தேனி மாவட்ட திட்ட இயக்குனர் தண்டபாணி பணியிட மாற்றம் செய்யப்பட்டும் வசூல் வேட்டையில் ஈடுபடலாமா ?ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா நடவடிக்கை எடுப்பாரா?

உள்ளூர் செய்திகள் சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

தேனி மாவட்டத்தில் திட்ட இயக்குனராக பணிபுரிந்து வந்த தண்டபாணி தேனி மாவட்டத்தில் திட்டங்கள் மக்களுக்கு போய் சேருகிறதோ இல்லையோ திட்ட இயக்குனர் தண்டபாணிக்கு கமிஷன் போய்விடும் .அந்த அளவிற்கு இவர் மீது புகார் இருந்து வந்துள்ளது.

இது தவிர, முன்னாள் மாவட்ட ஆட்சியர் முரளிதரன் இவருடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இவர் என்ன சொன்னாலும் ,அந்த கோப்புகளில் கையெழுத்து போட வைத்து வந்தார். அந்த அளவிற்கு இருவருக்கும் ஒரு நெருக்கம் இருந்துள்ளது. மேலும்,உள்ளாட்சியில் உள்ள அத்தனை பஞ்சாயத்து ,பேரூராட்சி, நகராட்சிகளில் என்ன என்ன திட்டங்களில் எந்த வேலை செய்தாலும் ,அவருக்கான பங்கு தொகை ஒப்பந்ததாரர்கள் கொடுத்தால்தான் கையெழுத்தாகும் .

மேலும், தேனி மாவட்டத்திற்கு வந்துள்ள புது மாவட்ட ஆட்சியர் சஜீவனா இவரை பற்றிய புகார் ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் தெரிவித்துள்ள போது ,அது பற்றி விசாரிப்பதாக தெரிவித்துள்ளார் .இந்த விசாரணையின் அடிப்படையில் மாவட்ட ஆட்சியரின் புகார் உயர் அதிகாரிகளுக்கு சென்ற தகவல் அடிப்படையில், இவர் மாற்றப்பட்டிருக்கலாம்.

மாற்றப்பட்ட பிறகும் முன் தேதி இட்டு ஒப்பந்ததாரர்களிடம் பில் பாஸ் பண்ண கமிஷன் கேட்டு இருக்கிறார். சிலர் அதற்கு ஒத்து வந்தவர்களும் உண்டு .ஒத்து வராதவர்கள் விஜிலென்சிக்கு தகவல் தெரிவித்தவர்களும் உண்டு. இதன் அடிப்படையில் விஜிலென்ஸ் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு செல்லும் போது, தகவல் தெரிந்த திட்ட இயக்குனர் தண்டபாணி அங்கிருந்து வெளியேறிவிட்டதாக தகவல்களும் கசிந்துள்ளது .

மேலும், இது சம்பந்தமாக தற்போதைய மாவட்ட ஆட்சியர் சஜீவனா திட்ட இயக்குனர் தண்டபாணி பணியிட மாற்றம் செய்த பின்பு, மாவட்டத்தில் உள்ள ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் ஒன்றிய தலைவர்களை சந்தித்து பணம் கேட்பதாக தகவல் வந்துள்ளது.

அதற்கு மாவட்ட ஆட்சியர் இது சம்பந்தமாக நான் விசாரணை செய்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார். இதில் என்ன ஆச்சரியம் என்றால் ,பணியிட மாற்றம் செய்யப்பட்ட திட்ட இயக்குனர் இரண்டு நாட்களில் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டு, முன் தேதியிட்டு ஆவணங்களின் கையெழுத்து போட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது,

இப்ப பிரச்சனை மாவட்ட ஆட்சியர் மட்டுமல்ல, ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அமுதா அவர்களும் உரிய விசாரணை செய்து ,திட்ட இயக்குனர் தண்டபாணி மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட மக்கள் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *