தமிழ்நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் திமுக, அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்படாதது ஏன்?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

லோக் ஆயுக்தா சட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் எம்எல்ஏ, எம்பி, மந்திரி, அதிகாரிகள் ,உள்ளாட்சி பிரதிநிதிகள், உள்பட அவர்களின் சொத்து கணக்கு ஆய்வுக்கு உட்பட்டு அதிக சொத்து சேர்த்தால் அவை அரசின் கணக்கில் வரவு வைக்கப்படும். அல்லது சோதனை செய்து பறிமுதல் செய்யப்படும்.

 தற்போது கூட, மத்திய அரசின் ஜெல் சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் பணியாற்றிய நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரஜிந்தர் குமார் குப்தா 2019 ஆம் ஆண்டில் ஓய்வு பெற்ற நிலையிலும், அவரது வீட்டில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது 

20 கோடி ரொக்கம், தங்க நகைகள், விலைமதிப்பற்ற பொருட்கள், பறிமுதல் செய்துள்ளனர். இது தவிர, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த பணத்தில் டெல்லி, குரு கிராம், சோனி பட், சண்டிகர், நகரங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள், வணிக வளாகங்கள், பண்ண வீடுகள் வாங்கி உள்ளார்.

 அதேபோல் கர்நாடகாவில் ஒரு அதிகாரி தன் வீட்டில் சோதனை செய்து எடுத்துச் செல்லும் போது அவர் ரோட்டில் புரண்டு அழுகின்ற காட்சி வெளியாகி உள்ளது.இந்த சட்டத்தின் மூலம் மாட்டிக் கொள்கிறார்கள் மேலும்,

https://youtu.be/e4tGD6q7aXg
(இது சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ள காட்சி)

இது கர்நாடகா, தெலுங்கானா ,கேரளா,ராஜஸ்தான், மேகாலயா, டெல்லி உள்பட பல மாநிலங்களில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் அதிமுக திமுக ஆட்சிகளில் அதைக் கொண்டு வரப்படுவதில்லை. அதற்கு காரணம்தமிழ்நாட்டில் 1967 க்கு முன் இருந்த முதலமைச்சர்கள் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை . திமுக, ஆட்சிக்கு வந்த பிறகு, எம்ஜிஆரை தவிர, எல்லா முதல் அமைச்சர்கள் மீதும் ஊழல் புகார்கள், வழக்குகள் இருந்துள்ளன. மேலும்

மக்களின் எதிர்பார்ப்பு நேர்மையான நிர்வாகம், யாரும் ஊழல் நிர்வாகத்தை கொடுங்கள் என்று கேட்கவில்லை .அப்படி இருக்கும்போது தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், தமிழ்நாட்டில் அதிகப்படியான ஊழல் சொத்துக்கள் வாங்கி குவித்து இருக்கிறார்கள். இந்த சொத்துக்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வெளி மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் முதலீடு செய்கிறார்கள்.

 இதனால் பாதிக்கப்படுவது ஏழை ,நடுத்தர குடும்பங்கள் இவர்கள் உழைப்பால் முன்னேற முடியவில்லை. தன்னுடைய திறமையால் முன்னேற முடியவில்லை .அரசியல் என்ற அதிகாரத்தின் மூலம் மக்களை ஏமாற்றி கையில், காலில் விழுந்து, காசு கொடுத்து அல்லது பணமும், இலவச பொருட்களும் கொடுத்து, பெறுகின்ற அதிகாரம், இந்த அரசியல் அதிகாரம்.

மேலும்,அடிப்படை அரசியல் அறிவு இல்லாத மக்கள், இவர்களிடம் பணம் வாங்குகிறார்கள். தெரிந்தவர்கள் ஒருபோதும் வாங்குவதில்லை. இப்போதும் கேள்விப்படுகிறேன் .சிலர் கொடுத்தும் கூட அதை வாங்க மாட்டேன் என்று மறுத்திருக்கிறார்கள். இந்த சம்பவம் சென்னையில் நடைபெற்றுள்ளது. கிராமங்களில் நடைபெற்றுள்ளது. இது அரசியலைப் பற்றி அடிப்படைத் தெரிந்த மக்களின் கருத்து. அவர்கள் சுதந்திரமாக வாக்களிக்கிறார்கள். மேலும்,.

 தேர்தல் ஆணையத்திற்கு இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிகையின் பல கட்டுரைகள், கருத்துக்கள் ,செய்திகள் வெளியிட்டும் தேர்தல் ஆணையம் இதுவரை அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை .அதற்கு தேர்தல் ஆணையம் தான் பொறுப்பு. மக்களின் கோரிக்கையை தேர்தல் ஆணையத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

 ஆனால், தேர்தல் ஆணையம் அலட்சியம் செய்வது ,இந்த தேசத்தின் மீது ஒரு பொறுப்பற்ற தன்மை தான் அது வெளிப்படுத்துகிறது.

தவிர, ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால், தமிழ் நாட்டில் லோக் ஆயுக்தா சட்டம் கொண்டு வர வேண்டும். இங்கே அதை கொண்டு வர மாட்டார்கள். காரணம் தமிழகம் ஊழலில் திளைத்துக் கொண்டிருக்கிறது.

இதற்கு ஒரே வழி, தமிழகம் இன்னும் சிறப்பான மாநிலமாக மாற வேண்டுமென்றால், அதற்கு லோக் ஆயுக்தா சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். இதற்கு நீதிமன்ற சட்ட வல்லுனர்கள், சமூக நலன் கருதி பொது நல வழக்கு தொடர்ந்து, இங்கே அதை நடைமுறைப்படுத்த உச்சநீதிமன்ற உத்தரவால் மட்டுமே முடியும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும், தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *