தமிழ்நாட்டின் அரசியல் எவ்வளவு தரம் தாழ்ந்து உள்ளது? என்பது இது போன்ற சம்பவங்களால், கேவலமாக பேசப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. அரசியலில் இருப்பவர்கள் எப்படிப்பட்ட தவறு செய்தாலும் அல்லது சட்டத்தை ஏமாற்றினாலும், சமூகத்தை ஏமாற்றினாலும், எல்லோரும் ஒன்றை சொல்லி தப்பித்துக் கொள்கிறார்கள். அது என்னவென்றால் அது எந்த கட்சி அரசியல்வாதியாக இருந்தாலும் ,இதை எதிர்க்கட்சிகளின் அரசியல் சூழ்ச்சி, இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை, இதற்கு பின்னால் ஆளும் கட்சியின் அரசியல், இப்படிப்பட்ட சொற்களை வைத்து தமிழ்நாட்டில் அரசியல் பிழைப்பு நடத்துகிறார்கள்.
அதாவது, சீமான் என்கிற சைமன் சொல்கிறார் நான் பல கோடி கனவுகளோடு இருந்து வருகிறேன். எனக்கு இடையூறாக இரண்டு லட்சுமிகளை அனுப்புகிறார்கள் .அரசியல் என்பது மேடைப்பேச்சாக ஆக்கி விட்டார்கள். அதற்காக எவ்வளவு உழைக்க வேண்டும்? மக்களின் பிரச்சினைகள், மக்களின் தேவைகள், இதற்காக போராடியவர்கள்? உண்மையான அரசியல் வாதியாக செயல்படக்கூடியவர்கள்? அவர்களுடைய நிலைமை என்ன?
வெறும் சினிமா நடிகர்கள் போல, ஊடகங்களில் அரசியல் பேசிக் கொண்டு இருப்பதெல்லாம் எப்படி அரசியலாகிவிடும்? ஒரு நாளைக்கு சீமான் நல்ல கருத்து சொல்கிறார், மறு நாளைக்கு பேசும் போது ,அந்த கருத்து கூட கேவலமாக இருக்கிறது. இப்படி மாற்றி, மாற்றி பேசக்கூடிய சீமான் என்கிற சைமன் தமிழ்நாட்டு அரசியல் என்பது, பேசிய மக்களை கவரும் அரசியலா? அல்லது ஏமாற்றும் அரசியலா? இங்குதான் அரசியல் தெரியாத முட்டாள்கள் அதிகம் .
அதனால், இவர்களுடைய பேச்சுக்கு ரசித்து கை தட்டும் கூட்டங்கள் .அரசியல் என்றால் என்ன அர்த்தம்? கைதட்டி விசில் அடிப்பதா? அல்லது கூட்டம் காட்டுவதா? அல்லது ரவுடிசம் செய்து கொண்டு மிரட்டுவதா? அவர்களுக்கு தெரிந்த அரசியல் என்ன? அந்த அரசியலில் இதுவரை அந்த பகுதியில் அவர்கள் செய்த வேலை என்ன? ஒரு கட்சியை இன்னொரு கட்சி குறை சொல்லிக் கொண்டு, அரசியல் செய்வதுதான் தமிழ்நாட்டின் அரசியலா? இதைதான் இந்த அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டின் அரசியல் என்று ஊடகங்களில் பாட்டு பாடி கொண்டிருக்கிறார்கள்.
ஊடக சுயநலத்தில் தனக்கு பார்ப்பவர்கள் மூலமோ அல்லது அந்த பேப்பரை வாங்குபவர்கள் மூலமோ லாபம் வந்தால் சரி. ஆனால், அரசியல் என்பது மக்கள் பிரச்சனைகள் ,தேவைகள், அந்த தேவைகளுக்கு இவர்கள் உங்களுடைய தியாகம் என்ன? இவர்களுடைய பங்களிப்பு என்ன? இதுதான் ஒவ்வொரு அரசியல்வாதியின் முக்கிய அரசியல் பங்களிப்பு. இப்படி எத்தனை பேர் மக்களுக்காக என்னென்ன செய்திருக்கிறார்கள்? அதை உங்கள் பகுதியிலே பட்டியலிட்டு பார்த்துக் கொள்ளுங்கள் .
நல்லது செய்திருக்கிறார்களா? அல்லது மக்களுக்கு எதிரான செயல்பாடுகளை செய்து வருகிறார்கவருகிறார்களா ?அல்லது பந்தா காட்டி மிரட்டி வருகிறார்கவருகிறார்களா? எது என்பதை நீங்களே புரிந்து கொள்ளுங்கள். மேலும், அரசியலுக்கு வருபவர்கள் நேர்மையும் ,ஒழுக்கமும் மிகவும் அவசியம் . நேர்மையும், ஒழுக்கமும் இல்லாத எந்த அரசியல் கட்சியினரை பற்றியும், அரசியல் தெரிந்தவர்கள் உயர்வாக நினைக்க மாட்டார்கள்.
ஆனால், தெரியாமல் இருப்பவர்களும், தெரியாத ஊடகங்களும் அவர்களைப் பற்றி உயர்வாக காட்டிக்கொண்டு, பேசிக்கொண்டு கால நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்பார்கள். தற்போது தமிழ்நாட்டின் அரசியல் களம் ஏமாற்று அரசியலில் இருந்து எப்படி விடுபடப் போகிறது? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி? இந்த கேள்விக்கு மக்களின் அரசியல் விழிப்புணர்வு அவசியம்…! பிராடுகளுக்கும், கிரிமினல்களுக்கும், அரசியலில் முக்கியத்துவம் அளித்து விட்டால் ,மக்களின் வாழ்க்கை போராட்டம் தான் .