தமிழ்நாட்டில் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் மக்கள் நலனுக்காக செயல்பட்டால் மக்கள் ஏன் நீதிமன்ற கதவுகளை தட்டுகிறார்கள் ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் பொதுமக்கள் நீதிமன்ற கதவுகளை தட்ட வேண்டிய காரணம் என்ன? மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டிய அரசியல் கட்சிகள் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இன்று இவர்கள் மக்களுக்கே பிரச்சனையாக இருக்கிறார்கள். மேலும், இன்றைய அரசியல் கட்சிகள் பணத்தை மட்டுமே குறிக்கோளாக பேசிக் கொண்டு செயல்படுகிறார்கள். அதுமட்டுமல்ல,

 அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. ஆளாளுக்கு பல கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். எல்லோரும் வாயிலே எவ்வளவு கருத்து வேண்டுமானாலும் இலவசமாக கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். மக்கள் இந்த அரசியல் கட்சி சுயநலவாதிகளின் கூட்டத்தைப் பார்த்தும் ,இலவச கருத்துக்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். எப்போது இவர்கள் ஏமாற்றுவதை நிறுத்தப் போகிறார்கள்?

 எத்தனை காலம்தான் இனி தமிழக மக்கள் ஏமாறுவார்கள் ? மேலும், இன்றைய ஆட்சியாளர்களும் ,அரசியல் கட்சியினரும் ஊழல் செய்துவிட்டு எத்தனை வழக்குகள் போட்டாலும் பார்த்துக் கொள்ளலாம். அதற்கு என்ன காரணம் என்றால், ஊழல்வாதிகளின் நம்பிக்கை வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் பணத்தை கொடுத்து சட்டத்தை ஏமாற்றி விடலாம். அப்படி ஒருவர் சட்டத்தை ஏமாற்றினாலும், இறைவனின் தண்டனையிலிருந்து தப்ப முடியாது.

அவர் எப்படி கொடுப்பார்? என்பது யாருக்கும் தெரியாது ஒன்று. அந்த தண்டனை அந்த விஷயத்தில் நீதிபதிகளுக்கும் சேர்ந்து வரும் என்பதை ஒரு சில நீதிபதிகள் புரிந்திருக்கிறார்கள். அதனால், சில நீதிபதிகள் நீதி தேவதைக்கு பயந்து தீர்ப்பளிக்கிறார்கள். சிலர் அரசியல்வாதிகளின் லஞ்ச பணத்திற்கு தீர்ப்பு எழுதுகிறார்கள் என்று வழக்கறிஞர்களே பேசுகின்றனர். மேலும், நாட்டில் உண்மை எழுதும் பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் குறைந்துவிட்டனர். போலி பத்திரிகைகளும், பத்திரிகையாளர்களும் அதிகரித்துவிட்டனர்.

இன்று நீதிமன்றம் தான் மக்களை காப்பாற்ற வேண்டிய கடைசி நம்பிக்கையாக இருக்கிறது. ஆனால், அங்கேயும் அரசியல் உள்ளே வந்து விடுகிறது. அந்த அரசியலால் நேர்மையான நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்படுகிறார்கள். அந்த இடம் மாற்றம்தான் ஆனந்த் வெங்கடேஷ் உடைய இடமாற்றம் என்று நீதித்துறை வட்டாரம் பேசுகின்றன. நீதித்துறையில் அரசியல் வரக்கூடாது. ஒரு நீதிபதி அதுவும் ஊழல் செய்த மந்திரிகளின் தீர்ப்பு தவறானது என்று தாமே முன்வந்து அமைச்சர் பொன்முடி , அனிதா ராதாகிருஷ்ணன்,கே கே எஸ் எஸ் ராமச்சந்திரன் மற்றும் அதிமுக அமைச்சர்களில் சிலர் மீண்டும் மறு விசாரணைக்கு  வழக்கை எடுத்துக் கொண்டார். அப்படி எடுத்துக் கொண்ட வழக்கை தானே விசாரிக்கிறேன் என்றும் சொல்லிவிட்டார். இவர் விசாரணை ஆரம்பித்தால், நமக்கு சாதகமான தீர்ப்பு வருமா என்ற கேள்வியில் தான் தற்போது நீதிபதிகள் மாற்றப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது .

மேலும், இதையெல்லாம் உச்ச நீதிமன்றம் கவனித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். நீதித்துறை பொதுமக்களுக்கு ஒரு பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும். தவிர,நீதித்துறை ஏழைகளுக்கும், சாமானிய மக்களுக்கும் முக்கிய நம்பிக்கையாக செயல்பட வேண்டும். பணக்காரன், அதிகாரவர்க்கும் ,அரசியல் கட்சியினர் இவர்களுக்காக நீதிமன்றம் செயல்பட்டால், நீதித்துறையின் மாண்பு அழிந்துவிடும்.

 அதனால், நிதித்துறை எந்த நிலையிலும் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் கடைசி நம்பிக்கைநம்பிக்கையா இருக்க வேண்டும். மேலும், இன்று கிராமங்களிலும், நகரங்களிலும், ஊராட்சி மன்ற தலைவர்கள் முதல் நகராட்சி மன்ற சேர்மன் வரை மற்றும் எம்எல்ஏ ,எம்பி, மந்திரிகள் வரை நாட்டில் ஊழல்  செய்து சோத்துக்களை சேர்ப்பதற்காகவே வந்திருக்கிறார்கள். துளி கூட சமூக நலன் அக்கறையில்லாத கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்கள், அவர்களை இன்றளவும் மக்களிடம் நல்லவர்களாகவே காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

யாராவது இவர்கள் மீது வழக்கு தொடர்ந்து, அந்த வழக்கின் மூலம் இவர்கள் யார் என்று நிரூபிக்கப்பட்டால் தான், இவர்களைப் பற்றிய உண்மைகள் வெளிவருகிறது. அப்போதுதான் இந்த கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் அந்த செய்திகளை வெளியிடுகிறது .அதுவரையில் இவர்களை நல்லவர்களாகவே காட்டிக் கொண்டிருக்கிறது .அதற்காகத்தான் இவர்களுக்கு கோடிக்கணக்கில் மக்களின் வரிப்பணம் சலுகை, விளம்பரங்களாக வீணடிக்கப்பட்டு வருகிறது .

ஒரு பக்கம் பத்திரிக்கை வியாபாரம், இன்னொரு பக்கம் அரசியல் வியாபாரம், பல வழிகளில் லாபம் பார்த்துக் கொண்டு, தாங்கள் தான் நாட்டில் பெரிய பத்திரிக்கை என்று பொதுமக்களை ஏமாற்றி வரும் ஒரு பத்திரிகை வியாபாரம். மேலும், உள்ளாட்சி அமைப்புகள் ,ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்தது. இத்தனை கோடிகளை செலவு செய்தேன் இத்தனை லட்சங்களை செலவு செய்தேன் அதை எல்லாம் எடுக்க வேண்டும் இவர்களை யார் செலவு செய்ய சொன்னது மக்கள் செலவு செய்ய சொன்னார்களா?

எந்த வேலைக்கு வந்தார்களோ ,அந்த வேலையை ஒழுங்காக செய்ய தகுதி இல்லை. ஊழல் செய்துவிட்டு வழக்குகளை சந்திக்கும் போது ,அங்கே வழக்கறிஞர்களுக்கு பணமும், நீதிபதிகளுக்கு பணமும் கொடுத்து  சட்டத்தை ஏமாற்றி செய்த குற்றங்களிலிருந்து தப்பிக்க என்னென்ன வேலைகளை செய்ய முடியுமோ, அத்தனை வேலைகளையும் செய்து கொண்டு இருக்கிறார்கள் .இந்த இரண்டு கட்சிகளிலும் ,வந்த அமைச்சர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் இதே தொழிலாக தான் இருக்கிறார்கள். இங்கே நீதித்துறை அரசியல்வாதிகளோடு கைகோர்த்து விட்டால், ஏழை நடுத்தர மக்களின் நிலைமை கேள்விக்குறியாகும். சட்டம் கேள்விக்குறியாகும். நீதிமன்றத்தின் மாண்பு தலைகீழாக மாறிவிடும்.

இதையெல்லாம் நீதிபதிகள் கவனத்தில் கொண்டு ,இந்த நீதித்துறையை காப்பாற்ற வேண்டும். தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு உரிய நீதியை வழங்க வேண்டும். நீதி என்பது கடவுளுக்கு சமமானது. நீதி என்பது மனித வாழ்க்கையில் தர்மத்தை   நிலைநாட்டும் மாபெரும் சக்தி என்பதை நீதிமன்றமும், நீதிபதிகளும் ஒருபோதும் மறந்துவிடக்கூடாது என்பது சமூக அக்கறை உள்ளவர்களின் முக்கிய கருத்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *