மத்திய அரசு காலம் முறை பருவ இதழ்களுக்கு புதிய சட்டத்தை டிசம்பர் 21 ,2023 இல் கொண்டு வந்துள்ளது. அது பத்திரிக்கை பதிவு செய்வதற்கு இனி ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம் .அதற்காக மாவட்ட நிர்வாகத்தையோ ,மாவட்ட நீதிபதிகள் மற்றும் மாவட்டத்தின் ஆட்சியர் அதிகாரிகளின் அறிவிப்பை தாக்கல் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. மேலும், அச்சகங்கள் அத்தகைய அறிவிப்புகளை வழங்க வேண்டியதில்லை .மாறாக ஒரு தகவல் மட்டும் போதுமானதாகவே இருந்தால் போதும் என்றும், பல சரத்துக்கள் உள்ளடக்கிய மசோதாவை நிறைவேற்றி உள்ளது .
இது பத்திரிகை சுதந்திரத்திற்கு தேவையானதாக எடுத்துக் கொண்டாலும் ,இந்த பத்திரிகைகள், எந்த முறையில் மக்களுக்கு பயனுள்ள செய்திகளை வெளியிட்டு வருகிறது? இணையதளத்தில் இதனுடைய பயன்பாடுகள் மக்களுக்கு எவ்வாறு உள்ளது? அரசுக்கு இதனுடைய செய்திகள் எவ்வாறாக உள்ளது ?இதை எதையும் ஆய்வு செய்யாமல் ,அதனுடைய வளர்ச்சிக்காக சலுகை ,விளம்பரங்கள் கொடுப்பது சம்பந்தமாக எந்த மசோதாவும் நிறைவேற்றவில்லை. இது சமூக நலன் கருதி வெளிவரும் இத்தகைய பத்திரிகைகளுக்கு மத்திய அரசு கொண்டுவந்துள்ள இந்த சட்டம், எங்களைப் போன்ற பத்திரிக்கை ஆசிரியர் மற்றும் வெளியிட்டாளர்களுக்கு ஏமாற்றம்தான்.
மேலும் ,எத்தனையோ விஷயங்கள், இந்த பத்திரிகைகள் மூலம் அரசுக்கு மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தும் ,இந்த பத்திரிகைகளின் வளர்ச்சிக்கு பாதுகாப்பிற்கு, எந்த நலன்களையும், அறிவிக்காதது, இந்த பத்திரிகைகளை வஞ்சிக்கும் செயல் .
ஆனால்,ஒட்டுமொத்த பத்திரிக்கையும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டது. அது RNI பதிவு சட்டம் மூலமாக என்பது இந்த மசோதாக்கள் மூலம் தெளிவாகப் பட்ட உண்மை. ஆனால், கார்ப்பரேட் பத்திரிகைகளுக்கு மட்டும் , இந்த சலுகை ,விளம்பரங்கள் மக்களின் வரிப்பணத்தில் பல கோடிகளை கொடுத்து வருவது ,சமூக நலனுக்காக போராடிவரும் பத்திரிகைகளுக்கு மத்திய ,மாநில அரசுகள் வஞ்சிக்கும் செயல்.
மேலும், பத்திரிகை என்றால், இவர்களை பாராட்டி விளம்பரப்படுத்தும், வேலை தான் என்று முடிவு செய்து விட்டார்கள். பத்திரிக்கை என்பது எந்த நோக்கத்திற்கு ஆனது ?என்பதை இன்று வரை, மத்திய மாநில அரசுகளின் செய்தித்துறை உயர் அதிகாரிகள் கூட செய்தித்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கவில்லை. இது பற்றி பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (press council of india)கூட விவாதிக்கவில்லை. மேலும் ,மக்களின் வரிப்பணத்தில் பத்திரிகை ,தொலைக்காட்சிகளை நடத்திக் கொண்டு ,மத்திய மாநில அரசுகளை விளம்பரப்படுத்தினால் போதும், மக்களைப் பற்றி கவலையில்லை.
மக்களுக்கு உண்மையான செய்திகள் போய் சேர வேண்டியது இல்லை. நிர்வாகத்தின் சீர்கேடுகள் வெளிப்படுத்த வேண்டியதில்லை. நாட்டில் எவ்வளவு ஊழல் செய்தாலும் ,அந்த ஊழல்வாதிகளை பாராட்டி அவர்கள் சொல்லும் செய்திகளை போட்டுக்கொண்டு, இவர்களை பாராட்டி விளம்பரப்படுத்தி ( விளம்பரம் சலுகை அரசு அடையாள அட்டை பஸ் பாஸ் போன்ற ) பரிசுகளை பெற்றுக் கொள்ளலாம். மேலும், இந்த கார்ப்பரேட் நிறுவனங்களின் ஆரம்பம் எப்படி இருந்தது? என்பதை பற்றி அவர்களுடைய சர்குலேஷன் என்ன ?அன்றைய கால இவர்களுடைய பத்திரிகை எப்படி இருந்தது? இதைப் பற்றி எல்லாம் மத்திய மாநில அரசுகளின் செய்தித் துறை ஆய்வு செய்ய தவறிவிட்டது.
தவிர,அன்று தலையில் தூக்கி விற்பனை செய்து வந்த தினத்தந்தி இலவச பெறுதிகளை டீக்கடைகளில் போட்ட தினமலர் இன்று கார்ப்பரேட் கம்பெனிகள் ஆகிவிட்டது என்பது பொதுமக்களுக்கும் அரசு உயர் அதிகாரிகளுக்கும் தெரியுமா? இதற்கு நீதிமன்றம் தான் தீர்வாக அமையும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அதுமட்டுமல்ல, இது பற்றி நீதிமன்றம் தான் ஆய்வு செய்து உண்மை நிலையை மத்திய, மாநில அரசுக்கு எடுக்க வேண்டும் என்பது எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்களின் கோரிக்கை. மேலும் இணையதளத்தின் முக்கியத்துவத்தை மக்கள் உணர்ந்திருந்த போதிலும், அதற்கான செய்திகளை வெளியிடும்.
இணையதளத்தில் சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளின் நலன்களை பற்றியும் ,அதற்கான அரசு அங்கீகாரப் பதிவையும் ,வளர்ச்சிக்கான சலுகை, விளம்பரங்கள், அரசு அடையாள அட்டை ,பஸ் பாஸ் உள்ளிட்டவை எதைப் பற்றியும் கொடுக்காமல், இப்படி இது பொதுநலத்தில் ஒரு சுயநலமான சட்டமாகத்தான் எங்களைப் போன்ற சமூக நலன் சார்ந்த பத்திரிக்கை மற்றும் பத்திரிக்கையாளர்களுக்கு உள்ளது, என்பதை மத்திய, மாநில அரசுக்கும், பொது மக்களுக்கும் ,இந்த உண்மையை வெளிப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
மேலும்,பத்திரிக்கையாளர்கள் நல வாரியத்தில் கூட ,சமூக நலன் சார்ந்த பத்திரிக்கையாளர்கள் ஒருவர் கூட அதில் உறுப்பினராக இல்லை. கார்ப்பரேட் பத்திரிகையின் ஆசிரியர் இந்து ராம் மற்றும் பல பத்திரிகைகளில் பணியாற்றக் கூடிய பத்திரிகையாளர்களை மட்டுமே உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அப்படி என்றால் இந்த பத்திரிகைகளுக்கு மட்டும் தான் தேவையானதை அவர்கள் கேட்டு வாங்கிக் கொள்வார்கள் .இதற்காக பேசுபவர்கள் யார்? இங்கே பொதுநலம் என்பது கேள்விக்குறியாக இருக்கும்போது இந்த பத்திரிகைகள் எப்படி மக்களின் பொதுநலத்தில் ஆர்வம் காட்டும் ? ஆட்சியாளர்கள், அரசியல் கட்சிகள், கார்ப்பரேட் பத்திரிகை நிறுவனங்கள் ,அரசு அதிகாரிகளின் சுயநல கூட்டணி தான் இன்றைய பத்திரிக்கை துறை .
மேலும் சர்குலேஷன் என்ற தவறான விதிமுறைகளை பயன்படுத்தி இவர்களுக்கு சாதகமான மற்றும் பொய்யான தகவல்களை கொடுத்து, மக்களின் வரிப்பணத்தை எந்தெந்த பத்திரிகைகள் எத்தனை கோடிகள் ஆண்டுக்கு அனுபவித்து வருகின்றன என்பதை நீதிமன்றம் ஆய்வு செய்தால் உண்மை தெரிய வரும் .மேலும், தகுதியில்லாத சில பத்திரிகைகளில் வரும் செய்திகளையும், பத்திரிகைகளையும் கணக்கு காட்டி ஒட்டுமொத்த பத்திரிகையும், அதுதான் என்று மத்திய மாநில அரசு செய்தித்துறை தீர்மானிக்கிறதா? தவிர, அதுதான் செய்து துறை அதிகாரிகளுக்கு கமிஷன் தொகையா ? மேலும்,
செய்திகளின் நோக்கம் மக்களுக்கு பயனளிக்காத போது, சர்குலேஷன் எப்படி பயனளிக்கும் ? இதற்கு மத்திய மாநில அரசின் செய்தித் துறை அதிகாரிகள் விளக்கம் தருவார்களா ? இப்படி மக்களின் வரிப்பணத்தில் சலுகை, விளம்பரங்கள் அனுபவிக்கும் பத்திரிக்கை ,தொலைக்காட்சிகள்மக்களுக்கான உண்மையான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எத்தனை ? இதை அரசியல் தெரிந்தவர்கள் ,சமூக ஆர்வலர்கள் ,விஷயம் தெரிந்தவர்கள், இந்த பத்திரிகைகளின் செய்திகளை பெரும்பாலும் ஏற்றுக் கொள்வதில்லை . அதனால்,
இன்று பத்திரிக்கை துறை சுய பரிசோதனை செய்ய வேண்டிய காலகட்டத்திற்கு வந்துள்ளது. போலி எது? உண்மை எது?தெரியாமல் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் பல பத்திரிகைகள், நாட்டுக்கு எதிரான மறைமுக அந்நிய சக்திகளின் கைக்கூலிகளாக இருக்கும் பத்திரிகைகள் ,அரசியல் கட்சிகளுக்கு ஜால்ராவாக இருந்து வரும் பத்திரிகைகள், இவை அனைத்தும் பத்திரிகைகள் என்று அரசின் சலுகை ,விளம்பரங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.
இதில் நீதிமன்றம் தலையிட்டு எங்களுக்கு நீதி வழங்காமல், இந்த பத்திரிகைகளின் வளர்ச்சி, இதை நம்பி உள்ள ஆயிரக்கணக்கான பத்திரிகை மற்றும் பத்திரிக்கையாளர் குடும்பங்கள் கேள்விக்குறி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை .
மேலும் மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத்தின் தமிழாக்கம் என்ன சொல்கிறது ?
இணைப்பு
பத்திரிகை மற்றும் காலக்கெடுவை பதிவு செய்ததன் முக்கிய அம்சங்கள் மசோதா 2023I. தலைப்பு ஒதுக்கீடு மற்றும் பதிவு காலச் சான்றிதழ்களின் மானியம்
தலைப்புச் சரிபார்ப்புக்கு விண்ணப்பிப்பதற்கும், பத்திரிகை பதிவாளர் ஜெனரலால் பதிவுச் சான்றிதழை வழங்குவதற்கும் ஒரே நேரத்தில் செயல்முறையாக ஒரு காலக்கெடுவுக்கு எளிய ஆன்லைன் வழிமுறையை இந்த மசோதா வழங்குகிறது.உள்ளூர் அதிகாரசபையின் முன் எந்தவொரு அறிவிப்பையும் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை அல்லது உள்ளூர் அதிகாரசபையால் அதன் அங்கீகாரத்தை வழங்க வேண்டிய அவசியமில்லை.
பயங்கரவாதச் செயல் அல்லது சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்பட்ட குற்றத்துக்காக, அல்லது அரசின் பாதுகாப்பிற்கு எதிராக ஏதேனும் செய்த குற்றத்திற்காக, நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒரு நபர், ஒரு காலக்கெடுவை வெளியிட அனுமதிக்கப்படமாட்டார்.ஒரு வெளிநாட்டு இதழின் முகநூல் பதிப்பை, மத்திய அரசின் முன் அனுமதியுடன் இந்தியாவில் அச்சிடலாம் மற்றும் பத்திரிகைப் பதிவாளர் ஜெனரலில் பதிவு செய்யலாம்.
II. அச்சகங்கள்
பத்திரிக்கைப் பதிவாளர் ஜெனரல் மற்றும் உள்ளூர் அதிகாரசபைக்கு ஆன்லைன் அறிவிப்பை வழங்குவதற்காக ஒரு கால இதழின் அச்சுப்பொறி.
அச்சுப்பொறியால் உள்ளூர் அதிகாரசபையின் முன் எந்தவொரு அறிவிப்பையும் தாக்கல் செய்யவோ அல்லது அதிகாரசபையிடமிருந்து அங்கீகாரத்தைப் பெறவோ தேவையில்லை.
III. மாவட்ட மாஜிஸ்திரேட்/உள்ளூர் அதிகாரத்தின் பங்கு
பதிவுச் சான்றிதழையும், உரிமைப் பங்கீட்டையும் வழங்குவது தொடர்பாக, மாவட்ட மாஜிஸ்திரேட்/உள்ளூர் அதிகாரத்தின் மிகச்சிறிய பங்கை இந்த மசோதா எதிர்பார்க்கிறது.
ஒரு விண்ணப்பத்தைப் பெற்றவுடன், மாவட்ட நீதிபதி தனது கருத்துக்களை/என்ஓசியை 60 நாட்களுக்குள் செய்திப் பதிவாளர் ஜெனரலுக்கு வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது; அதன்பிறகு, 60 நாட்களுக்குப் பிறகு DM/உள்ளூர் அதிகாரியிடமிருந்து கருத்துகள்/NOC பெறப்படாவிட்டாலும், பதிவாளர் ஜெனரல் பதிவு வழங்குவதற்கான முடிவை எடுக்கத் தொடரலாம்.
ஒரு வெளியீட்டாளர் மாவட்ட மாஜிஸ்திரேட் முன் எந்த அறிவிப்பையும் தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை.
புத்தகங்களை அச்சிடுதல் மற்றும் பதிவு செய்தல் சட்டம் 1867 மற்றும் பத்திரிகை மற்றும் பத்திரிக்கைகள் பதிவு மசோதா 2023 ஆகியவற்றுக்கு இடையே உள்ள வேறுபாடு
PRB சட்டம் 1867 இன் ஒரு பகுதியாக இருந்த புத்தகங்கள் PRP மசோதா 2023 இன் வரம்பிலிருந்து நீக்கப்பட்டன, ஏனெனில் புத்தகங்கள் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகின்றன.
அச்சு இயந்திரங்கள் மாவட்ட ஆட்சியரிடம் எந்த அறிவிப்பையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை; பத்திரிகை பதிவாளர் ஜெனரல் மற்றும் மாவட்ட மாஜிஸ்திரேட் முன் ஆன்லைன் அறிவிப்பை மட்டுமே தாக்கல் செய்ய வேண்டும்.
மாவட்ட அதிகாரத்தின் முன் பருவ இதழின் வெளியீட்டாளர் எந்த அறிவிப்பையும் தாக்கல் செய்ய வேண்டியதில்லை; தலைப்பு ஒதுக்கீடு மற்றும் பதிவுச் சான்றிதழுக்கான விண்ணப்பம் செய்யப்படும் .