அக்டோபர் 27, 2024 • Makkal Adhikaram
தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு தற்போது நடந்து முடிந்துவிட்டது. நடிகர் விஜய் மிகவும் ஆக்ரோஷமாக இந்த மாநாட்டில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார்.
கட்சி கொள்கைகளை அறிவித்த அவர் கூட்டணிக்காக வெளிப்படையாக அறிவித்தார். அதன்படி 2026 ஆம் ஆண்டு தேர்தலில் கூட்டணி அமைக்க வருபவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகு தான் சினிமாவுக்கு வந்த புதிதில் தன்னை எப்படி எல்லாம் அவமானப்படுத்தினார்கள் என்பது குறித்தும் அவருக்கு கூறினார்.
மேலும் தற்போது சினிமாவில் தான் ஒரு உச்ச நட்சத்திரம் ஆக இருக்கும் பொழுது தன்னுடைய கேரியரை விட்டுவிட்டு பொது மக்களாகிய உங்களை நம்பி நான் வந்துள்ளேன். உங்கள் விஜயாக உங்களை மட்டுமே நம்பி வந்துள்ளேன் என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் யாரைப் பற்றியும் பேசி இழிவான அரசியல்செய்ய விரும்பவில்லை என்று தெரிவித்த அவர் திராவிட மாடலுனு சொல்லிட்டு மக்களை ஏமாற்றி குடும்ப அரசியல் செய்யும் கட்சிதான் முதல் எதிரி என்று கூறினார். மேலும் கட்சி கொடி காண விளக்கமும் பாடல் வாரியாக நடிகர் விஜய் விளக்கம் அளித்தார்.
மேலும் காவல்துறையினர் மாலை 7 மணிக்கு முன்னதாகவே மாநாடை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் தற்போது 6.30 மணிக்கே மாநாட்டை முடித்துவிட்டு விஜய் அங்கிருந்து கிளம்பிவிட்டார்.