தமிழகம் முழுதும் உள்ள கனிம வள குவாரிகளை தேர்தல் முடியும் வரை நிறுத்தி வைக்க சமூக ஆர்வலர்களும், சமூக நலன் பத்திரிகையாளர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதற்கு காரணம் என்னவென்றால்! ஏற்கனவே தமிழ்நாட்டில் பணத்தை ஆம்புலன்ஸ் மூலம் கடந்த தேர்தல்களில் வாக்காளர்களுக்கு கொடுக்க கடத்தப்பட்டுள்ளது. அதேபோல், மணல் மற்றும் சவுடு மண், மலை மண் போன்ற லாரிகளில் இந்த பணத்தை அரசியல் கட்சிகள் நாடாளுமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விநியோகிக்க கொண்டு போக மாட்டார்களா ? இதைத் தேர்தல் ஆணையம் கவனத்தில் கொண்டு தேர்தல் விதிமுறைகளின் கீழ் இதைக் கொண்டு வர வேண்டும்.
மேலும், தமிழ்நாட்டில் அதிகப்படியான illigal சட்டப்படியாகவே நடந்து கொண்டிருக்கிறது. அதிலும் இதுபோன்ற கனிம வளம் சொல்ல வேண்டியது இல்லை. இதில் பணத்தைக் கொண்டு சென்றால் அல்லது பரிசுப் பொருளோ கொண்டு சென்றால் ,அதில் எதுவும் தெரியாது. அதை சோதனை செய்யக்கூடிய அதிகாரிகளோ அல்லது காவல்துறையோ அதன் உள்ளே என்ன இருக்கிறது? என்று கண்டுபிடிக்க முடியாது.
அதனால், தமிழக தேர்தல் ஆணையர் உடனடியாக கனிம வள குவாரிகளை நிறுத்தினால், அதை வைத்து சட்டத்திற்கு புறம்பாக எந்த வேலையும் செய்ய முடியாது. இல்லை என்றால்! இதில், தமிழகம் முழுதும் வாக்காளர்களுக்கு பண வினியோகம் செய்ய, லாரிகளில் கடத்துவதற்கு மிகப்பெரிய ஒரு வாய்ப்பாக அரசியல் கட்சிகள் பயன்படுத்தி கொள்வார்கள் என்பதை தேர்தல் ஆணையம் புரிந்து கொண்டால் சரி .