நடுத்தர மக்களின் உழைப்பு , வளர்ச்சியின் காரணமாக புதிய இந்தியாவை உருவாக்குகிறது. ஆனால், நடுத்தர மக்கள் நடத்தும் பத்திரிகை சமூக மக்களின் நலனுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, உறுதுணையாக இருந்து வருகிறது.

ஆனால், இன்றுவரை அதற்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் எந்தவித நலனும், இந்த பத்திரிகைகளுக்கு கொடுக்கவில்லை என்பதுதான் சமூக நலன் கருதி வெளிவரும் பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் வேதனை. மேலும்,
அரசியலில் கார்ப்பரேட் மீடியாக்கள் மூலம் தங்கள் செய்திகளை விளம்பரப்படுத்தினால், மக்கள் அதிக அளவு பார்க்கிறார்கள். அவர்களுக்கு நம்முடைய செய்திகள் போய் சேருகிறது என்று ஒரு தவறான கருத்தில்தான் மத்திய, மாநில அரசு மற்றும் ஆட்சியாளர்கள் இருந்து வருகிறார்கள். இதற்கு உதாரணம் கடந்த எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், வெற்றி நடை போடுகிறது தமிழகமே, என்று கோடிக்கணக்கில் கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகளுக்கு கொடுத்து மக்களுடைய வரிப்பணத்தை வீணடித்தார். ஆனால்,
அவரால் மீண்டும் முதலமைச்சராக வர முடியவில்லை .ஏன் இந்த கார்ப்பரேட் பத்திரிகை மற்றும் தொலைக்காட்சிகள் எல்லாம் மக்களிடம் அதிக அளவில் விளம்பரப்படுத்தி கூட, அவரால் அதிக இடங்களை ஜெயித்து முதல்வராக வர முடியவில்லை? இதனால், மக்களுடைய வரிப் பணம் கோடிக்கணக்கில் வீணடித்தது தான் இவர்களுடைய அரசியல் வரலாறு.
இப்போது மத்திய மாநில அரசுகள், ஆட்சியாளர்கள், அரசியல் கட்சியினர் இந்த உண்மையை புரிந்து பத்திரிகை, தொலைக்காட்சிகள் மூலம் மக்களை ஏமாற்றி அல்லது தவறான செய்திகளை வெளியிட்டு அல்லது பொய்யான அல்லது போலியான கருத்துக்களை சொல்லி ,இந்த பத்திரிகை தொலைக்காட்சிகள் மூலம் பொதுமக்களை ஏமாற்ற முடியாது என்பதற்கு இதைவிட சான்று மத்திய மாநில அரசின் செய்தித்துறை உயர் அதிகாரிகளுக்கும் ,மக்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், ஆட்சியாளர்களுக்கும், வேறு எதுவும் தேவையில்லை.மேலும்,
பிரதமர் நரேந்திர மோடி நடுத்தர வர்க்கத்தினர் நடத்தக்கூடிய பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகைகளில் வருகின்ற பத்திரிகைகளின் தரம் மற்றும் உண்மை செய்திகள் ,அதன் அடிப்படையில் பத்திரிகைகளை வரைமுறைப்படுத்தி ,அதற்கு ஏற்றவாறு சலுகை, விளம்பரங்கள் கொடுக்க வேண்டும். இதனால், தகுதியானவர்கள் அரசியலுக்கு வர முடியும். தகுதியானவர்கள் ஆட்சியாளர்களாக வர முடியும். ஊழல் அற்ற ஆட்சியை மக்களுக்கு கொடுக்க முடியும் .வெளிப்படையான நிர்வாகத்தை மக்களுக்கு கொடுக்க முடியும்.மேலும்,
%20(1)%20(1).jpg)
மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் இந்த பத்திரிகைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பது நடுத்தர மக்களுக்குப் பல நன்மைகள் ஏற்படுத்தி அவருடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.