ஏப்ரல் 23, 2025 • Makkal Adhikaram

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறை விசாரணை செய்ய தடை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், கே. ராஜசேகர் அமர்வால் தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும்,
ஒரு சில நீதிபதிகளால் தான், இன்னும் நீதி பிழைத்துக் கொண்டிருக்கிறது. இல்லையென்றால் நீதி எப்போதோ நாட்டில் செத்துப் போயிருக்கும். ஒரு மத்திய அரசின் கீழ் இருக்கக்கூடிய அதிகாரம் மிக்க அமலாக்கத் துறை விசாரணை செய்யக்கூடாது என்றால், யார் தான் அந்த ஊழலை கண்டுபிடிக்க முடியும்? யாருக்கு தான் இவர்கள் பதில் சொல்வார்கள்? ஏதோ சட்டப்படி, சட்டத்தை மதித்து நடப்பவர்கள் போல, அடிக்கடி இவர்கள் நீதிமன்றத்திற்கு ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.இதையும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்துக்கொண்டு, கேட்டுக்கொண்டு, போய்க்கொண்டிருக்க வேண்டும்.

அமலாக்கத்துறை உள்ளே வருகிறது என்றால், சாதாரணமாக வராது. அதற்கான அத்தனை காரணங்களையும், ஆதாரங்களையும் சட்டப்படி தோண்டி எடுத்துக் கொண்டுதான் அவர்கள் பெரும்பாலும் வருவார்கள். ஆதாரமில்லாமல் வர மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு துறையையே விசாரணை செய்ய அதிகாரம் இல்லை என்று தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறது என்றால், தமிழ்நாட்டை திமுக அரசு பட்டா, போட்டு விட்டதா? என்பதுதான் சட்டம் தெரிந்தவர்கள் கேள்வி?
இவர்களுக்கு எப்படி அதிகாரம் இருக்கிறது என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் சொல்லிக் கொள்கிறார்களோ, அதே போல் இந்தியாவையே ஆளக்கூடிய மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு அதிகாரம் இருக்காதா? ஏன் பயப்படுகிறீர்கள்? ஏன் நீதிமன்றம் ஓடுகிறீர்கள்? உங்கள் நிர்வாகத்தில் தவறு நடந்திருக்கிறது. உயர் நீதிமன்றம் ஓடுகிறீர்கள்? உச்சநீதிமன்றம் ஓடுகிறீர்கள்? எதற்காக வழக்கு போட வேண்டும்? தவறு நடக்கவில்லை என்றால், ஏன் ஓட வேண்டும்?

நாட்டில் நீதிமன்றம் ஒழுங்காக இருந்தால், ஊழல்வாதிகளை வீட்டுக்கு அனுப்பலாம் அல்லது தண்டனை கொடுத்து அரசியலில் இருந்து அவர்களை விடுவிக்கலாம். அதனால் தான் ,அமலாக்கத்துறை, சிபிஐ ,வருமானவரித்துறை, அரசியல் ஊழல் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து பல நீதிபதிகளால் தப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். நாட்டில் ஊழலை ஒழிப்பதற்கு போராடும் மக்கள்,சமூக நலன் பத்திரிகைகள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், முயற்சி செய்தும், பலன் அளிக்காமல் பதவி அதிகாரத்தால், பணத்தால், விலை பேசப்படுகிறார்கள்.

ஒரு சாதாரண அதிகாரி ஆயிரம், 500, 50000 ,ஒரு லட்சம் வாங்கினால் லஞ்சம் என்று அவர்களை லஞ்ச ஊழல் அதிகாரிகள் பிடித்துக் கொள்கிறார்கள். ஆனால், பல ஆயிரம் கோடிக்கணக்கில் ஊழல் செய்தால், நீதிமன்றத்தில் இருந்தும், சட்டத்தின் பிடியிலிருந்தும் எப்படி தப்பிக்கிறார்கள்? இதுதான் பொது மக்களின் முக்கிய கேள்வி? அதனால்,

இனியாவது நீதிபதிகள் தங்களின் பொறுப்பு மிக்க கடமைகளை உணர்ந்து, மக்களுக்கு நீதியை பெற்றுத் தருவதோடு, நாட்டு மக்களை சுரண்டும் ஊழல்வாதிகளுக்கு தண்டனை பெற்றுத் தந்தால், அது நீதி தேவதைக்கு நீங்கள் செய்கின்ற முக்கிய சேவை.