திமுகவின் ஆட்சியின் ஒவ்வொரு செயல்பாடுகளிலும், மக்கள் நலன் சார்ந்த திட்டங்களுக்காக இந்த ஆட்சியில் இல்லை என்கின்றனர் பொதுமக்கள். காரணம், இன்று அதிக அளவில் கலாச்சாராயம், டாஸ்மாக் ,போதைப்பொருள், இது மக்களை போதையில் தள்ளாட வைத்து அவர்களுடைய வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் என்கிறார்கள். இதனால் அதிக அளவில் சாலை விபத்து ஏற்படுகிறது. தவிர, டூவீலர் ஓட்டுபவர்கள் இரவு ஏழு மணிக்கு மேல் சாலையில் செல்வது, மிகவும் போராட்டமாகவும், கஷ்டமாகவும் இருக்கிறது என்கிறார்கள் . இதற்கு காரணம் குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து விட்டது.
இதை தடுப்பதற்கு காவல்துறை அபராதம் விதித்தால் மட்டும் போதாது, முதலில் டாஸ்மாக் கடையின் நேரத்தை மாற்ற வேண்டும். அப்போதுதான் இந்த சாலை விபத்தை குறைக்க முடியும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். அடுத்தது கனிமவள சவடு மண், மணல் மற்றும் கல்குவாரிகள் போன்றவற்றால் பொதுமக்கள் படும் வேதனை, அதிகாரிகள் படும் வேதனை, சொல்லி மாளாது என்கிறார்கள்.மேலும்,
சமீபத்தில் கூட திருவள்ளூர் மாவட்டத்தில் பனப்பாக்கம் என்ற கிராமத்தில் எடுக்கின்ற சவுடு மண். இந்த சவடு மண் ஏற்றி வந்த ஒரு லாரி டூவீலரில் வந்த ஒருவர் மீது ஏற்றி ,அடிபட்டு அந்த இடத்திலேயே மரணமடைந்துள்ளார். அதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும், அந்த சவுடு மண் குவாரி நிறுத்தாமல், செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இது எப்படி இருக்கிறது? என்றால், இந்த ஆட்சியின் அவலம் யார் செத்தாலும், பரவாயில்லை. எங்களுக்கு தேவை பணம். அந்த பணத்திற்காக எத்தனை பேர் உயிரிழந்தாலும், அது கலாச்சாராயமாக இருந்தாலும், அல்லது இது போன்ற மணல் கொள்ளையில் செத்தாலும் ,எங்களுக்கு கவலை கிடையாது. அதே போல் அதிகாரிகள் மிரட்டப்படுவது, கொலை செய்யப்படுவது ,இது என்ன ஆட்சி ?என்று தெரியவில்லை என்கிறார்கள் பொதுமக்கள்.
மேலும், நல்லவர்கள் வேஷம், நடிப்பாற்றலில் ,பேச்சாற்றலில் இவர்களை மிஞ்ச முடியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் கிராமங்களில் ஆடு, மாடு மேய்ப்பவர்கள் ,டாஸ்மாக் கடைகளில் போதைக்கு அடிமையானவர்கள், எப்படியும் பேசுபவர்கள் ,எப்படியும் வாழ்பவர்கள், சகித்துக் கொள்வார்கள் .ஆனால், படித்தவர்கள், அரசியல் தெரிந்தவர்கள் ,விவரமானவர்கள் ஒருபோதும் இதையெல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள்.
மேலும், இந்த ஆட்சியில் பொதுமக்களின் குறைகள், புகார்கள், எதைப் பற்றியும் கவலைப்படாமல் ,அதிகாரிகள் நாங்கள் சொல்வதை மட்டுமே நீங்கள் செய்தால் போதும், நீங்கள் எதுவும் மக்களுக்கு செய்ய வேண்டாம்.
மக்களை நாங்கள் பேசி சமாளித்துக் கொள்கிறோம். ஏனென்றால், நாங்கள் பேசி தான் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறோம். ஆட்சியைப் பிடித்தோம். இதுதான் எங்கள் வரலாறு. இதுதான் எங்கள் ஆட்சியின் மாடல். – இதற்கு காலமே பதில்.