ஏப்ரல் 28, 2024 • Makkal Adhikaram
திராவிட கொள்கைக்கும், காங்கிரஸ் கொள்கைக்கும் ஒத்து போகிறது. திராவிட கொள்கை, திராவிட கலாச்சாரம் என்பது வேறு ஒன்றும் இல்லை கலப்படம். கலப்படம் என்றால் தமிழ் கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டது. ஒன்றுக்கு மேற்பட்ட மனைவிகள், எந்த ஜாதியில் வேண்டுமானாலும் பெண் எடுத்துக் கொள்ளலாம், அதுதான் ஜாதி ஒழிப்பு கலாச்சாரம். அதற்கடுத்தது எப்படியும் வாழலாம்.சொல்வதற்கும், செய்வதற்கும் சம்பந்தமே இருக்கக் கூடாது .சட்டத்தை வளைத்துக் கொள்ளலாம். எப்படியும் பேசிக் கொள்ளலாம். மனசாட்சி இல்லாமல் பேசிவிட்டு போகலாம்.
போதைகளில் மிதக்கலாம்.போதை பொருள் கடத்தல் காரர்களுக்கும், பதவி கொடுக்கலாம். அது வெளியில் தெரிந்தால், உடனே அவனுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிக்கலாம். திராவிட கொள்கை மற்றும் அதன் கலாச்சாரத்தின் சாராம்சமே பணம் மட்டும்தான் குறிக்கோள். மீதி எல்லாம் வாயில் பேசுவதும், எழுதிவிட்டு போவதும் தான். இதுதான் திராவிட மாடல் . இதை விடுத்து வேறு ஏதாவது இந்த அரசியல் கட்சிகள் செய்திருக்கிறதா ? அதாவது மக்களுக்காக என்றுதிட்டத்தை இவர்களுக்காக போட்டுக் கொள்வார்கள் .இந்த திட்டத்தில் எத்தனை கோடி லாபம் வரும்? இதுதான் திராவிட மாடல்.
இந்த மாடலை என் சிறுபான்மை மக்கள் ஏற்றுக் கொள்கிறார்கள்? அங்கே எத்தனை மனைவி வேண்டும் ஆனாலும், ஒருவன் கட்டிக் கொள்ளலாம் .ஒருவன் குறுக்கு வழியில் எப்படி வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம். சட்டத்தை ஏமாற்றலாம். நாட்டைப் பற்றியோ ,சமூகத்தைப் பற்றியோ கவலைப்படாமல் பணம் மட்டுமே அவர்களது குறிக்கோள். அதாவது ஜாலி வாழ்க்கை .அது இந்த திராவிட மாடலோடு ஒத்துப் போகிறது. இது எல்லாம் திராவிட கலாச்சாரத்தின் எழுதாத சட்டங்கள். இதனுடைய ஒவ்வொரு செயல்பாடுகளிலும், இது மறைமுகமாக வெளிப்படுத்துகிறது.
அரசியலாக இருந்தாலும் ,எந்த துறையாக இருந்தாலும், தனிமனித ஒழுக்கம் கேள்விக்குறியாகும் போது அவர்களின் அரசியல் வாழ்க்கை எப்படி தூய்மையாக இருக்கும் ? தவிர, மற்ற துறை ஆனாலும் அது எப்படி தகுதியான முறையில் அதை செயல்படுத்த முடியும் ? இங்கேதான் பிஜேபி கொள்கைக்கும் திராவிட மாடல் கொள்கைக்கும் வேறுபடுகிறது. பிஜேபி தனிமனித ஒழுக்கம், நேர்மை அரசியலில் வலியுறுத்துகிறது .அதை தான் இவர்கள் மதம் என்கிறார்கள். மதத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் ? பித்தலாட்ட பொய்யான வீர வசனங்கள், அரசியல் தெரியாத முட்டாள்கள் இடம் பேசி ஏமாற்றிக் கொண்டிருக்கும் வேலை தான் திராவிடம் மாடல் . அதனால்தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து ஒவ்வொரு இளைஞர்களும், தற்போதைய ஏமாற்று அரசியலில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ள நீங்கள் அரசியல் படித்தே ஆக வேண்டும்.
வாழ்க்கை வேறு, படிப்பு வேறு ,படிக்காத முட்டாள்கள் கூட படித்தவனை ஏமாற்றி விடுகிறது. இன்று படித்தவர்கள், பண்பாளர்கள் அரசியலில் ஏமார்ந்து கொண்டிருக்கிறார்கள். உண்மை என்ன ?என்று ஆய்வு செய்து பார்ப்பது, படிப்பது கடினமான வேலை . எங்களைப் போன்ற ஒரு சில பத்திரிகைகள் தான் இந்த மக்கள் அரசியலில் ஏமாறக்கூடாது, என்று இந்த சமூக நலன் கருதி, லாப நோக்கம் இன்றி பத்திரிகைகளை நடத்துகிறோம். ஆனால், இந்த பொய்ப் பித்தலாட்ட அரசியலுக்கு கார்ப்பரேட் கம்பெனி பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் பணத்திற்காக, அரசின் சலுகை ,விளம்பரங்களுக்காக, அவர்கள் சொல்லும் அத்தனை பொய்ப்பித்தலாட்டங்களை இன்று உண்மை போல் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சரி,அப்படியே உண்மை என்று வைத்துக் கொண்டாலும், இவர்கள் சொன்னதில் என்னென்ன செய்திருக்கிறார்கள்? எதை எதை செய்யவில்லை? அந்த பட்டியல் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் கொடுக்க முடியுமா? இன்றைய நான்காவது தூண் அரசியல் எப்படி சுயநலம் ஆகிவிட்டதோ, அதேபோல் இந்த பத்திரிகைகளின் சுயநலமும் ஒன்றிணைந்து விட்டது. செய்தி துறையில் அரசியல் தலையீடு இருக்கும் வரை இதையெல்லாம் சரி செய்ய முடியாது.நீதிமன்றம் தான் இதை சரி செய்ய முடியும் .