தமிழ்நாடு பனைமரத் தொழிலாளர்கள் நல வாரியத்தின் சார்பில், தமிழ்நாட்டில் ஒரு கோடி பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்ட மாணவர்களையும் ,தன்னார்வலர்களையும் ,ஒருங்கிணைத்து பாராட்டு விழா சென்னை டீலஸ் ஹோட்டலில் நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பனை வாரிய தலைவருக்கு பனையரசன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சிவி கணேசன் சிறப்புரையாற்றினார். மேலும், ஒருங்கிணைப்பாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி கௌரவித்தார் .
தவிர, பனை விதைகள் ஆறு, ஏரி, குளம் கரையோரங்களில் பெருமளவில் விதைக்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. மேலும், தமிழகத்தில் அழிந்து போன பனைமரத்தை வளர்க்க ஆர்வத்துடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், மாணவர்கள் அனைவருக்கும் தமிழக அரசின் சார்பில் பாராட்டுக்கள்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ்நாடு கல்லூரி கல்வி இயக்குனர் கீதா, அமைப்பின் நிறுவனர் முனைவர் சுபத்ரா செல்லதுரை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர் .