மே 22, 2024 • Makkal Adhikaram
இந்தியாவின் எதிர்க்கட்சிகளான ராகுல் காந்தி, ஸ்டாலின் ,ஜெகன்மோகன் ரெட்டி, பினராய் விஜயன், மம்தா மற்றும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் நாட்டில் ஆட்சி மாற்றத்தை மக்கள் ஏற்படுத்துவார்கள் என்று எவ்வளவோ பொய் பிரச்சாரங்களை மக்களிடம் இந்த ஊடகங்கள் மூலம் பேசிப் பார்த்தார்கள் பயனில்லை.
இதுவே இந்த கார்ப்பரேட் மீடியாக்களுக்கு மக்கள் கொடுக்கின்ற ஒரு சம்மட்டி அடிதான் என்று எங்களை போன்ற சாமானிய பத்திரிகைகளும் ,சோசியல் மீடியாக்களும், மக்களுக்கு உண்மையை தெளிவுபடுத்தி இருக்கிறது. அதில் பல பொய்கள் இவர்களுக்கு வேண்டிய சோசியம் மீடியாக்கள் சொன்னாலும் மக்கள் எது உண்மை? என்பதை பெரும்பான்மை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அதுதான் இந்த தேர்தல் வெற்றியின் ரகசியம்.
மேலும், நாட்டை வழிநடத்திச் செல்லக்கூடிய ஒரு தலைவன் பிரதமர் மோடி. மோடி மீது இவர்கள் சொன்ன குற்றச்சாட்டுகள், மக்கள் நம்ப தயாராக இல்லை. ஆனால், இவர்களுடைய ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டுள்ளது .அவை நீதிமன்றம் வரை கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் எதை நம்புவார்கள்? மேலும், மக்கள் இத்தனை ஆண்டுகால ஆட்சியில் ஸ்டாலின் தமிழ்நாட்டில் செய்தது என்ன? ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி செய்தது என்ன ?கேரளாவில் பினராய் விஜயன் செய்தது என்ன ?டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஊழல் குற்றத்திற்காக சிறையில் இருந்து வருகிறார்.
இதுபோன்று, நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளின் ஊழல் குற்றச்சாட்டுகள் மக்கள் மனதில் எங்களைப் போன்ற சாமானிய பத்திரிகைகளும், சோசியல் மீடியாக்களும் கொண்டு சென்றுள்ளது. இவர்களுக்கு வேண்டிய கார்ப்பரேட் மீடியாக்கள் என்னதான், இவர்களை நிரபராதிகள் என்று மக்களிடம் கொண்டு சென்றாலும், அது எடுபடவில்லை. மேலும், தமிழ்நாட்டிற்கு தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோர் மீண்டும் 2026 சட்டமன்ற தேர்தலுக்காக தன்னுடைய மருமகன் சபரீசன் மூலம் ஸ்டாலின் ஒப்பந்தம் போட்டுள்ளார். முதலில் ஓகே சொன்ன பிரசாந்த் கிஷோர். இனி திமுகவிற்கு வாய்ப்பே இல்லை என்று ஸ்டாலினிடம் போன் போட்டு சொல்லிவிட்டதாக தகவல்.அதன் பிறகு தான் ஸ்டாலின் அமைதியாகி இருக்கிறார?
தவிர, மக்கள் அதிகாரத்தில் இதற்கு முன்னரே பிரசாந்த் கிஷோர் போன்று 100 பிரசாந்த் கிஷோர் வந்தால் கூட, தமிழ்நாட்டில் திமுகவை ஜெயிக்க வைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளேன் .அப்போதெல்லாம் நினைத்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு பத்திரிகை இல்லை என்று, ஆனால், உண்மை எந்த பத்திரிக்கையில் வந்தாலும், உண்மைதான் என்பதை இப்போது பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் புரிந்து கொள்வார்கள்.மேலும், எங்களுக்கெல்லாம் அரசின் சலுகை, விளம்பரங்கள் கொடுக்கப்பட்டால், இன்னும் நாங்கள் மக்களுக்கான பணியை பத்திரிக்கை துறையில் சிறப்பாக செயல்படுத்துவோம். அதற்கு தகுதியான பத்திரிக்கை மக்கள் அதிகாரம் என்பதை கொடுக்கப்பட்ட செய்திகள் மூலம் செய்தி துறை தெரிந்து கொள்ளலாம் .
தவிர.தகுதியற்ற பத்திரிகைகளுக்கு கொடுத்து மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிக்கும் போது, எங்களுக்கான வாய்ப்புகள் அரசியல் அதிகாரத்தால் அவை மறுக்கப்படும் போது நாங்கள் நீதிமன்றத்தை நாடுவது தவிர ,வேறு வழியில்லை. நானும் தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மேலாக மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், பத்திரிக்கை துறையின் அவலங்களையும், எங்களுக்கு கொடுக்க வேண்டிய சலுகை, விளம்பரங்கள் பற்றியும் எடுத்துச் சொல்லி, எந்த நன்மையும் ஏற்படவில்லை. அதனால், எங்களுக்கு இந்த அரசாங்கத்தால் எந்த நன்மையும் கிடைக்காது என்று தீர்மானித்து தான் தமிழ்நாடு சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் எமது மூத்த வழக்கறிஞர் முத்துசாமி மத்திய, மாநில அரசுகளுக்கு லீகல் நோட்டீஸ் அனுப்பி உள்ளார் .
இது பத்திரிக்கை துறையில் பாதிக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கும், உழைக்கின்ற செய்தியாளர்களுக்கும், சாமானிய பத்திரிகைகளுக்கும், சமூக நலன் சார்ந்த பத்திரிகைகளுக்கும், நடுநிலை பத்திரிகைகளுக்கும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. மேலும்,,இது பத்திரிகை துறையில் சமூக நீதிக்கான மாற்றம். இந்த மாற்றத்தின் மூலம் மக்களுக்கு உண்மைகள் கொண்டு செல்ல முடியும்,.மக்களின் வரிபணம் கோடிக்கணக்கில் வீணடிக்கப்படுவது தவிர்க்க முடியும். ஆட்சியாளர்களின் பொய்களை,அரசியல் கட்சிகளின் பொய்களை, சொல்பவர்களுக்கு சலுகை, விளம்பரங்கள் என்பதை எக்காலத்திலும் ஏற்க முடியாது. அதை தான் மக்கள் அதிகாரம் தொடர்ந்து வலியுறுத்துகிறது.இதையெல்லாம் சர்குலேஷன் என்று பத்திரிக்கையின் விதிமுறையில் செய்தித்துறை ஏற்றுக் கொள்வது சரியா? என்பதை நீதிமன்றம் தான் இனி இதற்கு தீர்வு ஏற்படுத்த வேண்டும் .
தவிர, இந்த கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகள் அரசியல் அதிகாரம் இருப்பவர்கள் இடம் இந்த பத்திரிகைகளுக்கு சலுகை, விளம்பரங்கள் கொடுத்தால் எங்கள் வியாபாரம் நடக்காது என்பதை மறைமுகமாக தொடர்ந்து வலியுறுத்துவதாக தகவல் .தினசரி பத்திரிக்கையில் எத்தனை முக்கியத்துவமான செய்திகள் மக்களுக்கு இடம்பெறுகிறது ?என்பதை செய்தித் துறை தெரிவிக்க முடியுமா?அது இல்லாத பட்சத்தில் யார் எதை பேசினாலும், அதனால் மக்களுக்கு என்ன பயன்? என்று தெரியாமல் செய்திகளாக போட்டுக் கொண்டிருந்தால், பெரிய பத்திரிக்கை என்று எங்களைப் போன்றோர் ஏற்க முடியாது.எனவே, பெரிய பத்திரிக்கை என்று சிறிய செய்திகளை மக்களுக்கு கொடுத்துக் கொண்டிருந்தால், அதையும் ஏற்க முடியாது.மேலும்,
தினம் மக்களுக்கு முக்கியத்துவமான செய்திகள், தினசரி பத்திரிகைகளில் எத்தனை வெளியிட்டு வருகிறது? இதை மத்திய ,மாநில செய்தி துறை கவனித்ததுண்டா? அரசியல் கட்சியினருக்கு தான் அது புரியவில்லை. இவர்கள் பழைய பஞ்சாங்கத்தின் அடிப்படையில் ஸ்டாலின் ஆட்சி காமராஜர் ஆட்சியை போல் இருக்கிறது என்று காங்கிரஸ் கட்சியினரோ அல்லது திமுக கட்சியினரோ அல்லது பாஜக மாநில பொதுச் செயலாளர் கரு நாகராஜன் பேசுவது போல் பேசிக் கொண்டு, வரும் பொய்களை இந்த கார்ப்பரேட் ஊடகங்கள் பத்திரிக்கையில் எழுதிக் கொண்டிருந்தால் இன்றைய இளைய தலைமுறைகள் அதை ஒரு காலம் ஏற்றுக் கொள்ளாது.
மேலும், அந்த காலத்தில் கருணாநிதி மேடை பேச்சுக்கும் ,அண்ணா மேடைப்பேச்சுக்கும் கூத்து பார்ப்பது போல் கூட்டங்கள் இருக்கும். இப்போது அந்த கூட்டத்தை கூட்டுவதற்கு அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து, மது பாட்டில்கள் கொடுத்து, கூட்டிச் செல்கிறார்கள். இதிலிருந்து என்ன மக்களும், அரசியல் கட்சியினரும் தெரிந்து கொள்ள வேண்டியது? என்னவென்றால் அந்த காலத்தில் படிப்பறிவு இல்லாத மக்கள் நம்பி விடுவார்கள். இந்த காலத்தில் இளைய தலைமுறைகள் நம்பாது. நம்புகிறவர்கள் அனைவரும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களாக தான் இருப்பார்கள் .
அதனால், இப்போது அரசியலில் மக்களுக்கு எப்படிப்பட்ட நிர்வாகத்தை நீங்கள் கொடுக்கிறீர்கள்? என்னென்ன திட்டங்கள் மக்களுக்கான திட்டங்கள்? இதை வைத்து தான் மக்கள் பேசுவார்களே ஒழிய ,இனி இந்த கார்ப்பரேட் மீடியாக்களை நம்பி, எதிர்க்கட்சிகள் அரசியல் செய்தால் மக்கள் ஏமாற மாட்டார்கள் என்பதை உறுதியாக இந்த தேர்தல் முடிவு உங்களுக்கு புரிய வைக்கும் .