தமிழ்நாட்டில் கருவேல மரங்களை அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .அதன் அடிப்படையில் தமிழக அரசு தற்போது மாவட்டம் தோறும் அதற்கு கமிட்டி அமைத்து, கருவேல மரங்களை அகற்ற ஆர்வம் காட்டி வருகிறது.
ஆனால், இந்த கருவேல மரம் கோடிக்கணக்கான மதிப்புடையது என்பது தமிழக அரசுக்கும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இதுவரை தெரியாமல் இருப்பது தான் தமிழக அரசுக்கு கோடிக்கணக்கான மிகப்பெரிய வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இன்று கருவேல மரத்தின் மதிப்பு சுமார் ஒரு டன் 4500 ரூபாய் கம்பெனிகளில் வாங்குகிறார்கள். மார்க்கெட்டில் அதைவிட ஒரு 500 ரூபாய் குறைவாக வாங்கலாம்.
இது தவிர, திருநெல்வேலி ,தூத்துக்குடி பகுதிகளில் ஒரு ஏக்கர் கருவேல மரம் ஏழு லட்சத்திலிருந்து, 9 லட்சம் வரை விற்கப்படுவதாக சமூக நல அமைப்புகள் தெரிவிக்கின்றன. இது ஒரு புறம் என்றாலும், மற்றொரு புறத்தில் இந்த கருவேல மரத்தை கரியாக்கி அதை கோல் எக்ஸ்போர்ட் (goal export) செய்கிறார்கள். அப்போது இதன் மதிப்பு கூட்டப்பட்டு பல கோடி வருமானம் ஏலம் எடுப்பவர்கள் சம்பாதிக்கிறார்கள்.
ஆனால், அரசுக்கு நீர்வளத் துறை அதிகாரிகள் குறைந்த மதிப்பீடு செய்து கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் முதல் கட்சிக்காரர்கள் வரை ஏலம் எடுத்துவரோடு கூட்டு சேர்ந்து நீர்வளத் துறை அதிகாரிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள். இது உண்மையான தகவல் .இதை தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் உளவுத்துறையின் மூலம் கூட விசாரித்துப் பார்த்துக் கொள்ளலாம்.
மேலும், சமீபத்தில் திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் ஏலம் விடப்பட்டுள்ள கருவேல மரத்தின் மதிப்பு சுமார் 15 கோடிக்கு பெருமானம் உள்ளது. ஆனால், அதை நிர்வளத்துறை அதிகாரிகள் வெறும் ஐம்பதாயிரத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளனர். அந்த இரண்டு ஏரிகளின் பரப்பளவு சுமார் 300 ஏக்கர் .அப்படி என்றால் ஒரு ஏக்கர் 160 ரூபாய்க்கு ஏலம் விட்டுள்ளனர். அந்த விலை ஒரு மரத்தின் மதிப்பிற்கு கூட வராது. அப்படி இருக்கும்போது, இதில் எவ்வளவு பெரிய ஊழல் நடைபெற்று உள்ளது என்பதை தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ,நீர்வளத் துறையின் முதன்மைச் செயலாளர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆய்வு செய்து பார்த்துக் கொள்ளட்டும் .
இது தவிர, விடையூர் கிராமத்தில் நீர்வளத் துறை மூலம் ஏலம் விடப்பட்ட முறைகேடுகள் குறித்து ,லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனருக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கப்பட்டு, அந்தப் புகாரின் அடிப்படையில் திருவள்ளூர் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி தமிழரசி விசாரணை செய்து இந்த முறைகேடு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அதனால், கருவேல மரம் வெட்டுவது இரண்டு மாத காலம் நிறுத்தி வைக்கப்பட்டது. நிறுத்தப்பட்ட பிறகு,
ஊர்ஜிதரப்படுத்தப்பட்ட முறைகேட்டில், லஞ்ச ஒழிப்புத் துறையை ஏலம் எடுத்தவர்கள் சரிகட்டி, இந்த விசாரணையை நீர்த்து போகச் செய்துள்ளனர் என்பது கிராம மக்கள் குற்றச்சாட்டு. மேலும், அதை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்காமல் மறைத்து, மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை செய்து இரண்டு மாத காலம் மரம் வெட்டுவது நிறுத்தப்பட்டதை அரசுக்கு சொந்தமான மரங்களை வெட்டுவதாக நீர்வளத் துறைக்கு புகார் வந்தது போலவும், அதை நீர் வளத்துறை அதிகாரி ரமேஷ் தடுத்து நிறுத்தியது போலவும், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு கணக்கு காட்டில் உள்ளனர் .
பிறகு, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏலம் எடுத்த கணேசன் ரிட் மனு தாக்கல் செய்து, மீண்டும் மரம் வெட்டுவதற்கு சென்னை உயர்நீதிமன்றம் எந்த விசாரணையும் செய்யாமல், மேம்போக்காக உத்தரவு வழங்கி உள்ளது. இவையெல்லாம் கருவேல மரத்தின் கோடிக்கணக்கான ஊழல் கூட்டுக் கொள்ளை என்பது தமிழக அரசுக்கும் ,சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் இதுவரை தெரியவில்லை.
இருப்பினும், இனிமேலாவது இதில் முக்கிய கவனம் செலுத்தி, இதில் ஊழல் ஏற்படுவதை முறையான விசாரணையும், வெளிப்படையான ஏலம் மற்றும் முறையான மதிப்பீடு செய்தால் மட்டும் தான் கருவேல மரத்தின் ஏல ஊழல் தவிர்க்க முடியும். மேலும்,இதன் மூலம் அரசுக்கு கோடிக்கணக்கான வருவாய் இழப்பு ஏற்படுத்தியுள்ளதைம், ஊழல் செய்துள்ளதையும், நீர்வளத்துறை அதிகாரிகளின் வெட்ட வெளிச்சம் தமிழக அரசின் கவனத்திற்கும், சென்னை உயர்நீதிமன்றத்தின் கவனத்திற்கும், மறைக்கப்பட்ட உண்மைகள் இப்போது புரிந்து உள்ளதா?
மேலும், இவர்கள் கருவேல மரத்தை அகற்றுவதால் ஏதோ நீராதாரத்தை காப்பாற்றுவது போலவும், நீர்வளத்துறை அதிகாரிகளும், சென்னை உயர் நீதிமன்றமும், பாவல காட்ட வேண்டாம் என்று சமூக நல அமைப்புகள் மற்றும் சமூக நல பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.
எனவே, இனியாவது சென்னை உயர்நீதிமன்றம், தமிழக அரசு, இந்த கருவேல மரம் ஏலம் விடுவதில் வெளிப்படை தன்மை இருக்க வேண்டும். மேலும், இது போன்ற குறைந்த ஏலம் விட்டு ,அரசுக்கு கோடிக்கணக்கான இழப்பு ஏற்படுவதற்கு காரணமான நீர்வளத்துறை அதிகாரிகள், ஏலம் எடுத்தவர்கள் மீது முறையான விசாரணை செய்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்க விடையூர் கிராம பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் ,இப்பிரச்சனைக்கு முக்கிய காரணம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்க்ஸ் விடையூர் கிராமம் பொதுமக்கள் புகார் அளித்தும், முறையான விசாரணை செய்து நடவடிக்கை எடுக்காமல் போனது மிகவும் குறிப்பிடத்தக்கது என்பதை நீர்வளத் துறை செயலாளர் மற்றும் தலைமைச் செயலாளர் இது பற்றி தெரிந்து கொள்வது அவசியம் .