திமுக ஆட்சியில் நல்ல நிர்வாக திறமை உள்ள சில ஐஏஎஸ் அதிகாரிகளில் பொன்னையாவும் ஒருவர். இவருக்கு முன்னால் நகராட்சி நிர்வாகம் எப்படி இருந்தது? என்பதை நடுநிலையோடு ஆய்வு செய்தால் ,மிகப்பெரிய குளறுபடி, அதிக கரப்ஷன், நிர்வாக சீர்கேடு அதிக அளவில் இருந்தது. இவர் வந்த பிறகு இந்த சீர்கேட்டையெல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து, அதிகாரிகளுக்கு கடிவாளம் போட்டது போல் இருந்தது .இது எல்லாம் இந்த அதிகாரிகளுக்கு ரொம்ப பிடிக்கவில்லை.
ஏனென்றால், அவர்கள் எத்தனை மணிக்கு வந்தாலும், எப்படி கணக்கு எழுதி வைத்துவிட்டு கணக்கு காட்டினாலும் சரி கட்டி விடுவார்கள். அது அவரிடத்தில் முடியவில்லை. எல்லாரையும் சரியான முறையில் வேலை வாங்கினார் .அதிகாரிகள் அவரைக் கண்டாலுமே, வெருப்புணர்வு உள்ளுக்குள் இருந்துள்ளது. அது மட்டுமல்ல, இப்போது கூட ஒரு அதிகாரி தெரிவிக்கிறார் சில இடங்களில் பட்டாசு வெடிக்காத குறை தான் என்கிறார் .அந்த அளவிற்கு இவர்கள் மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்கள் என்றால், நகராட்சி நிர்வாகம் எந்த அளவிற்கு ஒழுங்குப்படுத்தி, அதை கட்டுப்பாடோடு வைத்திருந்தார் என்பது இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
அரசியல்வாதிகள் ஒரு பக்கம் வருமானத்திற்கு சட்டத்தை வளைக்கிறார்கள் என்றால், அதிகாரிகள் அவர்களோடு கூட்டு சேர்ந்து வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். அது வெளியில் வரும் போது தான் பொதுமக்களுக்கு தெரியும். வராத வரை எதுவும் தெரியாது. மேலும், இவர்களின் கூட்டுக் கொள்ளை ரகசியம் தெரிந்தவர் பொன்னையா. தவிர, இவர்களுடைய
திறமையான ஊழல்களை எல்லாம் ஒரு கட்டுக்குள் கொண்டு வந்து எந்த அளவிற்கு அதிகபட்சம் சீர் செய்ய முடியுமோ, நிர்வாகத்தை நகராட்சி நிர்வாகத்தில் இயக்குனராக பொன்னையா கொடுத்துள்ளார்என்கிறார்கள் சில அதிகாரிகள். ஆனால், கடுமையாக வேலை வாங்குவது அவர்களுக்கு அது கஷ்டமாக இருந்துள்ளது. அது இனிமேல் எப்படி இருக்கும்? என்பது ஓரிரு மாதங்களில், பொது மக்களுக்கு தெரிய வரும் . இனி நகராட்சி நிர்வாகம் கேள்விக்குறியாகுமா? என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டிய ஒன்று.
இதில் ஒரு பெரிய அரசியல் அமைச்சர் கே என் நேருவுக்கும் நிர்வாக இயக்குனர் பொன்னையாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக இரவோடு இரவாக ஊராட்சிகள் நிர்வாக இயக்குனராக மாற்ற வேண்டிய ரகசியம் என்ன ? என்று அதிகாரிகள் வட்டாரம் தெரிவிக்கிறது. இப்படி ஒரு தகுதியான, திறமையான ஒருவராலே இந்த அளவிற்கு நகராட்சி நிர்வாக அதிகாரிகள் மற்றும் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் டாப் கொடுத்தார்கள் என்றால், இவருக்கு பதிலாக தற்போது போடப்பட்டுள்ள நிர்வாக இயக்குனர் சிவராசு எப்படி தாக்கிப் பிடிக்கப் போகிறார்? என்பதுதான் மனசாட்சி உள்ள சில நகராட்சி அமைப்பு பிரதிநிதிகளின் அரசியல் வட்டாரமும், அதிகாரிகள் வட்டாரமும் பேசுகின்ற பேச்சு.
மேலும், திமுக ஆட்சியில் தொடரும் ஊழல் நிர்வாகத்தை முதல்வர் மு க ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை என்றால், வரும் நாடாளுமன்ற 2024 தேர்தலில் நிச்சயம் இது எதிரொலிக்க தான் போகிறது. உண்மையை முதல்வர் ஸ்டாலின் புரிந்து கொண்டால் சரி.