கடந்த காலங்களில் ஈவேரா பெரியார் முதல் திமுக, அதிமுக வரை இந்துக்களையும், இந்து மதத்தையும், மேடைக்கு மேடை தரக்குறைவாக விமர்சித்திருக்கிறார்கள். அதை கருணாநிதி, எம் ஜி ஆர், ஜெயலலிதா, போன்றோர் யாரும் விமர்சிக்கவில்லை. ஆனால், கட்சியினர் விமர்சித்திருக்கிறார்கள்.
தற்போது உதயநிதி எல்லோருக்கும் மேலே சென்று, இந்து மதத்தையே ஒழிக்க வேண்டும். அப்போதுதான் சனாதனத்தை ஒழிக்க முடியும்.அதுவும் டெங்கு, மலேரியா ,போன்று ஒழிக்க வேண்டும் என்கிறார் .ஏனென்றால், இந்து மதம் வேறு ,சனாதனம் வேறல்ல. இந்த வார்த்தை கிருத்துவ மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று யாராவது பேசி இருக்கிறீர்களா? அல்லது முஸ்லிம் மதத்தில் உள்ள மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என்று யாராவது பேசி இருக்கிறீர்களா? அது என்ன இந்து மதம் மட்டும் உங்களுக்கு அவ்வளவு கேவலமான மதமாக தெரிகிறதா? இல்லை அதை வைத்து அரசியல் பிழைப்பு நடத்தலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறீர்களா?
இந்து மதத்தின் கலாச்சார பாரம்பரியம் ,பழமை வேறு எந்த மதத்திற்கும் இல்லாத ஒரு சிறப்பு இந்து மதம். இந்த மாதத்தில் பிறப்பதற்கு ஒரு புண்ணியம் செய்திருக்க வேண்டும் .இந்த ஒரு மதத்தில் மட்டும் தான் வாழ்க்கை என்பது தெய்வீகத்தோடு இணைந்தது. தெய்வ நம்பிக்கையில் வாழும் ஒரே மதம், இந்து மதம். தெய்வ நம்பிக்கையில் வாழ்க்கையோடு பிணைந்தது, இந்துமத கலாச்சாரம் .மனிதப் பிறப்பின் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்கு இந்துமத சனாதன தர்மம், இன்று வரை வழிவழியாக வாழ்ந்து கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட ஒரு சிறப்புமிக்க மதத்தை, முன்னோர்கள் அதன் சிறப்பு என்ன? என்று வாழ்ந்து, அதன் உண்மைகளை எழுதி வைத்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
அவர்கள்தான் சித்தர்கள், மகான்கள், யோகிகள் என்று பேசக்கூடிய தகுதி, சக்தி படைத்த இறை ஆத்மக்கள் ,அழிவில்லாத ஆத்மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வழி நடத்துகிறார்கள். அவர்கள் தான் இந்த உலகத்தை வாழ வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய அருள் இன்றி, இந்த உலகத்தில் எதுவும் நடக்காது. பரம்பொருளோடு நேரடி தொடர்பில் இருப்பவர்கள். அன்பே, கருணையே, வடிவான தெய்வமும், அவர்கள் தான் .அவர்கள் தான் மனிதப் பிறவியின் கர்மாவை தீர்த்து வைக்கும் கடவுள்கள். எத்தனை தெய்வங்களை வணங்கினாலும், கர்மாவின் கணக்கை தீர்க்க முடியாது.
கர்மாவின் கணக்கை தீர்ப்பவர்கள் மகான்கள் மட்டுமே,அதுவும் அவர்களுக்கு இந்த உலகில் எந்த ஆத்மாவுக்கு தீர்க்க வேண்டும்? என்ற கணக்கு இருப்பவர்களுக்கு மட்டுமே அதை செய்வார்கள். இது ஒரு புரியாத கணக்கு. இந்த கணக்கை புரிந்து கொள்பவர்கள் ,இறைவனோடு மனதில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும் .அவர்களுக்கு தான் அதை புரிய வைப்பார்கள்.
மேலும், இந்த மகான்களின் தரிசனம் ,அவர்களுடைய வழிபாடு, அவர்களுடைய காட்சி, அவர்களுடைய அருள் கிடைப்பது, எளிதான காரியம் அல்ல. பல பிறவிகளில் புண்ணியம் செய்தவர்களுக்கு மட்டுமே, அது கிட்டும். அப்படிப்பட்ட உயர்ந்த இந்து மதத்தை, இந்து மத கலாச்சாரத்தை, இந்து மதத்தின் பாரம்பரியமிக்க, பெருமைமிக்க சனாதன தர்மத்தை, பற்றி இழிவாக பேசுவதற்கு இவர்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? மேலும், இப்படி பேசுபவர்கள் ஈனப்பிறவிகளாக தான் இருப்பார்களே ஒழிய, ஒரு உயர்ந்த பிறவிகளாக இருக்க மாட்டார்கள்.
இந்து மதம் உயர்ந்த ஒழுக்க நெறியும், தர்மத்தையும் போதிக்கின்ற ஒரு மதம். இதில் போலி சாமியார்கள் இருக்கலாம். அதை வைத்துக்கொண்டு பேசும் பகுத்தறிவு முட்டாள்களுக்கு ஒழுக்கம் என்பது என்ன? என்று தெரியாமல் பேசிக்கொண்டு இருக்கும் பகுத்தறிவு போர்வையில், உண்மை தெரியாமல் வாழ்ந்து விட்டு சாகுகின்ற கூட்டமே,
இந்து மதத்தில் மட்டும் தான், ஒருவன் எந்த ஜாதியில் பிறந்தாலும், அவன் உயிர் நிலை அடைவதற்கு அத்தனை வழிமுறைகள் வகுத்திருக்கிறார்கள். அதை உங்களால் கடைப்பிடித்து வாழ முடியுமா? தவிர ,உங்களைப் போன்று திருமாவளவன், சீமான் மற்றும் சில அரசியல் கட்சிகள், இந்து மதத்தை பற்றி தெரியாமல் பேசிக் கொண்டிருக்கிறார்கள் .அல்லது அரசியல் சுயநல லாபத்திற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இப்படி நீங்கள் எல்லோரும் சேர்ந்து பேசிக் கொண்டிருந்தால், இந்துக்கள் அனைவரும் இனி முட்டாள்களாக இருக்க மாட்டார்கள். உங்களுடைய பகுத்தறிவு பேச்சுக்களை நம்பி ஏமாறவும் மாட்டார்கள்.
எப்போது பிஜேபி இந்து மதத்திற்கு ஆதரவாக குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டதோ, அப்போது இந்து மத அமைப்புகள், உங்களுடைய பகுத்தறிவு பித்தலாட்ட பேச்சுகளுக்கு குரல் கொடுக்க ஆரம்பித்து விட்டதோ, அப்போதே அது உங்களுக்கு எதிராக எதிர்வினை ஆற்ற வந்துவிட்டது என்பதை உறுதியாக நம்பலாம். நீங்கள் இனி பிஜேபி பற்றியோ அல்லது சனாதனத்தை பற்றியோ அல்லது இந்துக்களையும், இந்து மதத்தையும், இழிவாக பேசி அரசியலில் ஓட்டு வாங்க முடியாது. எழுதி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கெல்லாம் தக்க பாடம் தமிழ்நாட்டில் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அதில் மாற்றுக் கருத்து கிடையாது.