நாட்டில் இலவசங்களை அறிவிப்பது, அரசியல் கட்சிகளின் ஓட்டு வேட்டையாகிவிட்டது. மேலும், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், திறமைக்கேற்ற வேலை வாய்ப்பு, கல்வி ,மருத்துவம் இந்த திட்டங்களை பற்றியும், ஊழலற்ற நிர்வாகத்தை பற்றியும், மக்களிடம் கொண்டு செல்வதை விட்டு விட்டு ,இன்று காங்கிரஸ் கட்சி ஏழைப் பெண்களுக்கு ஒரு லட்சத்தை இலவசமாக வழங்குவதும், திமுக மகளிர் உரிமைத் தொகை ஆயிரம் ரூபாய் அளிப்பதும், இதனால், மக்களின் வாழ்வாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படுகிறதா? எதுவும் இல்லை .உழைக்கும் மக்களுக்கு சரியான ஊதியம் கொடுத்தாலே போதும்.
விவசாய குடும்பங்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்க வேண்டும் .விவசாயத்தை பாதுகாக்க வேண்டும். நாட்டில் நல்லாட்சி, வெளிப்படையான நிர்வாகம் கொடுக்க வேண்டும் .காவல்துறையில் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு கொடுக்கின்ற, அதே உரிமை அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் .நீதிமன்றத்தில் நீதி காலதாமதம் இன்றி மக்களுக்கு சென்றடைய வேண்டும் .
மேலும், பணத்திற்காக மக்கள் வாக்களிக்காமல், வேட்பாளர்களின் தகுதியும், அவர்கள் சேவையும் பார்த்து வாக்களிக்க வேண்டும். மேலும், வெற்றி பெற்றவர்கள், வாக்களித்த மக்களை அலட்சியப்படுத்துவதும், அவர்களுக்கு உரிய மரியாதை அளிக்காமல் இருப்பதும் வெட்கக்கேடானது. தவிர, இன்றைய திமுக ஆட்சியில் மாவட்ட ஆட்சியர்கள் இடம் பொதுமக்கள் மனு அளித்தால், அவர்கள் அதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஆட்சியாளர்கள் சொல்லும் வேலையை மட்டும் தான் செய்கிறார்கள். இவையெல்லாம் சமூக நலனில் முக்கியத்துவம் கொடுக்காத அரசாக உள்ளது.
மேலும், அரசியலில் பதவிக்கு வந்தவர்கள், அவர்கள் காட்டிய சொத்து கணக்கு தேர்தல் ஆணையத்தில் எவ்வளவோ, அதற்கு 10 சதவீதத்திற்கு மேல் வருமானத்தை காண்பித்தாலோ, அல்லது சொத்துக்களை வாங்கினாலோ அல்லது பினாமி சொத்துக்கள் உருவாக்கி வைத்திருந்தாலும், அவை அனைத்தும் பறிமுதல் செய்து நாட்டோடமை ஆக்கப்பட வேண்டும் .இதை பிரதமர் மோடி கொண்டு வந்தால் இதை எல்லா தரப்பு மக்களும் ஜாதி மத பேதம் இன்றி ஏற்றுக் கொண்டு இருக்கிறார்கள். தேர்தல் அறிக்கையில் மோடி இதை அறிவிப்பாரா ? என்பது சமூக நலன் சார்ந்த பத்திரிகை மற்றும் பத்திரிகையாளர்களின் முக்கிய கோரிக்கை.
இது மேடையில் பேசுவதற்கும், அறிக்கைகள் கொடுப்பதற்கும், ஊடகங்களில் செய்திகள் வெளியிடுவதற்கும், எந்த சம்பந்தமும் இல்லாமல் ஆட்சி நிர்வாகம் நடத்துவது மக்களுக்கானதா? இல்லை ,இவர்களுக்கானதா? இப்படிப்பட்ட ஆட்சி நிர்வாகத்தை கொடுப்பதற்கு இலவசங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது மக்களின் உரிமையை பறிக்கும் வேலை .இதில் மக்களும் சிந்திக்க வேண்டும். தேர்தல் ஆணையமும் இலவச அறிவிப்புகளை அரசியல் கட்சிகள் அறிவித்தால் ,அதற்கான நிதியாதாரத்தை மக்களின் வரிப்பணத்தில் கொடுப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவர்களுடைய இலவச அறிவிப்புக்கள் இவர்களுடைய அரசியல் கட்சிகளில் இருந்து நிதி ஆதாரத்தை கொடுக்கச் சொல்லுங்கள் .
மக்களின் வரிப்பணம், உழைக்கும் மக்களின் முன்னேற்றத்திற்கு, நாட்டு மக்களின் அடிப்படை தேவைகளுக்கு, நாட்டின் பாதுகாப்புக்கு, இந்த தேசத்தின் வளர்ச்சிக்கு, தொழில் வளர்ச்சிக்கு, வேலை வாய்ப்பு உருவாக்குவதற்கு முக்கியத்துவமாக இருக்க வேண்டுமே ஒழிய, அதை கொண்டு வந்து இலவசம் என்ற பெயரில் மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கக் கூடாது.
இது பற்றி வரி கொடுக்கின்ற ஒவ்வொரு மக்களும் இந்த இலவசத்தை எதிர்க்கிறார்கள். ஏனென்றால் ஒருவன் உழைத்து தான் அது வேலைக்கு சென்றாலும் அல்லது அரசு வேலைக்கு சென்றாலும், அவர்களுடைய சம்பளத்திலிருந்து அரசுக்கு வரி செலுத்தி வருகிறார்கள். அதேபோல், தொழில் நிறுவனங்கள் , வியாபார நிறுவனங்கள் ,வர்த்தக மையங்கள் அனைத்தும் அரசுக்கு வரி செலுத்துகிறது .இந்த பணம் இலவசமாக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவர்கள், கொடுப்பது ஏன்? என்று தான் எல்லா தரப்பு மக்களும் கேட்கிறார்கள்?
ஏழ்மையாக இருக்கும் பெண்களுக்கு தொழில் வாய்ப்புக்காகவோஅல்லது வேலை வாய்ப்புக்காகவோ அல்லது கல்வி வாய்ப்புக்காகவோ அல்லது மருத்துவ உதவிக்காகவோ கொடுத்தால், அது எல்லா தரப்பு மக்களும் ஏற்றுக் கொள்வார்கள். ஆனால், உழைக்கும் மக்களின் வேர்வை சிந்திய பணம் தான் வரி .அதை உழைக்காமல் இருப்பவர்களிடம் கொண்டு போய் கொடுக்கிறார்கள். என்றால் இந்த அறிவிப்பு உழைக்கும் மக்களை முட்டாள் என்கிறார்களா ? மேலும், காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் மல்லிகார்ஜுன் கார்க்கேவின் அறிவிப்பு உழைக்கும் மக்களுக்கு எதிரானது .
அதை தேர்தல் ஆணையம் நிராகரிக்க வேண்டும் என்று சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளும், பத்திரிக்கையாளர்களும் ,சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்ற முக்கிய கருத்து .