர்களுடைய நிழலுயுத்த அரசியலை நடத்தவா? தமிழ்நாடு சட்டப்பேரவை? இது, தமிழக மக்களின் கேள்வி?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *