மே 16, 2024 • Makkal Adhikaram
ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் .
தமிழக முழுதும் கிராமங்களில் பஞ்சாயத்து தலைவர்கள்! கிராம பொது சொத்துக்கள் ஆன ஏரி கருவேல மரங்கள் அல்லது மரங்கள் .மணல், ஏரி மண் போன்றவற்றை அரசாங்கத்திடம் எந்த அனுமதியும் பெறாமல், மணல் கடத்தல் மற்றும் ஏரி மண் கடத்தல் வேலைகளை ஈடுபட்டு வருகிறார்கள். இது பற்றி மாவட்ட ஆட்சியர் மற்றும் திட்ட அலுவலரிடம் கிராம மக்கள் புகார் அளித்தால் எந்த நடவடிக்கையும் இல்லை என்று தான் கிராம மக்கள் குமுறுகின்றனர். இது ஒரு பக்கம்,
மற்றொரு பக்கத்தில் இந்த பஞ்சாயத்து தலைவர்கள் கிராமங்களில் கட்சி அடியாள் கூட்டங்களை தனக்காக இருபது முப்பது பேர் தேர்வு செய்து வைத்துக் கொள்கிறார்கள். யாராவது சமூக நலன் கருதி, அந்த கிராமத்தில் இவர்கள் செய்வதை தட்டி கேட்டால், அவர்கள் மீது கொலை மிரட்டல் விடுகிறார்கள். அல்லது பயமுறுத்துகிறார்கள், சண்டைக்கு வருகிறார்கள், அடிக்கிறார்கள், இது போன்ற பல வேலைகள் தொடர்கிறது.
ஒரு சிறிய அதிகாரத்தை மக்கள் கொடுத்து விட்டால், அந்த கிராமமே என்ன பாடுபடுகிறது? இது எல்லாம் புரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறது, பல கிராமங்களில் வெந்ததைத் தின்று வந்தவரைக்கும் பேசிக்கொண்டு ,வாழும் மக்களுக்கு நன்றாக பேசி ,பணம் கொடுத்தால் போதும் . அவர்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. மேலும், இப்ப பிரச்சனையை சமூக நோக்கத்துடன் எதிர்பார்ப்பவர்கள் ,காவல்துறையை அணுகினால் காவல்துறை அவர்களுக்கு சாதகமாக தான் பேசுகிறார்கள்.அவர்களுக்கு தேவை பணம்.
இப்படி திமுக ஆட்சியில் கிராம மக்கள் படுகின்ற ஒவ்வொரு நாளும் வாழ்க்கையின் போராட்டங்கள் இந்த அரசியல் கட்சிகார்களிடம்,, அதிகாரிகளிடமும் இது போன்ற பஞ்சாயத்து தலைவர்களிடமும், உள்ளாட்சி பிரதிநிதிகள் இடமும் சமூக ஆர்வலர்கள், சமூக நலன் பத்திரிகையாளர்கள் போராட வேண்டி இருக்கிறது. இவர்களுக்கு சட்டத்தைப் பற்றி கவலை இல்லை. சமூக நலன் பற்றியும் கவலை இல்லை. மக்களைப் பற்றியும் கவலை இல்லை. ஆனால், உத்தமர்கள் போல பேசி வேஷம் போட்டுக் கொண்டிருந்தால் ஊரில் உள்ள முட்டாள் கூட்டம் ஏமாந்து கொண்டிருக்கும்.
இப்போது ஆளாளுக்கு (பொதுமக்கள்) கேள்வி கேட்கவில்லை என்றாலும், இந்த பிரச்சனைகள் பேசிக்கொண்டு தான் இருக்கிறார்கள். இதற்காக சட்டப் போராட்டத்தை கையில் எடுக்கும் சமூக ஆர்வலர்கள், எவ்வளவு கிராம நலனுக்காக போராட வேண்டி இருக்கிறது? ஆனால், இந்த கிராம பஞ்சாயத்து தலைவர்கள், அரசியல் கட்சியின் முக்கிய புள்ளிகள் உடன் கைகோர்த்துக்கொண்டு, கிராம பஞ்சாயத்து பொது சொத்துக்களை கொள்ளையடிப்பதில் மட்டுமே மக்கள் நமக்கு வாக்களித்து இருக்கிறார்கள் . அது மட்டுமல்ல, நமக்கு கிராமங்களை பட்டா போட்டு கொடுத்து விட்டதாக நினைக்கிறார்கள்.
ஏனென்றால் ஒவ்வொரு ஊரிலும் ஒரு 50 குடிகாரர்கள் இருக்கிறார்கள். இந்த குடிகாரர்களுக்கு பாட்டில் வாங்கி கொடுத்தால் போதும். இந்த போதைக்கு அடிமையான கூட்டத்திடம், எந்த வேலையை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம். இப்படி தான் ஒவ்வொரு கிராமத்தின் நிலைமை. இந்த நிலைமை தெரியாமல், காவல்துறை நடந்து கொண்டிருக்கிறது. இவர்கள்தான் சமூக அலுவலர்கள் மீது பொய் வழக்கு போடுகிறார்கள். அதனால், கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு, சம்பந்தப்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள், காவல்துறை தான் பொறுப்பேற்க வேண்டும் .எந்த காரணத்திற்காக ஒருவர் புகார் அளிக்கிறார்? என்பது கூட தெரியாமல் இவர்கள் இருக்கிறார்கள்.
அதே போல் மாவட்ட ஆட்சியர்கள் அலட்சியமாக பார்க்கிறார்கள். ஒரு சிலர் நடவடிக்கை எடுக்கிறார்கள். ஒரு சிலர் அதைப்பற்றி பெரிதும் கவலைப்படுவதில்லை. இப்படி இருந்து கொண்டு, இந்த காவல்துறை அதிகாரிகளும், பஞ்சாயத்து நிர்வாக அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியரும் எதற்காக வேலைக்கு வருகிறார்கள்? என்பதுதான் கிராம மக்களின் முக்கிய கேள்வியாக உள்ளது.இப்படிப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கும் திமுக அரசு, ஆட்சி நடத்துவதற்கு தகுதி இல்லாத முதல்வர் என்றுதான் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், ஒவ்வொரு கிராமங்களிலும் சமூக ஆர்வலர்கள் கொடுக்கின்ற புகார் மீது நடவடிக்கை எடுப்பதுதான் மாவட்ட ஆட்சியரின் முக்கிய வேலை. கடந்த காலங்களில் ஒரு எம்எல்ஏ சொன்னால் கூட எடுக்க மாட்டார்கள். எது உண்மை? எது பொய்? என்பதை மட்டும் தான் பார்ப்பார்கள். அப்படி மாவட்ட ஆட்சியர்கள் இருந்தார்கள். இப்போது இருக்கின்ற மாவட்ட ஆட்சியர்கள், திமுக ஆட்சியின் மாவட்ட செயலாளர்கள் போல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் . ஒரு சிலர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் .இது தவறு.
ஒரு கிராமத்தில் வாழ்கின்ற மக்கள் ,ஏரி, குளம், குட்டை ,ஆறு இதை நம்பி தான் கிராம மக்களின் வாழ்க்கை இருக்கும். இந்த வாழ்வாதாரத்தையே இவர்கள் சிதைக்கும் போது ,அந்த மக்கள் எப்படி அங்கே வாழ முடியும்? அதனால் தான் பிரச்சனைகள், சட்டப் போராட்டங்கள், சண்டை சச்சரவுகள், கிராமங்களில் தொடர் கதை ஆகிறது. தற்போது ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அடுத்த கீராம்பாடி கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் அரசுக்கு சொந்தமான நீர் பிடிப்பு சித்தேரி பகுதியில், மண் எடுத்து குடியிருப்பு இல்லாத இடத்தில் மண் ரோடு போட்டுள்ளார்.
இதனால் என் விவசாயத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை மாவட்ட ஆட்சியருக்கு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர் பூபாலன், புகார் அளித்துள்ளார். இதை தட்டி கேட்டு, புகார் அளித்தது சம்பந்தமாக, அந்த கிராமத்தின் முன்னாள் ராணுவ வீரர் பூபாலன் மீது, அவர் சமூகத்தை சேர்ந்த அரசியல் கட்சி அடியாட்களை ஏவி அடிக்க ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் ஏற்பாடு செய்துள்ளார். பூபாலன் வீட்டிற்கு வந்த அடியாட்கள் அவரை மிரட்டி கொலை செய்து விடுவதாக பயமுறுத்து (சுமார் 20க்கும் மேற்பட்டோர்)கிறார்கள்.மேலும்,
இப் பிரச்சனையை நீ எப்படி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்கலாம்? தேவராஜன் ஊருக்கு நல்லது தானே செய்கிறார். இப்படி அவருக்கு சாதகமாக பேசுவதற்கு தேவராஜன் அடிக்கின்ற கொள்ளைகளில், அரசியல் கட்சி அடியாட்களுக்கும் பங்கு உண்டு. அதனால், இது போன்ற பிரச்சனைகள் தமிழக முழுதும் ஓடிக்கொண்டிருக்கிறது. இது தவிர, கிராமங்களில் இருக்கின்ற கருவேல மரங்கள், மரங்கள் அதிகாரிகளுடன் பங்கு போட்டுக் கொண்டு, குறைந்த விலைக்கு ஏலம் விட்டு வருகின்றனர்.
மேலும், இவர்களுக்கு வேண்டிய சொந்தக்காரர்களோ அல்லது வேண்டிய நபரையோ ஒருவர் மீது ஏலத்தை எடுத்து, இதிலும் பல லட்சங்களையும், கோடிகளையும் பார்க்கிறார்கள். இப்படிப்பட்ட அநியாயங்களை அந்த கிராமத்தில் வசிக்கின்ற பொதுமக்களும் ,சமூக ஆர்வலர்களும் அதை பார்த்துக்கொண்டு இருப்பார்களா? மேலும், தொடர்ந்து கிராம மக்கள் தருகின்ற புகார்கள் எல்லாவற்றையும் கிடப்பில் போடுவது தான் மாவட்ட ஆட்சியர்களின் முக்கிய வேலையா?
ஒரு சில மாவட்ட ஆட்சியர்கள் தவிர, பெரும்பாலும் இது பற்றி நடவடிக்கை எடுப்பதில்லை. அதனால் தான் கிராமங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை தொடர்கதை ஆகிறது. இங்கே மாவட்ட ஆட்சியரின் பணி சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுத்தால், காவல்துறைக்கு வேலை இல்லை. இவர்கள் எடுக்காத போது ஒருவருக்கொருவர் தகாத வாய் வார்த்தைகளால் பேசிக் கொள்வதால் (அல்) அடித்துக் கொள்வதால், இந்த பிரச்சனை தொடர்கிறது. எனவே, இது பற்றி தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா தான் முடிவு எடுக்க வேண்டும். இந்த லட்சணத்தில் கிராமங்கள் என்றால்,
நகரங்கள் இதைவிட கொடுமை .இப்படி திமுக ஆட்சிக்கு மக்கள் வாக்களித்துவிட்டு, நடுத்தர மக்கள், உழைத்து வாழ்கின்ற மக்கள், கௌரவமானவர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், குடிகாரர்கள், கூலிக்கு செல்பவர்கள், சுயநலம் கொண்டவர்கள் ,இதைப்பற்றி அவர்கள் கவலைப்படுவதில்லை .விவசாயம் சார்ந்த தொழில் செய்பவர்கள் ,அரசியல் தெரிந்தவர்கள், சமூக ஆர்வலர்கள் இவர்கள் அனைவரும் தற்போதைய திமுக ஆட்சியில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இதே நிலைமை தான் அதிமுக ஆட்சியிலும் நடந்து கொண்டிருக்கிறது .
இது பற்றி ஸ்டாலின் அரசாங்கம் கவலைப்படுவதில்லை. அமைச்சர்கள் கவலைப்படுவதில்லை, எம்எல்ஏக்கள் ,எம்பிகள் கவலைப்படுவதில்லை. அப்படி என்றால், இந்த மக்கள் நியாயத்தை பற்றி பேசக்கூடாது. அநியாயத்தை பற்றி தான் பேச வேண்டுமா? திமுக ஆட்சி மக்களுக்கு எதிராக போய்க் கொண்டிருக்கிறது என்பது மக்களின் குமுறல்.