சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா?
இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை கண்காணிக்க வேண்டியது அவசியமாகும். ஏனென்றால் இந்திய நாட்டின் தேர்தல் ஆணையத்திற்கு எதிரான ஒரு கருத்தை முன் வைக்கிறார்கள். அதாவது வாக்குச்சீட்டு முறையே தான் பயன்படுத்த வேண்டும். இந்த EVM மிஷின்கள் ஹேக் செய்து வெற்றி பெற முடியும் என்பது இவர்களுடைய குற்றச்சாட்டு. இவர்கள் வழக்கறிஞர்கள் என்று தெரிவிக்கிறார்கள்.
அப்படி சட்டம் படித்த மேதைகள் போல் பேசுகின்ற இவர்கள், ஏன் நீதிமன்றத்தில் வழக்குகளை நடத்தவில்லை? மேலும், இவர்களே தெரிவிக்கிறார்கள் ,எங்களை நீதிமன்றத்திற்குள் அனுமதிக்க மறுக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் இந்த நாட்டு மக்களிடம் உண்மையை பேசுவார்களா? தவிர, இவர்கள் தேச பக்தர்கள் மாதிரி காட்டிக்கொள்ள இப்படி ஒரு வீடியோவா?
தவிர ,மோடியைப் பற்றி அரபு நாடுகள் முதல் அமெரிக்கா வரை ஒரு நல்ல அபிப்பிராயத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பது அங்குள்ள பத்திரிகைகள் செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால், இவர்கள் யார் என்று தெரியாத இந்த மூன்று பேரும் தேர்தல் ஆணையத்தை பற்றி வைக்கின்ற மிகப்பெரிய குற்றச்சாட்டு. இதுவரை எந்த எதிர் கட்சியும் கூட ,அந்த குற்றச்சாட்டை வைக்கவில்லை. இந்த குற்றச்சாட்டுக்கும், மோடிக்கும் என்ன சம்பந்தம் ? ஏதோ மோடி தான் இந்த வாக்கு இயந்திரத்தை உற்பத்தி செய்கிறாரா?
இது யாருடைய கட்டுப்பாட்டில்? யாருடைய கண்காணிப்பில் இருக்கிறது ? மேலும், பல நாடுகள் இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்கிறார்கள். அப்படியே இவர்கள் சொல்வது போல் வாக்குச்சீட்டு இயந்திரத்தில் முறைகேடு நடக்கவில்லையா? எத்தனையோ அரசியல் கட்சிகள் தேர்தல் நடக்கும் இடங்களில் கதவுகளை மூடிவிட்டு தனக்கு வேண்டிய கட்சிக்காக அந்தந்த கட்சிக்காரர்கள் கள்ள ஓட்டு போட்ட சம்பவங்கள் நிறைய உண்டு.
இவர்கள் சொல்வது போல், வாக்கு எந்திரத்தில் ஹேக் செய்து பிஜேபி வெற்றி பெற்று விடுவார்கள் என்கிறார்கள். அப்படியென்றால் தமிழ்நாட்டில் இதுவரை அதிமுக மற்றும் திமுக மாறி, மாறி வெற்றி பெற்று இருக்கிறது. தமிழ்நாட்டில் அவர்களால் தேர்தல் இயந்திரத்தில் ஹேக் செய்து வெற்றி பெற முடியாதது ஏன்? அது நடக்கவில்லை. மேலும், ஒரு சில இடங்களில் ஒரு சில தவறுகள் நடக்க தான் செய்யும் .அது அங்குள்ள சந்தர்ப்ப சூழ்நிலையை பொறுத்தது.
அதற்காக ஒட்டுமொத்த இந்தியாவில் நடக்கும் தேர்தல் அனைத்தும் தவறானது என்று சொல்ல முடியாது. அதேபோல் ஆட்சியிலும் 100 பங்கு யாராலும், சரியான முறையில் நிர்வாகத்தையோ அல்லது ஊழலே இல்லாத நிர்வாகத்தையோ கொடுக்க முடியாது. காரணம் மக்களின் மனநிலை ஊழல்வாதியாக இருந்தாலும், பணம் கொடுத்தால் வாக்களிக்கிறார்கள். இது அவர்களுடைய வாக்குரிமை பணத்திற்காக விற்பனை செய்கிறார்கள்.
இது தவிர ,ஒரு பக்கம் ஜாதி வைத்து விற்று பிழைக்கும் கூட்டம், அம்பேத்கரை வைத்து அரசியல் செய்வதும், அவரைப் பற்றி பேசி இவர்கள் மேதையாகி விடுவதும் தற்போதைய அரசியல் களமாகிவிட்டது. அம்பேத்கர் சட்டத்தை பல நாடுகளில் இருந்து காப்பி அடித்தவர். மேலும், அவர் கொண்டு வந்த சட்டம் அந்த கால மக்களுக்கு மட்டுமே அது பொருந்தும். இந்த கால மக்களுக்கு அது பொருந்தாது. இந்த நாட்டை ஆண்ட ஆங்கிலேயன் அப்போது பட்டதாரிகளுக்கும், படித்தவர்களுக்கு மட்டுமே ஓட்டுரிமை கொடுத்தான். அவர்கள் யாரும் பணத்திற்காக தனது வாக்குரிமையை விற்கவில்லை.
ஆனால்,இன்று அனைவருக்கும் ஓட்டுரிமை கொடுத்து, தன்னுடைய வாக்குரிமையை பணத்திற்கு விற்கின்ற தகுதியற்ற கூட்டமாக தான் குறிப்பிட்ட சதவீத வாக்காளர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணம், பிரியாணி, மது பாட்டல் இது யார் அதிகப்படியாக கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தன்னுடைய வாக்கு என்று முடிவு செய்து விடுகிறார்கள். இப்படிப்பட்டவர்களிடம் வாக்குரிமை கொடுத்ததால், இன்று அரசியலில் ஊழலும், ரவுடிசமும் ,மோசடிகளும் தொடர்கதையாகி வருகிறது. மேலும், பதவி அதிகாரத்திற்கு வருவது, சட்டப்படி கொள்ளை அடிப்பதற்காக தான் இருக்கிறதா? எதற்கு மக்கள் நம்மை தேர்வு செய்கிறார்கள்? என்பதாவது அவர்களுக்கு புரிந்துள்ளதா? ஆனால், இவர்களுடைய குற்றச்சாட்டு சம்பந்தமில்லாமல் இருக்கிறது .ஒரு பக்கம் தேர்தல் ஆணையம், மறுபக்கம் மோடி. தவிர ,
இந்த நாட்டில் தேர்தலுக்காக சுமார் மத்திய அரசு ஐயாயிரம் கோடிகளுக்கு மேல் செலவு செய்கிறது. இவ்வளவு செலவு செய்து தேர்தலை நடத்தும் தேர்தல் ஆணையத்தின் மீதும் மிகப்பெரிய குற்றச்சாட்டு வைக்கிறார்கள். இது மக்களை குழப்பம் புரட்சியாளர்கள் போல பேசுகிறார்கள். அதனால், மக்கள் தான் இனி இந்த சமூக வலைதளத்திலும், இணையதளத்திலும் வருகின்ற செய்திகள் கருத்து சுதந்திரத்தில் மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துமா ?
அதனால், வாக்காளர்களும், பொதுமக்களும், இளைஞர்களும் ,உண்மை நிலையை புரிந்து கொள்ளாமல் எளிதில் நம்புவது அறிவின் பலவீனமாகும் என்பதை புரிந்து கொண்டால் சரி.