நாட்டில் 2000 ரூபாய் எங்கே இருக்கிறது? என்று தேட வேண்டி உள்ளது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இந்த பணத்தை எல்லாம் என்ன செய்திருக்கிறார்கள் ?அப்படி என்றால் இந்த 2000 ரூபாய் புழக்கத்தில் இருப்பது கள்ள நோட்டா? என்ற சந்தேகத்தை ரிசர்வ் வங்கி அறிவித்ததில் இருந்து பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.
இந்த 2000 ரூபாய் செப்டம்பர் 30 வரை தான் செல்லும் .அதற்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றி விட வேண்டும். அப்போது வங்கிகளில் அந்த கள்ள நோட்டுகள் வந்தால் கண்டுபிடித்து விடுவார்கள். மேலும் அது எங்கிருந்து வந்தது? யார் அதை மாற்றுகிறார்கள்? என்ற புள்ளி விவரத்தை வங்கிகளில் இருந்து சிபிஐ, உளவுத்துறை கணக்கெடுத்து விடுவார்கள். அதனால் கள்ள நோட்டு வைத்திருப்பவர்கள், பிளாக் மணி வைத்திருப்பவர்கள், மாட்டிக்கொண்டு திருடனுக்கு தேள் கொட்டியது போல் முழித்துக் கொண்டிருப்பார்கள்.
இவர்கள் என்னதான் கள்ள நோட்டு பழக்கத்தை கொண்டு வந்து நாட்டில் பொருளாதார சீர்குலைவை ஏற்படுத்த வேண்டும் என்று நினைத்தால், அதற்குப் பிரதமர் மோடி ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார். ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை எளிதில் வெளியிட முடியாது. அதற்கான தகுந்த ஆதாரங்கள் அவர்களுக்கு கிடைத்திருக்கும்.
மேலும்,இந்த பணம் இந்தியாவில் எத்தனை கோடி புழக்கத்தில் உள்ளது? வெளிநாடுகளில் எவ்வளவு பழக்கத்தில் உள்ளது? இதில் கருப்பு பணம் எத்தனை கோடி உள்ளது? இதையெல்லாம் ஒரு புள்ளிவிவரம் எடுத்து தான் ரிசர்வ் வங்கி, இப்படிப்பட்ட ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கும்.
இது இந்தியாவின் பொருளாதாரத்தை பாதுகாக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றுதான் இருக்குமே தவிர, வேறு எந்த காரணத்திற்கும் ரிசர்வ் வங்கி இந்த முடிவை எடுத்திருக்க முடியாது. இதனால் ஏழை நடுத்தர மக்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை.