திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக, மாநிலத்தின் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இதை மறுக்கிறார். இருப்பினும் ஏழுமலையான் பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் திண்டுக்கல்லில் இருந்து திருமலைக்கு நெய்யை சப்ளை செய்து வந்துள்ளது. மேலும், இந்த நிறுவனத்தின் நெய் தரமற்று இருப்பதாக இதை கருப்பு பட்டியலில் வைத்து, இருந்த நெய்யையும் திருப்பி அனுப்பி உள்ளது திருப்பதி தேவஸ்தானம் .
ஆனால், ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் நாங்கள் அனுப்பிய நிலையில் மாட்டுக் கொழுப்பு இருந்ததாக சொல்லும் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், அந்த நிறுவனம் எங்களது தயாரிப்புகளை எடுத்து சென்று எங்கு வேண்டுமானாலும், பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று ஏ ஆர் டைரி ஃபுட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், திருப்பதி லட்டு பற்றி முன்னாள் அர்ச்சகர் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பை பயன்படுத்தி அதன் புனித தன்மையை கெடுத்து விட்டதாக அவர் தெரிவித்துள்ளார் .
மேலும், இந்த விவகாரம் தேசிய பால் பொருள் வளர்ச்சி வாரியத்தில் திருப்பதியில் லட்டு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் ஆய்வு முடிவுகள் வெளியான நிலையில் திருப்பதி கோயில் நட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது .மேலும், சோயா பீன்ஸ், சூரியகாந்தி எண்ணெயுடன் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றிக் கொழுப்பு கலக்கப்பட்டு இருப்பதாக ஆய்வு முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் ஒரு பக்கம் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி, தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் தலைவர்கள் ,இப்படி ஆளுக்கு ஒருவர் அறிக்கை விட்டு, திருப்பதி லட்டை அரசியலாய்க்கிவிட்டனர். மேலும், திருமலையின் முன்னாள் தலைமை அர்ச்சகரான ரமணா தீட்சதலு , திருப்பதி லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பசு நெய், கலப்படம் குறித்து பல ஆண்டுகளுக்கு முன்பே நான் கவனித்தேன். இது தொடர்பான புகாரை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் தேவஸ்தான தலைவர் கவனத்திற்கு கொண்டு சென்ற பின்னும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை .