நவம்பர் 22, 2024 • Makkal Adhikaram
இளைய சமுதாயம் இன்று சினிமா வீடியோ நயன்தாரா ,தனுஷ், சிவகார்த்திகேயன், சந்தானம் நடிகை நடிகர்களின் வீடியோ என்றால், முதலில் பார்ப்பார்கள் . அது அவர்களுடைய இளமைப்பருவம் அப்படித்தான் இருக்கும். அதில் மாற்றுக் கருத்து இல்லை .
இருப்பினும், இந்த இளைய சமுதாயம் உங்கள் வாழ்க்கைக்கு முக்கியமானது அரசியல்1 உங்கள் பொழுதுபோக்கு சினிமா !ஆனால், நாட்டில் தற்போது சினிமாவுக்குள் அரசியல் வந்துவிட்டது .அரசியலுக்கு வெளியே இருக்க வேண்டிய சினிமா !சினிமாவுக்குள் அரசியல்வாதிகள் வர ஆரம்பித்திருக்கிறார்கள். இது உங்களுடைய அறியாமை அரசியல்.
அரசியல் வேறு, சினிமா வேறு, சினிமா நடிப்பு, அரசியலில் நடிக்க முடியாது. அப்படி நடித்தால் ,அங்கே ஏமாற்றம் தான் மிஞ்சும். அதுதான் இன்றைய அரசியலாக இருந்து வருகிறது. பேச்சும் ,நடிப்பும் ,சொல்லும், செயலும் உண்மை இருக்காது. சினிமா காட்சிகளில் டயலாக் பேசி, நடித்துவிட்டு போகலாம்.உதாரணத்திற்கு அங்கே பிறருக்கு பல தேவையான பொருட்களை கொடுப்பது போல் காட்சிகள் இருக்கும். அந்த காட்சிகளை தான் பார்க்க முடியும் .ஆனால், வயிறு நிறையாது. அதுதான் இன்றைய அரசியல் .
அதனால்தான் தகுதியானவர்கள் இங்கே வர முடியவில்லை. நேற்று நடந்த அதிமுக கூட்டத்தில் தொண்டன் என்று சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொள்கிறார்கள். எதற்கு சேவை செய்ய வந்தவர்கள்? எதற்கு அடித்துக் கொள்வார்கள்? மக்களுக்காக பணி செய்ய வந்தவர்கள் எதற்காக அடித்துக் கொள்வார்கள்? இதை இளைய தலைமுறை சிந்திக்க வேண்டும். யாருமே செய்ய மாட்டார்கள். நான் செய்வதை நீ செய்தால் வரவேற்பார்கள் .இங்கே சேவை இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிந்த உண்மை. அதனால்தான் அடித்துக் கொள்கிறார்கள்.
அவர்களின் சுயநல அரசியலுக்காக ,அவர்களை வளமாக்கிக் கொள்ள அல்லது பலப்படுத்திக் கொள்ள அடித்துக் கொள்கிறார்கள். இதற்கு பெயர் தொண்டனா?இதையும் 50 ஆண்டு காலமாக பத்திரிகைகள், தொலைக்காட்சிகள் சொல்வதை எழுதிக் கொண்டு,காட்டிக்கொண்டு, பேசிக்கொண்டு, தன்னை மூத்த பத்திரிகையாளர் என்று ஏமாற்றிக் கொண்டு, இதுவும் ஒரு நாடக மேடை தான்.
தொண்டன் என்றால் எப்படி இருக்க வேண்டும்? அவன் தொண்டு உள்ளதோடு இருக்க வேண்டும் .அவன் தான் தொண்டன். கத்தியை தூக்கிக் கொண்டு வருபவன், கொம்பை தூக்கிக் கொண்டு வருபவன் ,அசிங்கமான வார்த்தைகளில் பேசுபவன் ,அவனெல்லாம் தொண்டனா? இப்படிதான், தமிழக மக்கள் இந்த கட்சிக்காரர்களை நம்பி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள். இவர்கள் எந்த கட்சிக்குப் போனாலும், அங்கே தொண்டனாகி விடுவார்கள் .
சமூகத்தில் இந்த ஊடகங்கள் அவர்களுடைய பொய்களை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அந்த கட்சி பத்திரிகைகளும்,சர்குலேஷன் என்று இன்றுவரை மத்திய ,மாநில அரசின் செய்தித்துறை அதற்கு சலுகை விளம்பரங்கள் வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறது .அறியாமையால் நீயும் அதை படித்து அவனை சமூகத் தொண்டன் என்று நினைத்துக் கொண்டிருக்கிறாய். அவன் சமூகத் தொண்டன் அல்ல, இந்த சமூகத்தை சுரண்ட வந்த தொண்டன் புரியவில்லையா?
இன்னும் புரியும்படி சொல்கிறேன் .இந்த சமூகத்தில் உள்ள பொது சொத்துக்களை திருட வந்த, கொள்ளை அடிக்க வந்த தொண்டன். இப்பவாவது நன்றாக புரிந்து கொள். அதனால், தொண்டன் என்றால்! எத்தனை பேர்? தொண்டு உள்ளதோடு இருக்கிறானோ ,அவன் தான் தொண்டன். இவர்கள் எல்லாம் தொண்டு என்ற பெயரில் சமூகத்தை ஏமாற்ற வந்தவர்கள் . அதனால், இனியாவது தொண்டனுக்கும் ,இந்த சமூகத்தை கொள்ளையடிப்பவனுக்கும், அர்த்தம் தெரியாமல், வித்தியாசம் தெரியாமல், வாழாதே .
அதேபோல், அரசியல் வரலாறு தெரியாமல் வாழ்வது நீ வீண். ஒரு சிலர் இந்த வரலாற்று உண்மைகளை மேடையிலே பேசுகிறார்கள். அப்படி பேசிய ஒரு உண்மை பேச்சாளரின் கருத்து உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்று. அதை இளைய சமுதாயம் நிச்சயம் தெரிந்துக் கொள்வது அவசியம் .