திமுக ஆட்சியில் ஆம்னி பஸ்களின் கொள்ளையை தடுத்து நிறுத்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கு ஏழை, நடுத்தர மக்கள் கோரிக்கை.

டிராவல் ட்ரெண்டிங் தமிழ்நாடு

தமிழகத்தில் அதிமுக, அதிமுக இந்த இரண்டு கட்சிகளும் ஆமினி பஸ்களின் பகல் கொள்ளையை எப்படி ஏற்றுக் கொள்கிறார்கள்? ஒரு அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் தான் தனியார் பேருந்துகள் இயங்குகிறது .ஆனால், அரசு கட்டணத்தை விட , பொங்கல் ,கிறிஸ்மஸ், விடுமுறை நாட்கள், தீபாவளி, ஆயுத பூஜை போன்ற நாட்களில் மட்டும் எப்படி இவர்கள் இந்த விலையேற்றத்தை அனுமதிக்கிறார்கள்? என்று தங்கள் சொந்த ஊருக்கு செல்லும் பயனாளிகளின் மனவேதனை மிகவும் கஷ்டமானது.

 இந்த கட்டண உயர்வு வசதி படைத்தவர்களுக்கு வேண்டுமானால், எப்படி வேண்டுமானாலும் கொடுத்துவிட்டு போவார்கள். ஆனால், ஏழை, நடுத்தர மக்கள் வாங்குகிற சம்பளத்தை அதில் பாதி சென்னையில் இருந்து, தன் குடும்பத்தை பார்க்க போய் வருவதற்கு இந்த ஆம்னி பஸ்களுக்கு கொடுக்க வேண்டியுள்ளது. அது மட்டுமல்ல, இவர்கள் பண்டிகை காலங்களில், விடுமுறை நாட்களில், சிறப்பு பேருந்து, SETC போன்ற பஸ்களை அதிகளவில் இயக்குவதாக தெரிவிக்கிறார்கள். ஆனால், அந்த பஸ்களில் முன்பதிவு செய்ய பொதுமக்கள் முயற்சித்தால், சர்வ வேலை செய்யாது. சர்வர் பிராப்ளம், சர்வர் ஏரர் போன்ற ஏதோ ஒன்று ஆன்லைன் புக்கிங் செய்யும் போது வந்துவிடும். ஆக கூடி மக்களுக்கும் நல்லவர்களாக வேஷம் போட்டு, ஆம்னி பஸ் பஸ்களிலும் மறைமுக கமிஷன் வாங்கிக்கொண்டு, இந்த நாடகத்தை தொடர்ந்து நடத்தி வருவதாக பொதுமக்களின் குற்றச்சாட்டு.

மேலும் இந்த மக்கள் வேறு வழியில்லாமல் ஆம்னி பஸ்களை நாட வேண்டி உள்ளது. இது தவிர, ரயிலில் பயணம் செய்ய இது போன்ற ஆன்லைன் புக்கிங் செய்யும் போது, இதே நிலைமைதான். இதையெல்லாம் அங்கும் ஒரு சில ஏஜென்ட்கள் பணம் கொடுத்து மொத்தமாக வாங்கி விடுகிறார்கள். இந்த மக்கள் ஒவ்வொரு முறையும் ,பண்டிகை காலங்களில், விடுமுறை நாட்களில் சென்னையில் இருந்து தங்கள் ஊருக்கு செல்லும் மக்கள் சொல்லும் மன வேதனை மிகவும் துயரமானது. இவை எல்லாமே அரசாங்கம் செய்ய வேண்டிய வேலை.

 ஆனால், இவர்கள் மக்கள் எவ்வளவு துன்பப்பட்டாலும் பரவாயில்லை எங்களுக்கு வருமானம் வந்தால் போதும் என்ற ஆட்சி தான் நடக்கிறது. இதற்கு தீர்வு எங்களைப் போன்ற சாமானிய மக்கள் கேட்டு எங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை .அதனால், பல லட்சம் பேர் வந்து போகும் இந்த பஸ் கட்டணத்தை பண்டிகை நாட்களில், அரசு பேருந்துகளிலும், ஆம்னி பஸ்களிலும், ஒரே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

 இது தவிர, நேரத்திற்கு, நேரம் இந்த ஆம்னி பஸ்களின் கட்டண உயர்வு ஏற்றுகிறார்கள். மேலும் அரசு பேருந்துகளும், அதிக அளவில் முறையாக இயக்கப்படுவதில்லை. தற்போது, ஆம்னி பஸ்களில் குறைந்தபட்சம் 1300 லிருந்து 3500 வரை வசூல் செய்வதாக தகவல்.

அதேபோல்SETC அரசு பேருந்திலும், வெள்ளை, சனி ,ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் ரூபாய் 20 முதல் 100 வரை அதிக கட்டணமாக வசூல் செய்கிறார்கள். அதனால், இந்த ஏழை, நடுத்தர மக்கள் தான் இந்த ஆட்சிகளில் தொடர்ந்து சுரண்டப்பட்டு வருகிறார்கள், என்பதை தெள்ளத் தெளிவாக புரிந்து கொண்டு, அவர்களுடைய வேதனையை எமது நிருபரிடம் தெரிவித்திருக்கிறார்கள். மேலும்,

இன்று எதிர்க்கட்சியாக செயல்படும் பாஜக தலைவர் அண்ணாமலை ,இந்த மக்களின் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதுதான் அவர்களின் முக்கிய கோரிக்கை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *