ஏப்ரல் 17, 2024 • Makkal Adhikaram
தேசிய ஜனநாயக கூட்டணியின் திருப்பூர் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் கருப்பு முருகானந்தம் திருப்பூரில் பிரதமர் மோடியின் நலத்திட்டங்களை பயனாளிகளுக்கு நேரடியாக கொண்டு சென்று தீர்வு காண்பேன் என்ற உறுதியளித்து வாக்குகளை சேகரித்தார்.
தேர்தல் ஆணையம் அரசியல் கட்சிகளுக்கு இன்று மாலை 6 மணியுடன் தேர்தல் பரப்புரைகளை முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது . அதற்கு மேல் பரப்புரைகளை மேற்கொண்டால் அரசியல் கட்சிகள் மீது தேர்தல் ஆணையம் வழக்கு பதிவு செய்யும்.
மேலும், தேர்தல் விதி முறைகளுக்கு கட்டுப்பட்டு தான் அரசியல் கட்சிகள் செயல்பட வேண்டும் .மேலும், பல்வேறு இடங்களில் ஓட்டுக்கு பணம் வழங்குவது அரசியல் கட்சிகள் வாடிக்கையாக இருந்து வருகிறது. அதை தேர்தல் ஆணையம் இன்னும் துரிதமாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது, அந்த இடத்தில் அந்த அரசியல் கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் பணம் கொடுத்து வாக்குகளை பெறுவது அது ஜனநாயக தேர்தல் அல்ல .அதற்கு தேர்தல் ஆணையம் ஒருபோதும் அனுமதிக்க கூடாது.
இது தவிர, கள்ள ஓட்டு போடுவது திமுகவிற்கு கைவந்த கலை. அதை எப்படி கண்காணித்து நடவடிக்கை எடுப்பது ?என்பது குறித்து தீவிர ஆலோசனை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள வேண்டும் .மேலும், சென்னை உள்ளிட்ட நகரங்களில் கள்ள ஓட்டுகள் தொடர்ந்து போடப்பட்டு வருகிறது. இதற்கு என்ன காரணம் ?என்றால், ஒரு பக்கம் வெயில், மற்றொரு பக்கம் பணக்காரர்கள் இந்த வெயிலில் வந்து நின்று வாக்களிக்க மாட்டார்கள். ஏழை ,எளிய நடுத்தர மக்கள்தான் அவர்களுடைய வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். அதனால், பணக்காரர்களின் வாக்கு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் கள்ள ஓட்டாக போடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது .
அதை ஒவ்வொரு பூத் ஏஜென்ட்கள் மற்றும் வாக்கு மையங்கள் அனைத்தும் சிசிடிவி கேமராக்கள் வைத்து கண்காணிக்க வேண்டும். கண்காணிப்பது மட்டுமல்ல, கண்காணிப்பு குழுவும் அமைத்து சுற்றிவர வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க வேண்டும். அதற்கு தேர்தல் ஆணையம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். தவிர, ஒரு கட்சிக்கு மக்கள் வாக்கு செலுத்திக் கொண்டிருக்கும்போது, அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்று திமுக நினைத்து, அங்கே அடாவடி, ரவுடிசம் உள்ளிட்டவை நிகழ்த்த வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழாமல் தேர்தல் ஆணையம், காவல்துறை தேர்தல் கண்காணி குழு அமைத்து செயல்பட வேண்டும் .
மேலும், செய்தித் துறையில் சரியான அறிவிப்புக்கள் இல்லாமல், தகுதியான பத்திரிகைகளுக்கெல்லாம் தேர்தல் பத்திரிகையாளர்கள் அரசு அடையாள அட்டை வழங்கவில்லை . அதனால், பத்திரிகையின் அடையாள அட்டை வைத்திருந்தாலும், அதற்குரிய அங்கீகாரம் அளித்து வாக்களிக்கவும், செய்திகளை சேகரிக்கவும், தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை.