திருப்பூர் மாவட்டத்தில் நியூஸ்7 செய்தியாளர்  தாக்கப்பட்டது சட்ட நடவடிக்கை தேவை . இது எதனால் நடந்தது என்பதை காவல்துறை உண்மையை வெளிப்படுத்துமா ? இப் பிரச்சனை எதிர்க்கட்சிகள் அரசியலாக வேண்டிய நோக்கம் என்ன ?

அரசியல் இந்தியா சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தலைப்பு தேசிய செய்தி பிரபலமான செய்தி மத்திய மாநில செய்திகள் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் பிரபு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்ப பிரச்சனை திமுகவிற்கு எதிராகவும், அதை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கியுள்ளது. அதாவது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை .பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் ஏன் ?பொது மக்களுக்கு கூட இந்த பிரச்சனை இருக்கிறது.

ஆனால், இந்த சம்பவத்தை வைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,மற்றும் சீமான் இதற்கு குரல் கொடுத்தார்கள். இங்கே அரசியல் கட்சிகள் கூட ,ஏழை ,பணக்காரன் என்ற வித்தியாசம் பார்த்து குரல் கொடுத்திருக்கிறார்கள்.இந்த பத்திரிக்கை துறையில் தான் அது இருக்கிறது. அதாவது கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு ஒரு சலுகை ,சிறிய பத்திரிகைகளுக்கு ஒரு சலுகை, இந்த வித்தியாசம் பணக்காரனுக்கும், ஏழைக்கும் உள்ள பாகுபாடு தான்.

 பத்திரிகை என்பது சமூக நீதிக்காக போராடும் ஒரு தளம் .இதில் பணத்தை வைத்து ஏற்றத்தாழ்வு என்பது ஏற்றுக்கொள்ள முடியாது .இது  அறிவுபூர்வமான கருத்துக்கு தான் முக்கியத்துவம் தரவேண்டிய ஒரு இடம். இதுவே ,ஒரு சிறிய பத்திரிக்கைக்கு இப் பிரச்சனை நடந்திருந்தால் ,தமிழ்நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் இதை அரசியல் ஆக்கிருப்பார்களா? மேலும் ,இத்தனை சங்கங்கள் அவர்களுக்கு குரல் கொடுத்து இருப்பார்களா?

இது தவிர, திருப்பூரில் நடந்த நியூஸ் 7 செய்தியாளருக்கு  சமூக விரோதிகளால் தாக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் அரசியல் ஆக்கப்பட்டுள்ளது. ஒரு பக்கம் அதிமுக, எதிர்க்கட்சிகள் அரசியலாக்கி உள்ளது .அப்படி என்றால், இதனுடைய உண்மை நிலவரம் எதற்காக வெட்டுப்பட்டார்? என்பது காவல்துறை இது பற்றி ஆய்வு செய்து ,உண்மை நிலவரத்தை விரைவில் வெளியிடும் என்ற தகவலும் வந்துள்ளது.

மேலும், இவர் திமுகவின் டாஸ்மாக் ஊழல் அங்கு நடக்கின்ற கள்ள சந்தை வியாபாரம் , இதையெல்லாம் வெளி வருவதற்கு செய்திகளை அனுப்பியதால், இவர் வெட்டுப்பட்டார் என்ற சம்பவத்தை எதிர்க்கட்சிகளும், எதிர் கட்சி அரசியல் ஊடகங்களும், பத்திரிக்கையை சங்கங்களும் போராடுகிறது. ஆனால், மற்றொரு தகவலும் வெளிவருகிறது.

இந்த சம்பவம் திருப்பூரில் நடக்கும் பிராத்தல் சம்பவங்களுக்கு இவர் பணம் வாங்கிக்கொண்டு ,இந்த பிராத்தலிலும்  பங்கு பெற்றுக் கொண்டு வந்துள்ளதால், இதை அந்த பிராத்தல் கும்பல் ,இந்த சம்பவத்தை அரங்கேற்றி உள்ளதாக செய்திகள் மற்றொரு பக்கம் வெளிவருகிறது. எது உண்மை ?எது பொய் ?என்பது தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பது தான் காவல்துறையின் முக்கிய பணி. எது எப்படி இருந்தாலும் கையை வெட்டியது ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று அது சட்டத்தை கையில் எடுத்த விவகாரம். சட்டப்படி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும் .இப் பிரச்சனையில், பொதுமக்களும் ,கார்ப்பரேட் ஊடக செய்தியாளர்களும் ,பெரிய பத்திரிகை, பெரிய தொலைக்காட்சி என்பதனுடைய உண்மையை தெரிந்து கொள்வார்களா ?

மேலும் ,திருவள்ளூர் மாவட்டம், விடையூர் கிராமத்தில் கருவேல மர  ஏல ஊழல் மக்கள் அதிகாரம் பத்திரிக்கை ஒன்று மட்டும் தான் இந்த ஊழலை தொடர்ந்து இணையதளம் மற்றும் பத்திரிக்கையில் வெளியிட்டுள்ளது. ஆனால்,திருவள்ளூர் மாவட்டத்தில் எத்தனை பத்திரிகைகள் உள்ளது? அதில் சிறிய, பெரிய என்று மார்தட்டிக் கொள்ளும் இவர்கள் என்ன ஆனார்கள்?

இது சம்பந்தமாக கிராம மக்கள் தட்டிக் கேட்கும் போது, கிராம பஞ்சாயத்து தலைவர் ஏழுமலைக்கும், பொது மக்களுக்கும் இடையே மோதல்கள் அடிக்கடி ஏற்பட்டதுண்டு. அப்போது திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்திற்கு அவர்கள் புகார் கொடுப்பார்கள் .அந்த புகார் முறையாக விசாரிக்கப்படாமல் சண்டை பிரச்சனையாக அங்கே எஃப் ஐ ஆர் போட்டு அனுப்புவார்கள். அப்போது சில பத்திரிகை மற்றும் டிவி செய்தியாளர்கள் உடன் வருவார்கள் என்று கூட கேள்விப்பட்டேன்.

இதுவரை நான் சென்றதில்லை. இருப்பினும் தகவல் தான் வரும் .இது பற்றிய எல்லா உண்மையும், திருவள்ளூர் மாவட்ட நிருபர்களுக்கு தெரியும். ஆனால் ,பெரிய பத்திரிக்கை, பெரிய தொலைக்காட்சி இதில் எதுவும் இந்த உண்மை செய்திகள் வெளி வராது. இதுதான் பெரிய பத்திரிகை செய்தியாளர்களின் ரகசியம் .

மேலும் ,இது 300 ஏக்கர்  ஏரியில் உள்ள கருவேல மரம் வெறும் ஐம்பதாயிரத்திற்கு அதாவது ஒரு ஏக்கர் ரூபாய் 160 க்கு அரசு ஏலம் விட்ட நீர் வளத்துறை அதிகாரிகள், அரசியல் கட்சிகள், ஏலம் எடுத்தவர்கள் வெளி வராமல் பார்த்துக் கொண்டார்கள். பிரச்சனை உயர் நீதிமன்றம் வரை சென்றுள்ளது. அதை சென்னை பத்திரிகையாளர்கள் பார்த்துக் கொள்வார்கள். ஒரு நாளைக்கு நிச்சயம் வெளிவரும் .மேலும் ,

நாட்டில் ஊடகங்களின் நிலைமை என்ன என்பதை இந்த வீடியோவும் பொது மக்களுக்கும் செய்தித்துறை மத்திய மாநில அரசு அதிகாரிகளுக்கும் பத்திரிக்கை துறைக்கும் மேலும் பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கும் இனியாவது புரிந்து கொள்வார்களா ? தொடர்ந்து மக்கள் அதிகாரம் பத்திரிக்கை பத்திரிக்கையின் தரம் பிரிப்பதன் நோக்கம் புரிந்து உள்ளதா ?

இதற்கு தான் இந்த பத்திரிகைகளின் தரத்தை பிரிக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியமானது என்று மத்திய, மாநில அரசின் செய்தி துறைக்கு மக்கள் அதிகாரம் பத்திரிக்கையின் சார்பிலும் ,தமிழக சமூகநல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு சார்பிலும் வைக்கின்ற முக்கிய கோரிக்கை .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *