திமுக ஆட்சியில் அரசு ஊழியர்கள், பொதுமக்கள் அதிருப்தியில் இருப்பதை  வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அது எதிரொலிக்குமா ? .

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தேசிய செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட் விவசாயம்

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் மட்டும் அதிருப்தியில் இல்லை அரசு ஊழியர்களும் அதிருப்தியில் தான் இருக்கிறார்கள் என்ற தகவல் தெரிவிக்கின்றனர். இங்கே, அரசு ஊழியர்களை அரசியல் கட்சியினர், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மதிப்பதில்லை. ஒரு சிலர் மிரட்டப்படுகிறார்கள். இதை அவர்கள் வெளியிலும் சொல்ல முடியாமல், உள்ளவும் சொல்ல முடியாமல், மனதிற்குள்ளே புழங்கிக் கொண்டிருக்கிறார்கள்.இதனால் அதிருப்தியில் இருக்கின்ற அரசு ஊழியர்கள் பிஜேபி தொழிற்சங்கம் ஆரம்பிக்க அனுமதி கிடைத்தால், தமிழக முழுதும் உடனடியாக ஆரம்பிக்க இதற்கு ஆதரவு இருக்கிறது என்று தெரிவிக்கின்றனர்.

மேலும்,உள்ளாட்சித் துறை, மின்சார துறை, ஊராட்சிகள் துறை, கல்வித்துறை, போக்குவரத்து துறை, இவர்களெல்லாம் அரசுக்கு எதிரான கருத்துக்களை தான் தெரிவிக்கிறார்கள். மேலும், தற்போது பிஜேபியின் தொழிற்சங்கம் ஆரம்பிக்க உத்தரவு வந்தால், உடனடியாக பல மாவட்டங்களில் இந்த தொழிற்சங்கம் ஆரம்பிக்க காத்திருக்கிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது .அது மட்டுமல்ல,  வெள்ள நிவாரண நிதி பல பகுதிகளில் கொடுத்த பணத்தையும், பெயர் இருந்தும் அவர்களுக்கு போய் சேரவில்லை. சில தினங்களுக்கு முன் அண்ணா நகரில் பாஸ்கர் என்பவர் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு வெள்ள நிவாரணத் தொகை 6000 ரூபாய் அவர் பெயரில் வந்துள்ளது.

 ஆனால் ,பணம் கொடுப்பது நேற்றுடன் முடிவடைந்து விட்டது .இனி வந்தால் தங்களுக்கு தெரிவிக்கிறோம் என்று கூட்டுறவு கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இதுபோல் பல மாவட்ட தாலுக்கா அலுவலகங்களில்,  மக்கள் புகார் மனுக்களை கொடுத்து ஓய்ந்து விட்டார்கள் .அதே போல், தென் மாவட்டங்களிலும் இதே நிலை நடைபெற்றுள்ளது. மேலும் பொங்கல் பரிசுத்தொகை ஆயிரம் ரூபாய் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். இந்த பணமாவது தமிழக மக்களுக்கு ஒழுங்காக கொடுப்பார்களா? அல்லது இவர்களுடைய கட்சியினர் மடைமாற்றம் செய்து கொள்வார்களா ? .என்ற அதிருப்தி பொதுமக்களிடையே எழுந்துள்ளது .

இது போன்ற நிகழ்வுகள் ஜெயலலிதா இருந்தவரை அதிமுக கட்சியினர்செய்ய முடியாது. இங்கே சர்வ சாதாரணம் ஆக ,மக்களுக்கு போய் சேர வேண்டிய பணத்தைக் கூட போய் சேரவிடாமல் தடுக்கிறார்கள். இது கூட்டுறவு கடை ஊழியர்கள் தவறா ?அல்லது இவர்களுடைய உள்ளாட்சிப் பிரதிநிதிகள் முதல் திமுக மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் தவறா? யாருடைய தவறு என்பது குறித்து முதல்வர் மு க ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பாரா ?

மேலும், எல்லாத் துறைகளிலும் ,ஊழல் என்பது மலிந்து கிடக்கிறது. ஒரு பக்கம் மந்திரிகளின் ஊழல் பட்டியல், அந்த வழக்குகள் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை போய்க்கொண்டிருக்கிறது. என்னதான் அவர்களுக்கான ஊடகங்கள் அதை மறைத்துக் கொண்டு ,ஆட்சி நிர்வாகத்திற்கு முட்டு கொடுத்து  செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருந்தாலும் ,மக்களுக்கு சோசியல் மீடியாக்கள் மூலம் ,இணையதளங்கள் மூலம், சிறிய பத்திரிகைகள் மூலம், இதனுடைய உண்மை நிலை மக்களிடம் போய் சேர்ந்து கொண்டு தான் இருக்கிறது.

 அதனால் ,திமுக ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை .அவர்களுடைய சொந்த கட்சியினருக்காகவும், ஆட்சியாளர்களுக்காகவும் தான்  நடத்துகிறது. என்று பொதுமக்கள் புலம்பல் .இந்த புலம்பல் சாதாரண ஏழை ,எளிய நடுத்தர மக்கள் முதல் உயர் வகுப்பு வரை அதிருப்தியில் திமுக ஆட்சி நிர்வாகம் . இந்த ஆட்சி நிர்வாக அதிருப்தி ,வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்குமா ? பணம் கொடுத்து திமுக அந்த வாக்குகளை தக்க வைத்துக் கொள்ளுமா ? திமுக இதை சரி செய்வது மிகவும் கஷ்டம் தான் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *