ஆகஸ்ட் 10, 2024 • Makkal Adhikaram
ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றம், எதிரி நாட்டுக்கு அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று தீர்மானிக்கிறார்கள். பொருளாதாரத்தில் முன்னேறினால் அந்த நாட்டை நாம் எப்படி எதிர்கொள்ள முடியும்? ராணுவ பலம் அதிகரித்தால் அதனுடன் போட்டி போடுவது கடினம். அல்லது தொழில் வளர்ச்சியில் போட்டி போடுவது கடினம். அதனால், அதை தடுக்க ஒரு நாட்டுக்கு எதிரி நாடு அதை தடுக்க என்னென்ன வழிகளை அரசியல் ரீதியாக கையாளலாம்? என்பதுதான் அதனுடைய முக்கிய நோக்கமாக இருந்து வருகிறது.
இந்தியாவுக்கு பாகிஸ்தானும், சைனாவும் எதிரி நாடாக இருப்பதால் எந்த விதத்திலும் இந்தியாவை எப்படி வீழ்த்தலாம்? இங்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது? அவை அத்தனையும் இந்த எதிரி நாடுகள் தெரிந்து வைத்துள்ளன .இதை எப்படி ஆரம்பிக்கலாம்? எப்படி இதை உருவாக்கலாம்? இதற்கென்று ஒரு திட்டம் வகுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது எல்லாவற்றையும் முறியடித்து, நாட்டை முன்னேற்ற பாதையில் வழிநடத்திச் செல்வது என்பது தகுதியுள்ள ஆட்சியாளர்களால் தான் அதை செய்ய முடியும். எல்லாராலும் முடியாது.
மக்களுக்கு அரசியல் சூதாட்டங்கள், அரசியல் கட்சிகள் சூதாட்டங்கள் அனைத்தையும் தெரிந்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் என்ன தான் உழைத்தாலும்? எந்த வழியில் நீங்கள் சம்பாதித்தாலும், நாட்டின் அதிகாரம், ஆட்சி ராணுவத்தின் கையிலோ அல்லது வேறு நாட்டின் கையிலோ போனால்! அவர்கள் சொல்வது தான் சட்டம். அதனால், இந்த நாட்டுக்கு தேவையில்லாத ஒரு கட்சியாக இன்று காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது.
இது தற்போது இங்குள்ள முஸ்லிம்களையும், கிருத்துவர்களையும் பெரும்பான்மை இந்துக்களை அழித்துவிட்டு ,பதவி அதிகாரத்திற்காக, அந்நிய சக்திகளை உள்ளே கொண்டு வர முயற்சி செய்கிறது. மேலும், இந்த நாட்டை ஆளுவதற்கு ராகுல் , பிரியங்கா, சோனியா, தகுதியற்றவர்கள். அப்படி இருந்தும், அந்த கட்சி இவர்கள் உடைய தலைமையை ஏற்றுக் கொண்டு, இதில் வேற இந்தியா கூட்டணி, இவர்கள் தலைமையை ஏற்றுக்கொண்டு, இந்திய மக்களை முட்டாளாக்கிக் கொண்டிருக்கிறார்கள் .
அதைவிட ஒரு கேடுகெட்ட வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான், இங்கே காங்கிரஸ் கட்சி தலைவன் என்ற பா சிதம்பரம் மற்றும் செல்வப் பெருந்தகை இவர்களுடைய சுயநல அரசியலுக்கு, இந்திய நாட்டில் அரசியல் தெரியாத முட்டாள்கள் பணம் கொடுத்தால் எவனுக்கு வேண்டுமானாலும் ஓட்டு போட்டு கொண்டிருக்கிறது .இது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் அவர்களை நல்லவர்கள் என்று சர்டிபிகேட் கொடுத்து கொண்டு இருக்கும் கார்ப்பரேட் பத்திரிக்கை, தொலைக்காட்சிகள், மக்களுடைய வரிப்பணத்திலே மக்களை ஏமாற்றிக் கொண்டு ,சலுகை, விளம்பரங்களை பெற்று பொய்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் என்ன பொய் சொன்னாலும் சொல்வதற்கு நீ என்ன புரோக்கரா? அல்லது பத்திரிகையா? எது என்பதை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திர சூட் இதை முடிவு செய்ய வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும், பத்திரிக்கை, தொலைக்காட்சிகள் நாட்டின் பாதுகாப்பு, அரசியல் ஸ்திரத்தன்மை, மக்கள் நலன் ,சமூக நலன் இவை அனைத்தையும் கொண்டு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.ஆனால், பணத்திற்காக பத்திரிக்கையும், தொலைக்காட்சியும் இன்று செய்தியாளர்கள் முதல் பத்திரிக்கை வரை இதுதான் கொள்கையாகிவிட்டது.
அதனால், இதை எந்தெந்த பத்திரிகை, தொலைக்காட்சிகள் சரியாக செய்கிறது? என்பதை பார்த்து நீதிமன்றம் முடிவு செய்ய வேண்டும். மேலும், இந்த தேசத்தின் நலன் மிகவும் முக்கியமானது. இங்கு வாழ்கின்ற மக்களின் நலன் முக்கியமானது. இங்கே இருந்து கொண்டே எதிரி நாடுகளுக்கு ஆதரவாக பேசிக் கொண்டிருப்பது, இங்குள்ள மக்களின் வரிப்பணத்தை பங்கு போட்டுக் கொண்டு, இதை எல்லாம் செய்து கொண்டிருந்தால், அதற்கும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர் கட்சிகள் மூட்டு கொடுத்து, சப்போட்டா பேசுவது ,அரசியல் தெரியாத முட்டாள்கள் அதைப் பற்றியும் அலட்சியமாக தான் இருந்து கொண்டிருக்கிறார்கள்.
மேலும், இந்திய நாட்டு ராணுவத்தின் வலிமை அவர்களுடைய தியாகம் இந்திய மக்களையும், தேசத்தையும் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களுடைய தியாகத்தையும், உழைப்பையும் ,நேர்மையும் மக்கள் புரிந்து கொள்ளாமல், அலட்சியம் செய்வது, நம்மை நாமே அலட்சியப்படுத்திக் கொள்ளும் வேலை. அதனால் நாட்டின் அரசியல் நாட்டு மக்களுக்கு மிகவும் முக்கியத்துவமானது .
நாட்டில் சினிமா , பத்திரிகை நாட்டு மக்களுக்கும் இந்த தேச நலனுக்கும் முக்கியத்துவமாக இருக்க வேண்டுமே ஒழிய, அவர்கள் எக்கேடு கெட்டுப் போனாலும் பரவாயில்லை, பணத்திற்கு முக்கியத்துவம் அளித்து செயல்படும் வேலை தான் தற்போது இருந்து வருகிறது .இதையெல்லாம் மத்திய அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், நீதிமன்றமும் தலையிட்டு அதை ஒழுங்கு படுத்தும் வேலையில் ஈடுபட்டால்தான், நாட்டில் கலகங்கள், போராட்டங்கள், குழப்பங்கள் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்க முடியும்.
மேலும், பங்களாதேஷில் நடந்த ராணுவ புரட்சி, அந்நிய சக்திகளின் தலையிடால் நடந்துள்ளது. அது இந்தியாவுக்கு நடக்காது என்று அலட்சியமாக இருக்கக் கூடாது. அதனால், எந்த அரசியல் கட்சிகளாக இருந்தாலும், அந்நிய நாட்டு சக்திகளுக்கு கைக்கூலிகளாக மறைமுகமாக செயல்பட்டால் உளவுத்துறை கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால், நாட்டின் பாதுகாப்பு, அரசியல் மக்களுக்கு எதிரானதாக இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட சைனா ஒரு லட்சம் கோடிக்கு மேல் மறைமுகமாக செலவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. அதனால், மக்கள் விழிப்புடன் அரசியலை புரிந்து கொள்வது, இந்த தேசத்திற்காக மட்டுமல்ல, நமக்காகவும், நம்முடைய தலைமுறைகள் வாழ வைக்கவும், நாம் இதை புரிந்து செயல்பட வேண்டிய சூழ்நிலைக்கு இன்றைய அரசியல்.
எனவே, இளைய தலைமுறைகள் நடிகர்கள் பின்னால், போலி அரசியல்வாதிகள் பின்னால் சென்று கொண்டு, பணம் சம்பாதிக்கவும், கோடிகளில் கொள்ளையடிக்கவும், அரசியல் வியாபாரம் செய்யவும், அடித்தட்டு மக்களை பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும், ஏமாற்று அரசியலாக இன்றைய அரசியல் இருந்து வருகிறது.
அதை மாற்றுவது உங்கள் கையில் ……………..!