நாட்டில் பொங்கல் என்று வந்தால் தமிழக மக்களுக்கு இலவசமாக ஆயிரம்,இரண்டாயிரம்,மூவாயிரம் என்று திமுக, அதிமுகவினரே கொடுத்து,கொடுத்து பழக்கப்படுத்தி விட்டார்கள். மேலும்,
ஸ்டாலின் கடந்த ஆண்டு கூட ஆயிரம் ரூபாய் மற்றும் பொங்கள் இலவச பொருட்கள் கொடுத்தார். ஆனால்,இந்த ஆண்டு எதுவுமே இல்லாமல் கரும்பு,வெல்லம், சர்க்கரை இதை தான் உங்கள் தொகுப்பாக கொடுக்கப் போகிறார்களா?
இப்படி 50 ஆண்டுகால ஆட்சியில் பொங்களுக்கு பணமும்,இலவசத்தையும் கொடுத்து பழகிவிட்டீர்கள். திமுக இப்போது இல்லை என்றால் மக்கள் சும்மா இருப்பார்களா? அதனால் தான் தேர்தல் என்று வந்தால் ஓட்டுக்கு 5000,பத்தாயிரம் கொடுக்கிறார்கள். அதுக்கு எப்படி நிதி வருகிறது? என்று சில,கிராம மக்கள் தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கீறார்கள்.
மேலும்,பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசு கடந்த ஆண்டு 90 ஆயிரம் கோடி கடன் வாங்கினீர்கள். இந்த ஆண்டு ஒரு லட்சம் கோடி கடன் வாங்க போகிறீர்கள். வாங்குகின்ற கடனை என்னதான் செய்கிறீர்கள்? இவ்வளவு கடன் வாங்கியும் ஆயிரம் ரூபாய் கூட கொடுக்க முடியவில்லை என்றால், என்ன அரசு நடத்திக் கொண்டிருக்கிறீர்கள்?
மேலும்,இது பற்றி கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி.கார்த்திக் சிதம்பரம் போல பல நாடுகளில் சொத்துக்களை வாங்கி குவித்து இருந்தால், ஆயிரம் என்பது பெரிய விஷயம் இல்லை தான். அந்த ஆயிரம் கூட பெரிதாக இருக்கின்ற மக்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். அதனால்,அவர்களுக்கு ஆயிரம் பெரிது தான்.
மேலும்,மகளிர் உரிமைத் தொகை வேறு, இது வேறு, என்று பேசுகீறார்கள். தவிர,எடப்பாடி பழனிசாமி ஆட்சியில் 2000 ரூபாய் கொடுக்கும்போது,ஸ்டாலின் 4000 கொடுக்க வேண்டும் என்று சொன்னார்.இப்போது ஆயிரம் கூட இல்லை என்கிறாரே, இது ஞாயமா? – கிராம மக்கள் வேதனை தமிழக முதல்வருக்கு புரியுமா?. மேலும்,
இப் பிரச்சனை குறித்து பாஜக வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்றத்தில்,பொதுநல வழக்கு தொடர்ந்துள்ளார் .