தமிழருவி மணியன் அரசியல் நாகரீகம் ,அரசியல் பேச்சு ,அரசியலின் நேர்மை, இது எல்லாம் கடைபிடித்து வரும் ஒரே அரசியல் தலைவர் தமிழருவி மணியன். இன்றைய தமிழ்நாட்டு ஊடகங்கள் யாரை வேண்டுமானாலும் விளம்பரப்படுத்துகிறது. ஆனால் நேர்மையான அரசியல் களத்தில் இருப்பவர்களுக்கு ஆதரவு இல்லை. அவர்களுடைய கருத்து மக்களிடம் கொண்டு சேர்க்கப் படவில்லை.
தமிழ்நாட்டில் மக்கள் அரசியல் களத்தில் ஏமாற ஊடகங்கள் செய்யும் ஒரே வித்தை என்னவென்றால், திருடனும் உத்தமன் போல் பேசுவான். கொள்ளையடிப்பவனும் என்னைவிட அரிச்சந்திரன் இல்லை என்று பேசுவான், ஆனால், சத்தியத்தின் வழி நடப்பவர்களும் ,மனசாட்சிக்கு, கடவுளுக்கு பயந்து நடப்பவர்களும் சொல்லுகின்ற வார்த்தைகள் எதுவும் அதுபோல் இருக்காது. அவர்கள் எத்தனை பொய் சொன்னாலும், அதை எல்லாம் உண்மை என்று விளம்பரங்கள் மக்களிடம் செய்வது தான், இன்றைய ஜால்ரா ஊடகங்களின் வேலை.
அதனால், மக்கள் அதிகாரம் பத்திரிகை, அந்த பத்திரிகைகளில் இருந்து வேறுபட்டது என்று பலமுறை தெரிவித்துள்ளேன். இது மக்கள் நலனில் அக்கறை கொண்ட ஒரு பத்திரிக்கை. அதனால்தான், இந்த உண்மைகளை வெளியிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இனியாவது தமிழக மக்கள் அரசியல் கட்சிகளின் பொய்களை நம்பாமல், உண்மையை ஆராய வேண்டிய காலகட்டத்திற்கு இன்றைய நெருக்கடியான தமிழக அரசியல் இருந்து வருகிறது.
அதிலும் குறிப்பாக வருங்கால இளைய தலைமுறைகள், உங்களுடைய வருங்காலத்தை தீர்மானிக்கும் வாழ்க்கை என்பதை மிகவும் கவனிக்க வேண்டிய ஒரு அரசியல். நீங்கள் இந்த இளமையின் வயது, எதுவும் அதைப் பற்றி எல்லாம் சிந்திக்காது .காதல், கற்பனை, உல்லாசம், போதை இதற்கெல்லாம் அடிமையாகி, கல்வியில் ஒரு பக்கம் முன்னேற முடியாமல், மற்றொரு பக்கம் படித்த கல்விக்கு தகுதியான வேலையை பெற முடியாமல், எத்தனை இளைஞர்கள் மனவேதனையுடன் இருப்பவர்கள்?அவர்களெல்லாம் இந்த அரசியல் பற்றி ஒரு விழிப்புணர்வு இருக்க வேண்டும்.
சினிமாவைப் பார்த்து ஒரு கற்பனையான உலகத்தில் வாழ்வது வாழ்க்கை அல்ல, நிஜ வாழ்க்கையில் உங்களுடைய நிலைமை என்ன? என்பதை உணர்ந்து வாழுங்கள். மேலும், இன்றைய அரசியல், ஒரு ஏமாற்று அரசியலாக இருந்து வருகிறது. அந்த ஏமாற்று அரசியலை தாங்கிப் பிடிப்பது, தமிழ்நாட்டு கார்ப்பரேட் ஊடகங்கள் ,அதற்கு தான் அவர்கள் சலுகை விளம்பரங்களை சன்மானமாக பெறுகிறார்கள்.
அதற்கு எங்களைப் போன்ற மக்கள் நலனுக்காக போராடுகின்ற பத்திரிகைகளுக்கு கூட, எந்த சலுகை விளம்பரங்களும் கொடுப்பதில்லை என்பது அவர்களுடைய கொள்கை முடிவு . இருப்பினும் எங்கள் கொள்கையிலிருந்து இந்த மக்களுக்கு என்ன சொல்ல வேண்டுமோ, அந்த உண்மைகளை வெளிப்படுத்தி ,விழிப்புணர்வு ஏற்படுத்துவது தான் எங்களுடைய முக்கிய கொள்கை முடிவு.
அதனால், பொதுமக்கள், வருங்கால இளைய தலைமுறைகள், அரசு அதிகாரிகள், இன்றைய அரசியல் உண்மையை சிந்தித்து, அதற்கான முக்கிய முடிவுகளை மனசாட்சியுடன் எடுப்பது நல்லது. ஆனால், மனசாட்சி இன்றி பேசும் ,இன்றைய சில அரசியல் கட்சிகளில் பொய்களை நம்பாதீர்கள். அவர்கள் பேசுவதற்கும் நடைமுறையில் செய்வதற்கும் எந்த தொடர்பும் இருக்காது அதுதான் அரசியல் மாடல், நம்பினால் தொடர்ந்து ஏமாறுவதுதான் மக்களின் வாழ்க்கை என்பதை தீர்மானமாக உணர்ந்து கொள்வது மிகவும் நல்லது. மேலும்,
ஒருவனுடைய வாய்ப்பேச்சு வித்தை என்பது முட்டாள்களிடம் கைதட்டலாக மாறும். அதுவே அறிவாளிகளிடம் அது கேள்வியாக மாறும் .இதுதான் அரசியல் உண்மை. இதை படித்தவர்கள் அறிவாளியாக இருக்க ஆசைப்படுகிறார்களா? அல்லது முட்டாள்களாக இருக்க ஆசைப்படுகிறார்களா? என்பது அவரவர் முடிவு.