நாட்டில் அமலாக்கத்துறை மற்றும் உச்சநீதிமன்றத்தின் நடவடிக்கை இல்லையென்றால் செந்தில் பாலாஜி போன்ற அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்களின் ஊழல் மக்களுக்கு தெரியுமா?

அரசியல் இந்தியா சமூகம் ட்ரெண்டிங் தமிழ்நாடு மத்திய மாநில செய்திகள் ரிசன்ட் போஸ்ட்

இன்று எதிர்க்கட்சிகளின் ஒரே குரல் பிஜேபி எங்களை அமலாக்கத்துறை, வருமானத்துறை, சிபிஐ போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி ,பழிவாங்கும் அரசியல் செய்கிறது. இதுதான் அவர்களுடைய தாரக மந்திரமாக இன்றைய பத்திரிகை தொலைக்காட்சிகளில் கூவிக் கொண்டிருக்கிறார்கள்.மேலும்,

அப்படித்தான் பிஜேபி அரசியலுகாக செய்கிறது அல்லது எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் வேலையை செய்கிறது என்றே வைத்துக் கொள்வோம். எதிர்க்கட்சிகளை பிஜேபி ஊழல் செய்ய சொல்கிறதா ? இல்லை இந்தியாவின் 140 கோடி மக்கள் நாங்கள் வாக்களித்தது நீங்கள் ஊழல் செய்து உங்கள் வீட்டுக்கு அல்லது வெளிநாடுகளில் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு வாக்களிக்கிறோம் என்று பொதுமக்கள் சொல்கிறார்களா?

 தமிழ்நாட்டின் முதல்வர் மு க ஸ்டாலின் ஊழல் செய்த அமைச்சரை நீக்கிவிட்டேன் என்று ஒரு வார்த்தை கூட சொல்லாமல், பிஜேபிக்கு எச்சரிக்கை சவால் விடுகிறார். அப்படி என்றால், தமிழ்நாட்டில் அரசியல் தெரியாத முட்டாள்கள் அதிகம் இருக்கிறார்கள் என்பது இவர்களுடைய கருத்து.

 தவறு இவர்களிடம் இல்லை. வாக்களிக்கும் மக்களிடம் தான் தவறு இருக்கிறது. மக்கள் திருந்தாமல், இது போன்ற ஊழல்வாதிகளை திருத்துவது மிக மிக கடினம் . ஏனென்றால் ஊழல் செய்த பணத்தை ஓட்டுகளுக்கு தானம் கொடுப்பது அல்லது பிச்சை கொடுப்பது தமிழ்நாட்டின் தேர்தல் வியாபாரம். இதை உணராமல், தனக்கு ஏதோ இலவசமாக கொடுக்க வந்திருக்கிறார்கள் என்று நினைக்கின்ற முட்டாள்கள் இருக்கும் வரை தமிழ்நாட்டின் ஊழல் அரசியலை மாற்ற முடியாது.

மேலும், இந்த ஊழல்வாதிகளின் பொய்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கும் பத்திரிகை, தொலைக்காட்சிகளை பார்த்து ஏமாறும் முட்டாள்கள் இருக்கும் வரை இதற்கு எந்த ஒரு விடியலும் ஏற்படாது. செந்தில் பாலாஜி மீது எடுக்கும் நடவடிக்கை அமலாக்க துறையும், உச்சநீதிமன்றமும் சேர்ந்து எடுக்கின்ற நடவடிக்கை. இதில் பிஜேபிக்கு என்ன வேலை ?  ஆட்சி அதிகாரத்தில் இருந்து கொண்டு, நான் எப்படியும் சட்டத்தை ஏமாற்றலாம். மக்கள் வாக்களித்து விட்டார்கள், அவர்களால் கேள்வி கேட்க முடியாது. இந்த ஒரு விஷயம் ஒரு சாதாரண கிராமத்தில் உள்ள பஞ்சாயத்து தலைவர்கள் முதல் அமைச்சர்கள் வரை இதைத்தான் நினைக்கிறார்கள். இவர்களுக்கு ஓட்டு போட்டவன் அத்தனை பேரும் முட்டாள்கள் என்று, இந்த முட்டாள்கள் நினைத்து இது போன்ற காரியங்களை செய்து கொண்டிருக்கிறார்கள்.

 எதற்காக ஓட்டு போட்டோம்? இல்லை, ஏன் ஓட்டு போடுகிறோம்? அதையெல்லாம் தெரியாதவனிடம் இவர்கள் பேசிக் கொண்டிருக்க வேண்டும். தெரிந்தவர்களிடம் பேச முடியாது. அதேபோல் இவர்கள் சொல்லுவதை  அப்படியே பேப்பரிலும் ,தொலைக்காட்சிகளிலும் காட்டிக்கொண்டிருப்பவர்களிடம் பேசலாம். உண்மையை வெளிப்படுத்தும் சமூக அக்கறை உள்ள ஊடகங்களிடம் பேச முடியாது. அதை நிச்சயம் மக்களிடம் கொண்டு செல்வோம். தவறுகளை மக்களிடம் சுட்டிக் காட்டுவது தான் பத்திரிகைகளையும் வேலை.

 தவறுகளையும், ஊழல்களையும் சட்டப்படி செய்திருக்கிறார்கள் என்று கூறுவதற்கு பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் தேவையில்லை. அல்லது அதை நியாயப்படுத்த வாதங்கள் தேவையில்லை .மேலும், இப்படிப்பட்ட பத்திரிகை ,தொலைக்காட்சிகளுக்கு எப்படி மக்களின் வரிப்பணத்தில் சலுகை விளம்பரங்கள் கொடுக்கப்படுகிறது ?அதற்கு ஒத்து ஊத ஐஏஎஸ் ,ஐபிஎஸ் போன்ற அதிகாரிகள் தேவையில்லை. தவிர,

அமலாக்கத்துறை சட்ட விதிமுறைகளை கடைப்பிடித்ததா? நீதிமன்றம் கடைப்பிடிக்கிறதா? மருத்துவர்கள் கடைபிடிக்கிறார்களா? இந்த கேள்வியை எல்லாம் கேட்கின்ற பத்திரிகை, தொலைக்காட்சிகள் முதலில் செந்தில் பாலாஜி போன்ற அமைச்சர்கள் எதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்? இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்களா? அல்லது ஊழல் செய்ய வந்தவர்களா? இந்த கேள்வி ஏன் அங்கே கேட்கவில்லை?

 மேலும், இதுவே ஒரு ஐஏஎஸ் அதிகாரி அல்லது ஐபிஎஸ் அதிகாரி தவறு செய்திருந்தால், எத்தனை கேள்விகள் கேட்பார்கள்? இதுதான் பத்திரிகைகள் செய்கின்ற மிகப்பெரிய தவறு. ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு ஒரு பக்கம், சாமானியர்களுக்கு ஒரு பக்கம், பணக்காரர்களுக்கு ஒரு பக்கம், இப்படி எல்லாம் முகத்தை திருப்பிக் கொண்டிருந்தால், முட்டாள்கள் தான் இந்த பத்திரிகை, தொலைக்காட்சிகளை பார்த்து ரசித்து கொண்டு இருக்க முடியும்.

மேலும், சட்டப்படி அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதில் அரசியல் கட்சிகளுக்கு விமர்சனம் செய்ய தகுதி இல்லை. சீமான், திருமாவளவன் நீங்களெல்லாம் ஒரு கட்சியின் சொல்வதற்கு வெட்கக்கேடு. அமலாக்கத்துறை, உச்சநீதிமன்றம் அங்கே போய் எச்சரிக்கை விடுங்கள். அப்போது தெரியும். உங்களுடைய கருத்து சுதந்திரம் தமிழ்நாட்டில் பிஜேபிக்கு எச்சரிக்கை என்று சொன்னவர்கள், அவர்களுடைய கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்த போது, இந்திரா காந்தியிடம் இந்த வார்த்தை சொல்லி இருந்தால், இந்நேரம் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைத்திருப்பார் .மோடி அதை செய்யவில்லை. அது அவருடைய பெருந்தன்மை.

இனியாவது அரசியல் தெரியாத மக்கள் உண்மையை என்னவென்று படிக்க வேண்டிய காலகட்டம் ஒவ்வொருவருக்கும் உண்டு. படித்தால் தான் வருங்காலத்தை இளைய தலைமுறைகள், மக்களுக்கான அரசியலை தேர்வு செய்ய முடியும். இல்லையென்றால், ஊழல்வாதிகள் போடுகின்ற பிச்சைகளை வாங்கிக் கொண்டு நீங்கள் வாக்களிக்க வேண்டிய நிலைமைக்கு தள்ளப்படுவீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *