திமுகவின் ஆரம்பம் சினிமாவில் ஆரம்பித்த கட்சி ,அதனுடைய நடவடிக்கைகள் ஆராய்ந்து பார்க்கும் போது, எல்லாம் சினிமா மாடலாகவே திராவிட மாடல் இருந்து வருகிறது. செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கை சினிமாவில் வரும் காட்சிகளை போல தான் இருக்கிறது. அமலாக்கத்துறை பல வருடங்களாக செந்தில் பாலாஜியின் புகார்கள் விசாரணையில் மூலம் ஊர்ஜிதம் செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் உச்சநீதிமன்றமும், அமலாக்கத் துறையும் சேர்ந்து எடுக்கின்ற நடவடிக்கை. இதனுடைய ஒவ்வொரு நடவடிக்கையும், உச்ச நீதிமன்றத்திற்கு அமலாக்கத் துறை தெரிவித்து வருகிறது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன், நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தனியார் மருத்துவமனை ஓதுக்கீடு செய்ய நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
இங்கு திமுகவின் லீகல் டீம் நீதிமன்றத்தை வைத்து விசாரணைக்கு முட்டுக்கட்டை போட அது ஒரு பக்கம், மற்றொரு பக்கம் செந்தில் பாலாஜியின் கைது நடவடிக்கையில் அமலாக்கத்துறை முறையான விதிமுறைகளை பின்பற்றவில்லை என்று திமுகவின் மீடியா டீம் காட்சிப்படுத்துகிறது .அடுத்தது, கூட்டணி கட்சிகளின் அறிக்கை ஒரு பக்கம் மக்களிடம் விளம்பரப்படுத்துகிறார்கள்.
இது தவிர ,திமுக கட்சியினர் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்கிறார்கள். குற்றம் சாட்டப்பட்டவர் அமைச்சராக இருந்தால் என்ன? சாமானிய மக்களாக இருந்தால் என்ன ?குற்றத்தை நிரூபிக்க அமலாக்கத் துறையும், நீதிமன்றமும் எவ்வளவு சட்ட போராட்டம்? அதிகாரிகள் எவ்வளவு மன உளைச்சல்? இது எல்லாம் தமிழக மக்களுக்கு திமுக அரசு சீன் போட்டு காட்டிக் கொண்டிருக்கிறதா?
இதுவே வேற அரசியல் கட்சியை சார்ந்தவர்களாக இருந்தால், இவர்கள் பேசுவது வேறு ,தனக்கென்று வரும்போது எப்படி எல்லாம் குதிக்கிறார்கள்? எப்படி எல்லாம் சீன் போடுகிறார்கள்? என்பதை தமிழக மக்கள் தான் இந்த செய்திகளை எல்லாம் புரிந்து கொள்ள வேண்டும் .நாட்டில் அமைச்சர்களுக்கு ஒரு சட்டம், சாமானியர்களுக்கு ஒரு சட்டம் நீதிமன்றம் ஒருபோதும் சலுகை காட்டக் கூடாது. மேலும், செந்தில் பாலாஜி என்ற ஒருவர் மீது சாட்டப்பட்ட குற்றத்தை நிரூபிக்க எவ்வளவு சட்ட சிக்கலை ஏற்படுத்தலாம் ?எப்படி எல்லாம் சீன் போடலாம்? என்பது திமுகவின் அரசியல். மேலும்,
செந்தில் பாலாஜி உடல்நிலை சரியில்லை. அவருக்கு பதிலாக அவருடைய இலாகாக்களை வேறு சில அமைச்சர்களுக்கு முதல்வர் மு க ஸ்டாலின் கவர்னருக்கு கடிதம் எழுதியுள்ளார். செந்தில் பாலாஜியின் விவகாரம் இந்தியாவே பார்த்துக் கொண்டிருக்கிறது இதில் மறைப்பதற்கு என்ன இருக்கிறது?கவர்னர் அதை ஏற்றுக் கொள்ளாமல், திருப்பி அனுப்பி விட்டார்.
தவிர, தமிழ்நாட்டில் இதுவரை இலாகா இல்லாத ஒரு அமைச்சராக ஏற்படுத்திருப்பது இவராகத்தான் இருப்பார். ஏதாவது ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் கூட பரவாயில்லை. எந்த பொறுப்பும் இல்லாமல் ஒருவருக்கு அமைச்சர் பதவி கொடுப்பது என்ன வித்தை ? இப்படி எல்லாமே பத்திரிகை, தொலைக்காட்சி அரசியல் இவை அனைத்தும் மக்களிடம் எந்தவித உண்மைத் தன்மை இல்லாமல், ஒரு நாடக அரசியலாகவும், சினிமாவில் வருகின்ற காட்சிகளைப் போலவும் தான், மக்கள் இதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும்.
அதேபோல் மத்தியிலும் உள்ள பிஜேபி அரசு இதை பார்த்துக் கொண்டிருக்கிறது .மேலும், நாட்டில் அரசியல் என்பது மேடை நாடகமா? அல்லது சினிமாவா? என்ற நிலைக்கு திராவிட மாடலாட்சி போய்க்கொண்டிருக்கிறது. இதையெல்லாம் அரசியல் தெரியாதவர்கள் ஆளாளுக்கு, எப்படிப்பட்ட கருத்தை சொன்னாலும் ,அதற்கு தலையாட்டி கொண்டிருப்பார்கள் .அல்லது அதற்கு ஏதோ ஒரு கருத்து சொல்லிக் கொண்டிருப்பார்கள் .ஆனால், எது அரசியல் என்பதை படித்தவர்கள், இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் .
மேலும், செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையில் சட்ட சிக்கலை ஏற்படுத்தி அல்லது மருத்துவ காரணங்களை வைத்து தப்பிக்க என்ன வழி என்பதை திமுகவின் லீகல் டீம் மற்றும் திமுகவின் அரசியல் போட்டியில் ஜெயிக்கப் போவது திமுக வா? அல்லது அமலாக்க துறையா? என்பது அடுத்த கட்ட நகர்வுகள் என்ன என்பதை பொறுத்துதான் இதில்… அடுத்த கட்ட நடவடிக்கைகள் தெரியும்.