தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.
இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று நீதிபதி குறிப்பிட்டார். இங்கே இவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒரு மந்திரியை, உச்ச நீதிமன்றத்தில் அவர் நிரபராதி என்று அவருக்கு எம்எல்ஏ மற்றும் மந்திரி பதவியை கொடுக்கலாம் என்றால்! இங்கே நீதி சட்டப்படியா? அல்லது தர்மத்தின் படியா? அல்லது மனசாட்சி படியா? இந்த நீதிமன்றம் இருக்கிறது? என்று மக்கள் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளது. நீதிபதிகள் தங்கள் கடமையிலிருந்து தவறினால், நீதி தேவன் தண்டனைக்கு அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் அதற்குரிய பலனை அவர்கள் அனுபவிக்க நேரிடும். நீங்கள் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், இறைவன் அதற்குரிய தண்டனையை உங்களுக்கும் கொடுக்காமல் விடமாட்டார். தவறு ,தவறுதான்.
நீங்கள் கொடுத்த தீர்ப்புக்கும் ,உயர்நீதிமன்ற நீதிபதி கொடுத்த தீர்ப்புக்கும், இதில் யாருடைய தீர்ப்பு தவறு? யாருடைய தீர்ப்பு சரியானது?இது தான் மக்களிடம் பேசு பொருளாகியுள்ளது. மேலும், நீதி விலை போய் விட்டதா? இப்படி ஊழல் மந்திரிகளை எல்லாம் கஷ்டப்பட்டு, அவர்களுடைய ஊழல்களை வெளிக்கொண்டு வந்து, மக்களிடம் சேர்ப்பதற்குள் சிபிஐ, அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், இதற்காக எவ்வளவு கடுமையான உழைப்பு, நேரம் செலவிட்டிருப்பார்கள்?
(இதில் கவர்னர் ஆர் என் ரவி மனசாட்சி படி சட்டப்படி நடந்து கொண்டார். அவர் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு! இது என்ன கொடுமை?)
ஆனால், ஒரு சில மாதங்களில் அவருக்கு பதவி, பிரமாணம் செய்து வைக்கலாம் என்று தீர்ப்பளித்தால், பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்து இருப்பார்கள். நீதித்துறையும் அதிர்ச்சி அடைந்துள்ளது. பத்திரிக்கை துறையில் சொல்ல வேண்டியது இல்லை. அது வியாபாரம் ஆக்கிக் கொண்டார்கள் .சுயநலமாக்கிக் கொண்டார்கள் .அதனால் காசு கொடுத்தால் நீங்கள் எப்படி சொல்கிறீர்களோ ,அப்படி எழுத பல பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் இருக்கிறது. இறுதியாக எல்லாமே தவறான முறையில் பணத்திற்காக விலை போனால், மக்கள் அதற்கான வேதனை, துன்பத்தை ஒவ்வொரு நாளும் யாரிடம் சென்று முறையிடுவார்கள்? இதற்கு யாராவது பதில் அளிக்க முடியுமா ? கடவுளிடம் தான் முறையிடுவார்கள்.
அந்த கடவுள் கண்ணுக்குத் தெரியாதவர். அது எந்த ரூபத்தில் வரும் என்று யாருக்கும் தெரியாது .நீங்கள் எத்தனை கோடி கொள்ளை அடித்து வைத்திருந்தாலும் அதை உங்களால்,உங்கள் குடும்பத்தால், அனுபவிக்க முடியுமா? அதை அனுபவிக்க அவருடைய அனுமதி வேண்டும்.அதனால் அவர் கொடுத்தால் மட்டும்தான் ,அதையும் நீங்கள் அனுபவிக்க முடியும் .அது மட்டுமல்ல, இந்த மக்கள் செய்த தவறு, தகுதியில்லாத அரசியல் கட்சிகளில் யாரை நிற்க வைத்தாலும், வாக்களித்து இன்று துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். புலம்புவதில் பயனில்லை, நீங்கள் வாக்களிக்கும் முன் ஒரு முறைக்கு நூறு முறை சிந்தித்து வாக்களித்து இருக்க வேண்டும் .
ஒரு வேலை அவர்களுடைய அதிர்ஷ்டம், இந்த மக்களுக்கு துரதிஷ்டமாக கூட இருந்திருக்கலாம். எல்லாம் தெரிந்த கடவுளுக்கு இதுவும் தெரியும். அதனால் இந்த கொடுமைக்கு எல்லாம் இறை சக்திக்கு பதில் சொல்லி தான் ஒவ்வொருவரும் ஆக வேண்டும். இப்போது இயற்கை வடிவில் மழை, வெள்ளம், புயல், நிலநடுக்கம், கொரோனா போன்ற கொடிய நோய் இவை எல்லாம் வந்து இந்த மக்களுக்கு உணர்த்திவிட்ட போகிறது.
அப்போதும் இவர்கள் திருந்தவில்லை என்றால்! இவர்கள் இருந்து பயனில்லை. வாழ்ந்தும் பயனில்லை. அதற்குரிய தண்டனை இந்த உலகத்தை வழிநடத்தும் சித்தர்கள், மகான்கள் கண்டிப்பாக இவர்களுக்கு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் .
ஆசிரியர்.