தமிழ்நாட்டில் பிழைப்பு தேடி வந்த வட மாநிலத் தொழிலாளர்கள் இன்று தமிழர்களையே தாக்கி விரட்டும் அளவிற்கு வந்துவிட்டார்கள். இதற்கு யார் காரணம்?

அரசியல் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தமிழ்நாட்டில் வட மாநிலத் தொழிலாளர்களின் வன்முறை சம்பவம் கண்டிக்கத்தக்கது மட்டுமல்ல, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பிழைப்பு தேடி வந்தவர்கள், இன்று தமிழர்களையே தாக்கி விரட்டும் அளவிற்கு வந்துவிட்டார்கள். இந்தப் பிரச்சனை திருப்பூர் மாவட்டத்தில் ஆரம்பித்திருக்கிறது. இதற்கு யார் காரணம்? எல்லாம் அரசியல் கட்சிகள் தான் முக்கிய காரணம். தவிர,வியாபார நிறுவனங்கள், கம்பெனிகள் மற்றும் கட்டிட நிறுவனங்கள், அனைத்திலும் அரசியல் தலையீடு உள்ளது. மேலும்,

தமிழ்நாட்டில் உள்ளவர்கள் வேலைக்கு செல்வது, உழைப்பது எல்லாம், கேவலமாக நினைத்ததால், இன்று வடமாநில தொழிலாளர்கள் இங்கு வேலைக்கு வந்துள்ளதற்கு முக்கிய காரணம் இவர்கள்தான். அடுத்தது இந்த மக்களை அரசியல் கட்சிகளில் சேர்த்துக்கொண்டு, கொடிப் பிடிக்க வைத்துவிட்டு, கோஷம் போட வைத்துவிட்டு, உழைக்காமல் உழைப்பவர்களை, ஏமாற்றி சுருண்டும் வேலையை பார்ப்பதும், இன்றைய அரசியல் கட்சிகள் தான். தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. ஆனால், எந்த தொழிலுக்கும் வேலையாட்கள் கிடைக்கவில்லை. இதற்கு என்ன முக்கிய காரணம்?

மேலும் வரும்போதே அந்த வேலையைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும், சம்பளம் எவ்வளவு என்று நம் தமிழ்நாட்டு மக்கள் கேட்கிறார்கள்? வேலையே தெரியாமல். நான் கேட்கும் சம்பளம் மட்டும் நீ கொடுத்துவிடு. தவிர, ஒவ்வொரு கம்பெனியிலும், அரசியல் கட்சிகளின் சங்கங்களை அமைத்துக் கொண்டு, முதலாளிகளுக்கு எதிராக கொடி பிடித்து, கோஷம் போட்டு, அந்த கம்பெனியே ஊத்தி மூடும் அளவிற்கு செய்வது யார்? எல்லாம் நம் தமிழ் மக்கள் தானே!

மேலும், ஒவ்வொரு ஏரியாவிலும் உள்ள அரசியல் கட்சி ரவுடிகளுக்கு மட்டுமே, அந்தந்த கம்பெனிகளில் உள்ள ஸ்கிராப்களை சொந்தம் கொண்டாடி வருகிறார்கள். அவர்களுக்கு தான் கொடுக்க வேண்டும். இல்லையென்றால், கம்பெனியை நடத்த விட மாட்டோம். தொழிலாளர்களிடம் பிரச்சினையை ஏற்படுத்துவோம். இது போன்ற பல்வேறு பிரச்சனைகளை எல்லாம் கொண்டு வருவது தமிழ்நாட்டு அரசியல் கட்சிகள்.இது முதலாளிகளை ஆட்டம் காண வைக்கிறது. பல கோடி ரூபாய் முதலீடு செய்து, ஒரு தொழிலை நல்ல முறையில் நடத்த வேண்டும் என்று தான் எந்த முதலாளியும் நினைப்பார்கள். ஆனால், முதலாளி எக்கேடு கெட்டு போனாலும் பரவாயில்லை. எங்களுக்கு மட்டும் சம்பளம் கொடு என்றால், அந்த முதலாளி எப்படி அந்த தொழிலில் லாபகரமாக நடத்த முடியும்?

கம்பெனி லாபத்தில் வந்தால் தானே, தொழிலாளர்களுக்கு அவர்கள் சம்பளத்தை தர முடியும். உழைக்காமல் எந்த பொருளையும் உற்பத்தி செய்ய முடியாது. உழைக்காமல் ஒரு கம்பெனி வளர்ச்சி அடைய முடியாது. எப்பொழுது தமிழ்நாட்டு மக்கள் இந்த உழைப்பை கேவலமாக்கி அரசியலில் சோம்பேறி, வெத்து வெட்டு, குடிகாரர்கள், கொலைகாரர்கள், ரவுடிகள் இவர்களை பெரியாளாக்கி பதவியில் உட்கார வைத்தார்களோ, அன்று பிடித்தது தமிழ்நாட்டுக்கு இந்த பிரச்சனை. இந்த பிரச்சனைக்கு அரசால் தீர்வுக்காண முடியுமா? முடியாது. அதனால் இந்த பிரச்சனைக்கு முக்கிய காரணம் நம் தமிழ் மக்களே. மேலும்

தமிழ்நாட்டில் உள்ள கம்பெனிகளில் அரசியல் தலையீடு உள்ளது. இந்த அரசியல் தலையீடு, கம்பெனிகளின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய ஒரு முட்டுக்கட்டை. அதை எல்லா கம்பெனி முதலாளிகள் சேர்ந்து, அதை தகர்த்தெறிய வேண்டும். இந்த ஸ்க்ராப் எல்லாம் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் கொடுக்கக் கூடாது. எங்களை போன்ற சமூகம் நன்மைக்காக போராட்டம் பத்திரிகையாளர்கள், அமைப்புகள், சேவை மனப்பான்மை கொண்டவர்களுக்கு தான் அதை தர வேண்டும்.

நீங்கள் கொடுக்கும் இந்த ஸ்க்ராப் நாட்டில் அரசியல் ரவுடிகளை மறைமுகமாக வளர்த்துக் கொண்டிருக்கிறீர்கள் என்பதை ஒவ்வொரு தமிழ்நாட்டில் உள்ள கம்பெனி முதலாளிகள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும், எங்களுக்கு விளம்பரம் கொடுப்பதற்கு கூட கேவலமாக பார்க்கின்ற எத்தனையோ கம்பெனிகள் இருக்கிறது. அவர்கள் வியாபார பத்திரிகை நிறுவனங்களை தான் பெரிதாக மதிக்கிறார்கள். ஆனால், இந்த உண்மை அவர்களுக்கு தெரியாது. நாங்கள் சொன்னால் தான் அடுத்த கட்ட செய்தி அவர்கள் போடுவார்கள்.

அதனால், பத்திரிகை என்பது சிறியது, பெரியது என்ற பாகுபாடுகளை விட எது சமூகத்திற்கு முக்கியமானது? என்பதுதான் தற்போதைய தமிழ்நாட்டு மக்களின் முக்கிய கருத்தாக இருக்க வேண்டும். இது மக்களுக்கு மட்டுமல்ல, செய்தி துறையின் அதிகாரிகளுக்கும், அதுதான் முக்கிய கருத்தாக இருக்க வேண்டும். இது தெரியாமல் இன்று வரை இந்த பத்திரிகையின் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதனால் தான், இன்றைய சமூக அவலங்கள் அதிகரிப்பதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்பதை நமது கம்பெனி முதலாளிகள், தமிழக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். மேலும்,

இந்த வட மாநில தொழிலாளர்களை தங்களுடைய நிறுவனங்களில் பணிக்கு அமர்த்திக் கொள்கிறார்கள். இன்னொரு புறம் டாஸ்மாக் கடையை திறந்து வைத்து இவர்களை வேலைக்கு செல்வதை தடுத்து, குடிகாரர்களாய்க்கி வைக்கிறார்கள். இது இரண்டுமே அரசியல்.

 மேலும் இன்று பல குடும்பங்களில் இந்த குடிகாரர்களின் மனைவி தான் வேலைக்கு சென்று சம்பாத்தியம் செய்து குடும்பத்தை காப்பாற்றுகிறது இவை எல்லாவற்றிற்கும் இந்த தமிழகத்தின் அதிமுக திமுக அரசியல் என்பதை இந்த மக்கள் எப்போது உணரப் போகிறார்கள் மேலும் காசு கொடுத்து இவர்களின் வாக்குரிமையை விலைக்கு வாங்கி தமிழகத்தில் ஊழல் அரசியல்வாதிகளையும் ரவுடிகளையும் உருவாக்குவது இவர்களுக்கு முக்கிய பங்கு உண்டு எனவே மக்களாகிய நீங்கள் தான் பிரச்சனைக்கு முக்கிய காரணமானவர்கள் என்பதை புரிந்து கொண்டால் சரி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *