தேனி மாவட்டத்தில் மிகப்பெரிய கனிம வள கொள்ளை கேரளாவுக்கு விற்பனையாகி வருகிறது .இது பற்றி அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கிறார்கள். புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. அங்கே மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக உள்ளது. ஆனால் ,கனிம வள கொள்ளை இன்றும், ஏழை எளிய நடுத்தர மக்களை பயமுறுத்தி ,அச்சுறுத்தும், வகையில் தான் இருந்து வருகிறது.பள்ளி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை, இந்த லாரிகள் வேகம், பயன்படுத்தும் ஒளி பெருக்கிகள், உயிருக்கு அச்சுறுத்தலை ஒரு பக்கம் ஏற்படுத்தி வருகிறது.
மேலும் ,நூற்றுக்கணக்கான இடத்தில் இந்த கனிம வள கொள்ளை நடைபெற்று வருகிறது. நாட்டில் இயற்கையை அழித்தால், அது மனித குலத்திற்கு பெரும் அழிவை ஏற்படுத்தும் என்பதற்கு தற்போது நடந்துள்ள மழை வெள்ள பாதிப்பு மற்றும் அதிக வெப்பம் என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்தும் அதைப்பற்றி ஆட்சியாளர்கள் அரசியல் கட்சிகள் கண்டு கொள்வதில்லை. மேலும்
தமிழ்நாட்டில் கனிம வள கொள்ளை எப்படி நடைபெறுகிறது என்பதற்கு சமூக வலைதளத்தில் வெளிவந்துள்ள வீடியோ
கனிம வள கொள்ளை தமிழ்நாட்டில் அதிமுக, திமுக ஆட்சியில் எப்படி நடைபெற்று வருகிறது? அதற்கு எவ்வளவு அதிகாரிகள் லஞ்சம் வாங்குகிறார்கள்? எவ்வளவு பேர் ஆதனால் பாதிக்கப்படுகிறார்கள்? இந்த ஊழல் மிகப்பெரிய ஊழல். கோடிக்கணக்கில் ஊழலின் உச்சம் தொட்டதால் தான், இன்று அமலாக்கத்துறை ,சிபிஐ, வருமானவரித்துறை, இதையெல்லாம் கணக்கெடுக்க ஆரம்பித்து விட்டது.
மேலும், கனிம வளக் கொள்ளை நடத்துவதால், சுற்றுச்சூழல் எவ்வாறு பாதிக்கிறது? என்பதை பற்றி இதுவரை எந்த அதிகாரிகளும், அரசியல் கட்சியினரும் கேள்வி கேட்கவில்லை. போராடவில்லை. அப்படியே கேட்டாலும், அதில் அவர்களுக்கான பங்கு கிடைக்கவில்லை என்று தான் போராடுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் கனிம வள கொள்ளை அரசியல்.
இது மட்டுமல்ல, இந்த கனிம வளக் கொள்ளையால் இன்று இயற்கையின் பேரிடர் என்று சொல்கிறார்களே, அவையெல்லாம் வருவதற்கு இதுதான் முக்கிய காரணம் என்பது எவ்வளவு மக்களுக்கு தெரியும்? இதற்கு முன்னால் இயற்கை பேரிடர் என்பது இல்லை. அதிகமான வெப்பம், அதிகமான மழை, வெள்ளம், புயல் இவை எல்லாம் வரும்போது, புயலுக்கு ஒவ்வொரு பெயரை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட இயற்கையின் சீற்றங்கள் இனி அடிக்கடி வரும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்தும் , அதற்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஒரு பக்கம் தொழிற்சாலைகளின் நச்சுப் புகை, காற்று மண்டலத்தை பாதிக்கிறது. இன்னொரு பக்கம் பெட்ரோல், டீசல் வண்டி வாகனங்களால் ஏற்படும் புகை, காற்று மண்டலத்தை பாதிக்கிறது.
இதன் எதிரொலி நாட்டில் விவசாயம் பாதிக்கிறது. மரம்,செடி, கொடிகள் பாதிக்கிறது.ஓசோன் படலத்தில் தொடர்ந்து ஓட்டைகள் விழுவதற்கு இதுவே முக்கிய காரணம். இயற்கையை மனிதன் அழித்தால், மனிதனை இயற்கை அழித்து விடும்.காடுகளை, மலைகளை, அழித்துக் கொண்டே மனிதன் வாழ முடியாது. அது பெரும் அழிவை நோக்கி மக்களின் வாழ்க்கை பயணம் சென்று கொண்டிருக்கிறது. இது பற்றி எந்த பத்திரிக்கை, தொலைக்காட்சியும் செய்திகள் வெளியிடவில்லை.
அப்படியாக இருந்தாலும் ,கடமைக்கு வந்த செய்தியாக தான் இருக்கும் .மக்கள் அதிகாரம் தொடர்ந்து இது பற்றி செய்திகளை வெளியிட்டு வருகிறது. மேலும், அரசியல் லாபங்களுக்காக, அரசியல் கட்சி லாபங்களுக்காக இயற்கையை அழித்தால் ,இனி நீதிமன்றம் அதை பாதுகாக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதில் ஊழல் என்பது அது ஒரு தனி செயல் .ஆனால், அளவுக்கு அதிகமாக கொள்ளைகளை நடத்தி, பொதுமக்களின் போராட்டங்களை அலட்சியப்படுத்தி, காவல்துறை அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு, சமூக நலன் சார்ந்த பத்திரிகையாளர்கள் மீது பொய் வழக்கு போட்டு, அதுமட்டுமல்ல, நேர்மையான அதிகாரிகளை கொலை செய்வது, மிரட்டுவது இதையெல்லாம் நடத்தி தான் இந்த கனிமவள கொள்ளை நடைபெறுகிறது .
இப்படிப்பட்ட கனிம வள கொள்ளைக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு எப்படி? எல்லாம் இயற்கையின் பேரிடராக மாறுகிறது? என்பதை சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் எச்சரித்தும் ,இது தொடர்வது அரசியல் அதிகாரம். இது தவறான ஆட்சி நிர்வாகத்தின் அதிகாரமாக இருப்பதால்,நீதிமன்றம் தாமாக முன்வந்து காப்பாற்ற வேண்டியது, தற்போது நீதிமன்றத்தின் மிகப்பெரிய பொறுப்பு என்பதை மக்கள் அதிகாரம் சார்பில், மக்கள் நலன் சார்ந்து இச்செய்தியை வெளியிடுகிறேன் . இது இளைய தலைமுறைகளின் வாழ்க்கையை நிச்சயம் பாதிக்கும். மேலும்,
இது பற்றி இயற்கை விவசாயி மற்றும் விஞ்ஞானி நம்மாழ்வார் சொன்ன கருத்து என்ன ?
இனி நமக்கு பருவமழை கிடையாது – புயல்கள் மட்டுமே – ஏன்?
இனி பருவ மழை இல்லை. புயல் மழை தான் என்று அன்றே கூறியவர் இயற்கை வேளாண் விஞ்ஞானி ஐயா நம்மாழ்வார் அதாவது,மேற்குத் தொடர்ச்சி மலை 3 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது. அதில் 300 அடி உயரத்திற்கு மரங்கள் எல்லாம் இருக்கின்றன. அவை அரபிக் கடலிலிருந்து வருகிற ஈரக் காற்றையெல்லாம் மேகமாக மாற்றி, மழையாக கீழே இறக்குகின்றன.
அந்த மழை நீர் பூமியில் இறங்கி பின்னர் ஆற்று நீராக ஓடுகிறது. அந்த மலையில் உள்ள உயரமான மரங்களையெல்லாம் நீங்கள் வெட்டிவிட்டு, இடுப்பளவு உயரம் உள்ள ‘டீ’ தோட்டம் போட்டுவிட்டீர்கள். உருளைக்கிழங்கு, முட்டைக்கோஸ், காலிஃப்ளவர் பயிர் செய்து கொண்டிருக்கிறீர்கள். அதனுடைய விளைவு, அரபிக்கடலிலிருந்து வரக்கூடிய ஈரக் காற்றை மேகமாக மாற்ற முடியவில்லை. “
அப்படியே தப்பித் தவறி மழை பெய்து ஓடுகிற தண்ணீரை தடுத்து நிறுத்த முடியவில்லை. அதனால், எங்கு பார்த்தாலும் வெள்ளம். ஆக, இனி உங்களுக்கு புயல் மழைதான் வரும். பருவமழைக்கு வாய்ப்பே இல்லை’ என்றார். “
அவர் சொன்ன நாளிலிருந்து உற்று கவனித்தால், உண்மை பொது மக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும், சுற்றுச்சூழல் ஆய்வாளர்களுக்கும், விஞ்ஞானிகளுக்கும், இந்த உண்மை புரிந்து இருக்கும். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
ஆசிரியர் .