ஏப்ரல் 19, 2025 • Makkal Adhikaram

திமுகவின் ஊழல் ஆட்சி! மக்களுக்கு 50 சதவீதம் தெரிந்திருக்கிறது. மீதி 50 சதவீதம் ஊடகங்களுக்கு சலுகை, விளம்பரத்தின் மூலம் கொடுக்கப்படும் பணத்தால் மக்களை ஏமாற்றும் போய் செய்திகளை போட்டு பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

அதாவது வாங்கிய கூலிக்கு இந்த ஊடகங்கள் வேலை செய்து கொண்டிருக்கிறது. இது பற்றி சோசியல் மீடியாக்களே இன்று வெட்ட வெளிச்சமாக வெளியிட்டு வருகிறார்கள். தற்போது அவர்கள் தான் ஊடகங்கள் போல் தெரிகிறது. மேலும், இவர்கள் என்னதான், திமுகவிற்காக வாக்காளத்து வாங்கினாலும், குறிப்பிட்ட சதவீத மக்கள் இந்த ஊடகங்களை நம்புவதில்லை. அந்த அளவிற்கு,இந்த ஊடகங்கள் மீதும், திமுகவின் மீதும் நம்பிக்கை மக்கள் இழந்து விட்டார்கள்.

அதே போல் தான் நீதிமன்றத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து விட்டது. ஒரு மனிதனின் கடைசி நம்பிக்கை நீதிமன்றமாக இருக்க வேண்டும். ஆனால், அந்த நம்பிக்கை திமுக, அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் இவர்களுடைய ஊழல் வழக்குகளை விசாரிக்கின்ற நீதிபதிகள் வாய்தா கொடுத்து, இவர்களை காப்பாற்றுவது நீதிமன்றத்திற்கும், நீதிக்கும் இழைக்கின்ற மிகப்பெரிய துரோகம்.
நாட்டில் ஒரு நீதிபதி தவறு செய்தால், அவருக்கு தண்டனை யார் கொடுப்பார்கள்? கடவுள் கொடுப்பார். இதை அவர்கள் வெளியில் சொல்ல முடியாது. அவர்களுடைய வாழ்க்கையில் அது நடக்கும். எத்தனையோ நீதிபதிகள் தவறான தீர்ப்பு கொடுத்து, அந்தத் தீர்ப்பின் பாதிப்பு அவர்களைத்தான் போய் சேரும். அவர்களுடைய குடும்பத்தினருக்கு போய் சேரும்.
இதை மனதில் வைத்து நீதிபதிகள், ( நீதி தேவதையை சட்டத்தை) மக்களுக்காக பணியாற்ற வேண்டும். ஒரு நீதிபதியின் வீட்டில் எப்படி 100 கோடிக்கு மேலாக பணம் வரும்? ஒவ்வொரு நீதிபதியும், அவர்களுடைய சொத்து கணக்கு பட்டியல், ஒவ்வொரு வருடமும் வெளியிட வேண்டும். ஏனென்றால், அரசியல்வாதியும், நீதிபதியும் கைகோர்த்து விட்டால், அவ்வளவுதான் சாமானிய மக்கள் முன்னேற்றம் கேள்விக்குறியாகிவிடும்.அப்படி தான் போய்க்கொண்டிருக்கிறது, திமுகவின் ஆட்சி.

இன்றுவரை இந்த ஆட்சியில் சாமானிய சமூக நலன் பத்திரிகைகளுக்கு எவ்வித சலுகை, விளம்பரங்களும் கொடுக்காமல் ஏமாற்றுவது, சமூக நீதி பற்றி பேச ஸ்டாலினுக்கு தகுதி கிடையாது. ஊழலின் உச்சமாக திமுக ஆட்சி இருக்கும் போது, E.D. ரைடு நடத்த இவர்களுக்கு அதிகாரம் கிடையாது. அப்ப யாருக்கு அதிகாரம் இருக்கிறது? நீதிபதிகள் நடத்துங்கள். இதுதான் மக்கள் கேள்வி?

தமிழ்நாட்டில் நடக்கின்ற மிகப்பெரிய ஊழலை ஆதாரத்துடன் அமலாக்கத்துறை ரெய்டு நடத்துகிறது. ஆதாரங்கள் இல்லாமல் அமலாக்கத்துறை உள்ளே வராது. அப்படிப்பட்ட இடத்திலே, நீதிமன்றம் இவர்களுக்கு ஆதரவாக காலத்தை கடத்தி ஆதாரங்களை அழிக்க, நீதிமன்றமே துணை போகிறது. அதிகாரத்தில் இருந்து கொண்டு ஆதாரத்தை ஒரே நாளில் அழிக்க முடியும். அதற்கு கால அவகாசம் கொடுப்பது நீதிமன்றம்.

மிகப்பெரிய ஊழலான மணல் கொள்ளை, டாஸ்மாக் போன்றவற்றில் நீதிமன்றம் உள்ளே வந்து தடை போட்டுக் கொண்டிருக்கிறது. அமலாக்கத் துறைக்கு ஒரு பக்கம், அந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்த ஆதாரங்களை எல்லாம் சேகரித்து, அதை எடுத்து இருப்பார்கள்? இன்னொரு பக்கம் மத்திய அரசு அதை பாதியில் நிறுத்துங்கள் என்று சொல்கிறது .
இப்படி எல்லாம் அவர்களுடைய கைகளை கட்டி போட்டால், எப்படி நம்பிக்கையுடன் அவர்கள் செயல்படுவார்கள்? எப்படி இந்த ஊழல் நிருபிக்க முடியும்? திமுகவுக்கு நன்றாக தெரியும். அடாவடி பேச்சு, உதார் பேச்சு, உல்டா பேச்சு ,எல்லாம் கைவந்த கலை .ஆனால், ஒன்றே ஒன்று தெரியாது. அது என்ன என்றால்? மனசாட்சி உடன் பேசத் தெரியாது. மனசாட்சியுடன் செயல்பட தெரியாது. இது தான் திமுக ஸ்டாலின் ஆட்சி.