தேர்தல் ஆணையத்தின் தேர்தல் அறிவிப்பால்! தேர்தல் நடத்தை விதி முறைகள் அமுலுக்கு வந்துள்ளது .

அரசியல் இந்தியா உள்ளூர் செய்திகள் சமூகம் செய்திகள் ட்ரெண்டிங் தமிழ்நாடு தமிழ்நாடு அரசு செய்திகள் தலைப்பு தேசிய செய்தி தொழில்நுட்பம் பிரபலமான செய்தி பிற மாநில அரசு செய்திகள் மத்திய அரசு செய்திகள் மத்திய மாநில செய்திகள் மாவட்டம் முக்கிய செய்தி ரிசன்ட் போஸ்ட்

சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள, ஐந்து மாநிலங்களிலும், தேர்தல் நடத்தை விதி முறைகள் உடனடியாக நடை முறைக்கு வந்துள்ளன.மேலும்,

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ,ஒரே கட்டமாக ஏப்ரல் 23 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ம் நாள் தொடங்குகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ஆம் நாள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தேர்தல் நேர்மையான முறையில் தேர்தலை நடத்துவதற்காகத் தேவையான பணியிட மாற்றங்கள், நியமனங்களைச் செய்யத் தேர்தல் ஆணையம் அதிகாரம் பெற்றுள்ளது.

தேர்தல் அறிவிப்பு மற்றும் நடத்தை விதிமுறைகள் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலத் தேர்தல் அட்டவணையைத் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஸ்குமார் தில்லியில் அறிவித்தார்.

இதில் அசாம், கேரளம், புதுச்சேரி மாநிலங்களில் ஏப்ரல் 9 அன்று ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.அனால்,


மேற்கு வங்கத்தில் ஏப்ரல் 23, 29 ஆகிய நாட்களில் 2 கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் வேட்பு மனு தாக்கல் மார்ச் 30ஆம் நாள் தொடங்கும். வேட்பு மனு தாக்கல் செய்யக் கடைசி ஏப்ரல் 6 ஆகும். வேட்புமனுக்கள் பரிசீலனை ஏப்ரல் 7ஆம் நாள் நடைபெறும். வேட்புமனுவைத் திரும்பப் பெறக் கடைசி நாள் ஏப்ரல் 9ஆம் நாளாகும்.

தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 234 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் நாள் வாக்குப்பதிவு நடைபெறும். பதிவாகும் வாக்குகள் மே 4ஆம் நாள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *