ஜூலை 04, 2024 • Makkal Adhikaram
ஒருவரை பத்திரிகையாளர் என்று தீர்மானிக்க அக்ரி டேசன் கார்டு தான் தீர்மானிக்கிறதா? என்ற கேள்வி பத்திரிக்கையாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மட்டுமே சொந்தமான இந்த அக்ரி டேசன் கார்டு மற்ற பத்திரிகைகளுக்கு அது கொடுப்பதில்லை. இது எந்த ஆட்சி வந்தாலும், அவர்களுக்கு ஏற்றார் போல் ஜால்ரா தட்டுவது தான் இந்த பத்திரிகைகளின் வேலை.
அதனால் அவர்களுக்கு அக்கடேசன் கார்டு முதல் எல்லா சலுகைகளும் கிடைக்கும். விளம்பரங்கள் கிடைக்கும். ஆனால், கிடைக்காதவர்கள் தலைமைச் செயலகத்தின் உள்ளே செல்வதற்கு கூட இந்த வழியை செல்ல முடியாது. நீங்கள் அந்த வழியே செல்லுங்கள் .அங்கே போய் உங்கள் பைகளை செக் செய்து கொண்டு, எதற்காக செல்கிறீர்கள்? ஏன் செல்கிறீர்கள்? இந்த கேள்விக்கெல்லாம் பதில் சொல்லிவிட்டு, இந்த பத்திரிகைகளை எல்லாம் ஒரு இளக்காரமாக கேள்வி கேட்டுக் கொண்டு, பத்திரிகை துறையை அவமானப்படுத்தும் நோக்கில் செயல்படுவது, எங்களுக்கு எல்லாம் வேதனை அளிக்கிறது.
நாங்கள் சமூக நலன் பத்திரிகைகளாக சமூகத்திற்கு உண்மையை வெளிச்சம் போட்டு காட்டும் பத்திரிகைகளாக இருக்கும்போது, ஒரு தலைமைச் செயலகத்திற்கு உள்ளே சென்று வருவதற்கு கூட ,காவல்துறையின் தவறான அணுகுமுறை வேதனை அளிக்கிறது. அது மட்டுமல்ல, ஒருவர் பத்திரிகை என்றால் இரண்டு கொம்பா? என்று கூட பேசுகிறார். இது எல்லாம் பத்திரிக்கை துறைக்கு திமுக ஆட்சியில் கிடைக்கின்ற மரியாதை என்று தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். பத்திரிகை சுதந்திரம் இவர்கள் தேவையானால் பேசிக் கொள்வார்கள். தேவையில்லையென்றால், அதை மிதித்து கொண்டிருப்பார்கள். இந்த வேலையெல்லாம் பத்திரிகை என்றால் தெரியாதவனிடம் பேசிக் கொண்டிருக்க வேண்டும்.
இதை தான் ஒரு தலைமைச் செயலகத்தில் உள்ளே இணை இயக்குனரிடம் கேட்டேன் . அவர் உங்களிடம் பேச முடியாது சார் என்று சொல்லிவிட்டார். பேசுவதற்கு நிறைய இருக்கிறது. நீங்கள் எத்தனை கார்ப்பரேட் வேண்டுமானாலும் உட்கார வையுங்கள் நான் பேசுகிறேன் என்றேன். ஏனென்றால், உள்ளே வருவதற்கு அவர்கள் பி.ஆர்.ஓ சொன்னார்கள் என்றார்கள் .எந்த பிஆர்ஓ சொன்னார்?என்று சொல்லுங்கள் என்றால் நாங்கள் சொல்லவில்லை. என்று சொல்லிவிட்டார்கள் .
அதனால், காவல் துறையே இந்த அக்ரி டேசன் கார்டு இருந்தால்தான் உள்ளே விட வேண்டும் என்ற ஒரு முடிவை எடுத்திருந்தால், இது ஒரு தவறான முடிவு. மேலும், அக்ரடேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு எல்லாம் பத்திரிகையாளர்கள் என்ற தகுதி இருக்கிறதா? என்பதை காவல்துறை தீர்மானிக்க முடியுமா? மேலும், இந்த துறையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்து வருகிறது. அதை எல்லாம் மக்கள் அதிகாரம் நீதிமன்றத்தை நாடி உள்ளது.
அதனால், டிஜிபி எங்களுக்கு அடையாள அட்டை உண்டு. அந்த அடையாள அட்டை காண்பித்தாலே போதும். ஏனென்றால் எங்களுக்கு மத்திய அரசின் RNI சர்டிபிகேட் கொடுக்கப்பட்டுள்ளது . இது பற்றி காவல்துறை தலைவர் சங்கர் ஜிவால் ஷர்மா உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன். .